Crop

இயற்கை கத்திரி சாகுபடி

சோலனேசியே என்பது கத்திரியின் குடும்பமாகும், இது ஒரு பொதுவான வெப்பமண்டல காய்கறி ஆகும். இது இந்தியாவிலும் உலக அளவிலும் ஆண்டு முழுவதும் வளர்க்கப்படுகிறது. பூச்சிகள், நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகள் கத்திரிக்காய் விளைச்சலில் இடையூராக இருப்பவையாகும்.

கத்தரி சாகுபடிக்கு குறைந்த பராமரிப்பு மற்றும் பொதுவாக பகலில் 26° மற்றும் இரவில் 18° நல்ல மகசூலுக்கு ஏற்றதாகும், மேலும் அதிக விளைச்சலுக்கு அதிக வெப்பநிலை சிறந்தது. 

ஒவ்வொரு வகை கத்தரி சாகுபடியிலும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து பொதுவான ஊட்டச்சத்துக்களாக திகழ்கிறது. பயிர் சுழற்சி, மண்புழு உரம், தொழு உரம் மற்றும் உயிரியல் பூச்சி கட்டுப்பாடு ஆகியவை இயற்கை கத்தரி சாகுபடியின் நுட்பங்கள்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

  • கத்தரி சாகுபடிக்கு நீடித்த வெப்பமான வானிலை ஏற்றது. கத்தரி சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் முழுமையான சூரிய ஒளி தேவை.13-21 டிகிரி வெப்பநிலை பொருத்தமானது. கரிமப் பொருட்களுடன் நன்கு வடிகட்டிய மண் உகந்தவை.
  • கத்தரி செடிகளை விதைக்க சிறந்த நேரம் மழை-கோடை காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகும்.
  • மணல் மற்றும் களிமண் கத்தரிக்கு அதிக மகசூலை உற்பத்தி செய்ய உதவுகிறது.
  • கரிமப் பொருட்களுடன் கலந்த மண்ணின்  கார-அமிலத்தன்மை 6.5-7.5 இருப்பது கத்திரி சாகுபடிக்கு ஏற்றதாகும்.

விதைப்பதற்கும் நடவிற்கும் ஏற்ற பருவம்

டிசம்பர் – ஜனவரி மற்றும் மே – ஜீன்

விதை அளவு

150-170 கிராம் ஒரு ஏக்கர்.

நடவு முறை

  • வயலில் நடவு செய்வதற்கு நாற்றுகளை வளர்ப்பதற்காக கத்தரி விதைகளை நாற்றங்கால் படுக்கையில் விதைக்கப்படுகின்றன.
  • மணல் மண்ணில், தட்டையான படுக்கைகள் அமைக்கப்பட்டு விதைகளை விதைக்கப்படுகின்றன, மேலும் கனமான சேற்றில் நீர் தேங்குவதைத் தவிர்க்க உயர்த்தப்பட்ட பாத்திகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் விதையின் முளைப்புத்திறன் மற்றும் நாற்றுக்கள் சேதம் ஆடைவதை குறைக்கலாம்.
  • நீர்ப்பாசனம் மற்றும் காற்று சுழற்சிக்கு இரண்டு பாத்திகளுக்கு இடையே உள்ள தூரம் 70 செ.மீ ஆக இருக்க வேண்டும், மேலும் 7.2 x 1.2 மீ & 10-15 செ.மீ உயரம் கத்தரி சாகுபடிக்கு ஏற்ற அளவீடு ஆகும்.
  • பாவிஸ்டின் என்ற மருந்தை 2 கிராம்/ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து மண்ணை நினைக்கவேண்டும். இது வேர் மூலம் வரக்கூடிய பூஞ்சை நோயினைக் கட்டுப்படுத்தும்.
  • நாற்றுகளை 2-3 அடி இடைவெளியில் இரட்டை வரிசையில் நடவு செய்யவும் அல்லது உயர்த்தப்பட்ட பாத்திகளில் இருந்து 18-24 அங்குல தூரத்தில் அமைக்கவும்.
  • வயலில் களைகளை கட்டுப்படுத்த நீங்கள் உயிர் மூடாக்கு அல்லது கரும்பு சோவைகளை கொண்டு மூடாக்காக பயன்படுத்தலாம். இது உங்கள் வயலில் உள்ள மண்ணின் தரத்தை உயர்த்தி தண்ணீர் தேவையை குறைக்கும்.
  • கத்திரி நாற்றுக்களை 4-6 வாரம் வயதில் நடவு செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்

  • கத்தரிக்காய் கலப்பின வகைகளின் முழுமையான வளர்ச்சிக்கு, கத்தரி சாகுபடியில் உகந்த நீர் வழங்குவது மிக முக்கியம். கோடையில், 3-4 நாட்களிலும், குளிர்காலத்தில் 7-12 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம் செய்வது விரும்பத்தக்கது.
  • ஆரம்ப கட்டத்தில் அளவுக்கு மீறிய நீர்ப்பாசனம் செய்ய வேண்டாம். இல்லையெனில் தண்டு அழுகல் நோய் வரக்கூடும்.
  • குறைந்த அளவு நீர்ப்பாசனம் மற்றும் அதிக நீர்ப்பாசனம் ஆகியவற்றைத் தவிர்க்கவும். வயலில் மிதமான ஈரப்பதத்தை கடைபிடிக்கவும். அதிக மகசூல் தரும் கத்தரிக்கு நீர்ப்பாசனம் ஒரு முக்கிய அம்சமாகும்.

உரமேலாண்மை

  • நீங்கள் கடைசி உழவின்போது  நன்கு மக்கிய உரம் 30 டன் இடவேண்டும்.
  • கத்திரி நடவு செய்த 15 நாட்கள் கழித்து வேப்பம்புண்ணாக்கு 50 கிலோ மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு  50 கிலோ மற்றும் கடலை புண்ணாக்கு 50 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் கலந்து கொடுக்கவும்.
  • நடவு செய்த 30வது நாட்களில் மண்புழு உரம் ஒரு செடிக்கு 150 கிராம் என்ற அளவில் கொடுக்கவும்.
  • மேலும் பாசனத்தில் உயிர் உரமான அசோஸ்பைரில்லம் 5 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் கலந்து கத்திரி செடிகளுக்கு கொடுக்கலாம்.

பயிர்பாதுகாப்பு

  • நடவு செய்த பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை வேப்பெண்ணை 30 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். இது கத்திரி செடியில் வெள்ளை ஈக்கள் மற்றும் அசுவினியின் தாக்குதலை குறைக்கும்.
  • கத்தரியில் வரும் குருத்து புழுக்கள் மற்றும் காய்கள் துளைக்கும் புழுக்களை கட்டுப்படுத்த பிவேரியா பேசியான எனப்படும் உயிரி பூச்சி கொல்லி மருந்தை தெளிக்கலாம்.
  • இஞ்சி, மிளகாய் மற்றும் பூண்டு கரைசலை தயாரித்து கத்திரி செடிகளுக்கு தெளிக்கலாம். இது புழுக்களை கட்டுப்படுத்தும்.

அறுவடை

  • செடியை நடவு செய்த 50 நாட்களிலிருந்து அறுவடை துவங்கும். காய்கள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்யவேண்டும்.
  • மேலும் காய்களை 5 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் போது காய் காம்பின் நீளம் இருக்குமாறு அறவடை செய்யவேண்டும்.

 

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024