Crop

உருளைக்கிழங்கு சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் செய்வது எப்படி?

இந்தியாவில் உருளைக்கிழங்கு கடந்த 300 வருடங்களாகப் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 16 மில்லியன் டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2019-2020ஆம் ஆண்டு 500 கோடி ரூபாய் மதிப்பிலான உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக உருளைக்கிழங்கு அனைத்து இடங்களிலும் சாகுபடி செய்யலாம். ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள்  இந்தியாவில் உருளைக்கிழங்கு விளையும் முக்கிய மாநிலங்கள் ஆகும்.

சிரம நிலை:  கடினம்

விதைகள் தேர்வு

பொதுவாக உருளைக்கிழங்கை விதை கிழங்கைப் பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. குஃப்ரி சிந்துரி, குஃப்ரி சந்திரமுகி, குஃப்ரி ஜோதி, குஃப்ரி லவ்கர், குஃப்ரி பாட்ஷா, குஃப்ரி பஹர், குஃப்ரி லலிமா, குஃப்ரி ஜவஹர், குஃப்ரி சட்லெஜ், குஃப்ரி அசோகா, குஃப்ரி புக்ராஜ், குஃப்ரி சிப்சோனா மற்றும் குஃப்ரி ஆனந்த் ஆகியவை உருளைக்கிழங்கின் சிறந்த ரகங்களாகும்.  மேலும் ருசெட், வட்ட வெள்ளை, நீண்ட வெள்ளை, வட்ட சிவப்பு, மஞ்சள் சதை, நீலம் மற்றும் ஊதா ஆகியவை வெளிநாட்டு ரகங்களாகும்.

உருளைக்கிழங்கு விதை நேர்த்தி

உருளைக்கிழங்கிற்கு விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்க விதை நேர்த்தி செய்யப்படுகிறது. அதாவது கருப்பு தோல் நோய், அழுகல் நோய் மற்றும் தேமல் நோய் போன்றவற்றை விதை நேர்த்தி செய்வதனால் கட்டுப்படுத்தலாம். விதைக்கிழங்கை முழுமையாகவோ அல்லது பாதியாக வெட்டியோ நேர்த்தி செய்யலாம். இதனை காப்டான் என்ற மருந்தை 2 கிராம்/ ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து நேர்த்தி செய்யலாம். மேலும் வெட்டிய கிழங்குகளை 6 மணி நேரத்திற்குள் நேர்த்தி செய்யவேண்டும். மேலும் விதை கிழங்குகளை ஹ்யூமிக் ஆசிட் அல்லது இயற்கை வளர்ச்சி ஊக்கிகளுடன் நேர்த்தி செய்வதனால், கிழங்குகள் விரைவாகவும் நன்கு செழிப்பாகவும் வளர உதவும்.

உருளைக்கிழங்கு நிலம் தயாரித்தல்

ஏற்ற மண் வகை:

காரத்தன்மை மற்றும் உப்பு மண்ணைத் தவிர அனைத்து மண்ணிலும் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யலாம். ஆழமான நன்கு உழப்பட்ட நிலத்தில் உருளைக்கிழங்கு அதிக மகசூல் தரும். வளமான கரிமப் பொருட்கள், நல்ல வடிகால் வசதி மற்றும் நல்ல காற்றோட்டம் கொண்ட மணல் களிமண் மண் உருளைக்கிழங்கு சாகுபடிக்கு மிகவும் பொருத்தமானது.

மண்ணின் கார-அமிலத்தன்மை:

பொதுவாக உருளைக்கிழங்கு காரத்தன்மை கொண்ட மண்ணில் வளர்க்கப்படுபவை. மேலும் இதனின் நல்ல மகசூலுக்கு மண்ணின் கார-அமிலத்தன்மை 5.2-6.4 என்ற அளவில் இருக்க வேண்டும். 

உருளைக்கிழங்கு நிலம் தயாரித்தல்:

நிலத்தை 20-25 சே.மீ வரை நன்கு உழுது, பிறகு சூரிய ஒளியில் உலர வைக்கவேண்டும். மண்ணில் நன்கு காற்றோட்டம் உள்ளவாறு நிலத்தை உழுதல் அவசியமாகும். மேலும் இறுதி உழவின்போது நன்கு மக்கிய உரம் 25-30டன்/ எக்டேர் என்ற அளவில் கொடுக்க வேண்டும். பிறகு நடவிற்காக மேடு பள்ளக் கால்களைத் தயார் செய்யவேண்டும். பிறகு விதைக்கிழங்கை 5-7 சே.மீ  ஆழத்தில் 15-20 சே.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும். மேலும் ஒரு எக்டருக்கு 1.5- 1.8டன் உருண்டை வடிவ கிழங்குகள் மற்றும் 2-2.5 டன் கோனை வடிவ கிழங்குகள் தேவைப்படும். 

தற்போது உருளைக்கிழங்கை விதைக்க ஐ.சி.ஏ.ஆர் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட நான்கு சாரி உருளைக்கிழங்கு விதைப்பு இயந்திரம் பிரபலமாக உள்ளது. மேலும் இந்த இயந்திரம் மூலம் 3-4 எக்டேர் நிலத்தை வெறும் 2-3 ஆட்கள் கொண்டு நடவு செய்யலாம். இதனால் செலவு குறையும்.

முடிவுரை

பொதுவாக உருளைக்கிழங்கு அனைத்து இடங்களிலும் சாகுபடி செய்யலாம். சந்தையில் மதிப்பு குறைந்தாலும் கூட இதனுடன் கூடுதல் மதிப்பு சேர்க்கப்படும் போது உருளைக்கிழங்கு ஒரு சிறந்த லாபகரமான  பயிராகும். 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. உருளைக்கிழங்கின் பிரபலமான இரகங்கள் என்ன? 

மாநிலம் உருளைக்கிழங்கு இரகங்கள்
கர்நாடக குப்ரி சிந்துரி, குப்ரி ஜோதி, குப்ரி லௌவ்கர், குப்ரி ஜவஹர்
தமிழ்நாடு குப்ரி ஜோதி, குப்ரி மலர், குப்ரி முத்து, குப்ரி ஸ்வர்ணா, குப்ரி தங்கம், குப்ரி சோகா, குப்ரி கிரிராஜ்
தெலுங்கானா குப்ரி சந்திரமுகி, குப்ரி பாட்ஷா, குப்ரி புஷ்ராஜ், குப்ரி ஜோதி, குப்ரி கியாதி, குப்ரி சூர்யா
ஆந்திர பிரதேசம் குப்ரி சந்திரமுகி, குப்ரி ஜோதி, குப்ரி ஹிமலானி, குப்ரி சிந்துரி, குப்ரி லலிமா
இமாச்சல பிரதேசம் குப்ரி சந்திரமுகி, குப்ரி ஜோதி, குப்ரி பஹார், குப்ரி புஷ்ராஜ்
உத்தர பிரதேசம் குப்ரி சிப்சோனா-1, குப்ரி சிப்சோனா-2, குப்ரி அசோகா, குப்ரி லலிமா

 

 2. உருளைக்கிழங்குகளுக்கு  எவ்வாறு விதை நேர்த்தி செய்வது?

கிழங்குகளை ரிடோமெட் அல்லது கிரிலாக்சில் தூள் (மெட்டாலாக்சில் 35 %) 1 கிராம்/லிட்டர் + 2-ப்ரோமோ 2-நைட்ரோ புரொப்பேன் – 1,3 டியோல்; 95% w/w (பாக்டினாஷ்) 0.5 கிராம்/லிட்டர் + ஹ்யூமிக் அமில பொருள் (வி-ஹ்யூம் பிளஸ்) 10 மில்லி/லிட்டர் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். 

  1. உருளைக்கிழங்கு வகைகளின் விதை விகிதம் என்ன?

வட்ட வகை உருளைக்கிழங்குக்கான விதை அளவு 0.6 – 0.7 டன்/ஏக்கர்.  முட்டை வடிவ உருளைக்கிழங்கு வகையின்  விதை அளவு 0.8 – 1 டன்/ஏக்கர். 

  1. உருளைக்கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற மண் வகை எது?

உருளைக்கிழங்கு வளம் உள்ள எல்லா மண்ணிலும் பயிரிடலாம். களர் உவர் நிலங்கள் ஏற்றவையல்ல. இதற்கு நன்கு நீர் வடியும், காற்றோட்டமுள்ள மண் வேண்டும். மண் (அ) இரும்பொறை சார்ந்த மணல் கலந்த மண் உருளைக்கிழங்கு சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. 

  1. உருளைக்கிழங்கை எவ்வாறு நடுவது?

நடவு செய்வதற்கு முன் 50 – 60 செ.மீ. அளவில் சால் (அ) வாய்க்கால்களை அமைக்கவேண்டும். முழு அல்லது வெட்டப்பட்ட கிழங்குகளை 15 – 20 செ.மீ இடைவெளியில் 5 – 7 செ.மீ ஆழத்தில் மேடுகளின் மையத்தில் நடப்பட்டு மண்ணால் மூடப்பட வேண்டும். மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CPRI) உருவாக்கிய நான்கு வரிசை உருளைக்கிழங்கு நடவு இயந்திரம் கிழங்குகளை நடுவு செய்ய  பயனுள்ளதாக இருக்கும், இது வேலையாள் கூலிச் செலவையும் கணிசமாகக் குறைக்கிறது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. 

  1. உருளைக்கிழங்குக்கான உரம் பரிந்துரை அளவு என்ன?

உருளைக்கிழங்குக்கான உரம் பரிந்துரை அளவு 49:24:49  கிலோ/ஏக்கர். அதன் வயலில் பயன்படுத்தக்கூடிய அளவு கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

ஊட்டச்சத்து உரங்கள் அளவு (ஒரு ஏக்கருக்கு)
இயற்கை/கரிம தொழு உரம்/உரம் 10 – 11 டன்
தழை சத்து யூரியா (அல்லது) 105 கிலோ
அம்மோனியம் சல்பேட் 237 கிலோ
மணி சத்து சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (அல்லது)) 152 கிலோ
டபுள்  சூப்பர் பாஸ்பேட் 76 கிலோ
சாம்பல் சத்து மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (அல்லது) 81 கிலோ
சல்பேட்  ஆஃப் பொட்டாஷ் 97 கிலோ
மக்னீசியம் மெக்னீசியம் சல்பேட் (மல்டிபிளக்ஸ் மல்டி மேக்) இலைவழி தெளிப்பு: 3 – 4 கிராம்/லிட்டர்
உயிர் உரம் அசோஸ்பைரில்லியம் (பயனியர் அஃரோ) மற்றும் பாஸ்போபாக்டீரியா.(பயனியர் அஃரோ) தலா 4 கிலோகிராம்

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024