பிரேசிலுக்கு அடுத்தபடியாக கரும்பு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 177 மில்லியன் டன்கள் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. கரும்பு ஒரு பல்துறை பயிர் ஆகும். இது சர்க்கரை, வெல்லப்பாகு மற்றும் காகிதம் போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம். இந்தியாவில் கரும்பு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஒரிசா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
கரும்பு விவசாயம் செய்ய விதைகள் கிடையாது. கரும்பு கரனைத் தான் விதையாகப் பயன்படுத்தப்படும். கரும்பு நடவு என்பது தட்பவெப்ப நிலை, நீர் இருப்பு மற்றும் சரியான ரகங்களைத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றைப் பொறுத்தது. இன்றைய சந்தையில் தேர்வு செய்ய பல்வேறு வகையான கரும்புகள் உள்ளன. அவற்றுள் பீமா, நயனா, பிரபா, கல்யாணி, பவானி, உத்தரா, சரயு, மோதி, கிருஷ்ணா, ரசீலி, கந்தக், பிரமோத், ஹரியானா, ராஜ்போக், ராஸ்பரி, ஷிமா மற்றும் ஸ்வேதா ஆகியவை பிரபலமானவை. சந்தையில் உள்ள இனிப்பு கரும்புகளில் நயனா ரகமும் ஒன்றாகும். இதன் ரசத்தில் 20.1% சுக்ரோஸ் உள்ளது. நயனா எக்டருக்கு சுமார் 104 டன் மகசூல் கொடுக்கும். இது மட்டும் இல்லாமல் நயனா ரகம் கரிப்பூட்டை, சிவப்பு அழுகல் நோய்களுக்கு எதிர்ப்புத் திறனையும், வறட்சியைத் தாங்கும் தண்மையையும் மற்றும் சிறந்த மறுதாம்பு பயிராகவும் உள்ளது. அதேபோல் கல்யாணி ரகம் கரிப்பூட்டை, சிவப்பு அழுகல் நோய்களுக்கு எதிர்ப்புத் திறனையும் மற்றும் வறட்சியையும், நீர் தேங்கி இருக்கும் தண்மையையும் தாங்கும் சக்தியைக் கொண்டுள்ளது.
கரும்புக்கான விதை நேர்த்தியானது கரும்பில் உள்ள காய்ந்த இலைகளை அகற்றுவதன் மூலம் மொட்டுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைத் தவிர்க்கும் வகையில் தொடங்குகிறது. மொட்டு கரும்புகள் பொதுவாக 30 முதல் 40 செமீ நீளமுள்ள மூன்று மொட்டு கட்டை கரும்புகளாக வெட்டப்படுகின்றன. இந்த கரும்பு விதைகளை 0.1% கார்பன்டாசிம் (1 கிராம்/லிட்டர் தண்ணீர்) அல்லது அரேடன் மற்றும் அகலோல் 4 கிராம்/லிட்டர் தண்ணீரில் 0.5 சதவீத கரைசலில் 10 நிமிடம் நடுவதற்கு முன் நனைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது. கரும்பு விதைகளைச் சூடான காற்றிலும் (50ºC 2-2.5 மணி நேரம்) சிகிச்சை செய்யலாம். விதை மூலம் பரவும் நோய்க்கிருமிகளைத் தடுக்க கரும்புக்கான மிகவும் பயனுள்ள விதை நேர்த்திகளில் இதுவும் ஒன்றாகும்.
கரும்பு வயல்கள் 50-60 செ.மீ ஆழத்தில் டிராக்டருடன் இணைக்கப்பட்ட வட்டு கலப்பை அல்லது வெற்றிக் கலப்பை மூலம் 2 முதல் 4 முறை உழவு செய்து தயார் செய்யப்படுகின்றன. பின்னர் நிலத்தை 12-15 செ.மீ ஆழத்தில் வெட்டி, டிஸ்க் ஹாரோ அல்லது ரோட்டாவேட்டர் மூலம் கட்டிகளை நசுக்க வேண்டும். இதன் மூலம் கட்டியாக உள்ள மண்ணை தூளாக்கி மென்மையாக்குகிறது. இதன் பிறகு நிலத்தை சமன் செய்ய வேண்டும். ஏனென்றால் சீரான பயிர் நிலையைப் பெறுவதற்கு, நீர் பாசன இயக்கம் எளிதானதாக இருக்க வேண்டும். அதற்கு நிலத்தைச் சமன் செய்வது மிகவும் முக்கியம். டிராக்டரில் இயக்கப்படும் லெவலரைப் பயன்படுத்தி லெவலிங் செய்யலாம்.
கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது 25 டன் மட்கும் உரம் அல்லது எக்டருக்கு 37.5 டன் என்ற அளவில் வடிகட்டி அழுத்திய சேற்றை அடி உரமாக இடவும். பிறகு கரும்பு குப்பை மற்றும் சேற்றை 1:1 என்ற விகிதத்தில் இடவும். இதைத் தொடர்ந்து ராக் பாஸ்பேட், ஜிப்சம் மற்றும் யூரியா 2:2:1 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். இந்தக் கலவையை மாட்டுச் சாணக் குழம்பு அல்லது தண்ணீருடன் ஈரப்பதத்திற்காக சேர்த்துக் கொள்ளலாம். பாஸ்பரஸ் இல்லாத மண்ணாக இருந்தால் 37.5கிலோ/ஹெக்டருக்கு சூப்பர் பாஸ்பேட்டை மண்வெட்டி மூலம் பாத்திகளில் இடவும். ஜின் (Zn) மற்றும் இரும்பு (Fe) குறைபாடுள்ள மண்ணில் வேலை செய்யும் போது, 37.5 கிலோ ஜிங்க் சல்பேட்/எக்டரையும், 100 கிலோ இரும்பு சல்பேட்டையும் இடவும். விதைக் கரும்புகள் 30 – 45 செ.மீ இடைவெளியில் சால்களில் நடப்படும். 3 அல்லது 4 வது நாளில் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.
மண் நடுநிலை pH அல்லது சற்று காரத்தன்மையுடன் (pH 6.5 முதல் 7.5 வரை) நன்கு வடிகட்டிய களிமண் மண்ணாக இருக்க வேண்டும்.
நாட்டின் அனைத்து நீர்ப்பாசன பகுதிகளிலும் கரும்பு பயிரிடலாம். தண்ணீர் தேவையைத் தவிர, அதிக பராமரிப்பு தேவையில்லாத எளிதில் கையாளக்கூடிய பயிர் கரும்பு. இது அதிக லாபம் தரக்கூடியது. சந்தையில் அதிக தேவை உள்ள பயிராகவும் உள்ளது.
1.பிரபலமாக பயிரிடப்படும் கரும்பு இரகங்களைப் பரிந்துரைக்கவும்?
மாநிலம் | கரும்பு இரகங்கள் |
தமிழ்நாடு | கோ க 671, கோ 62175, கோ 7704, கோ 6304, கோ க 85061, கோ 8001, கோ 86032, கோ க 92061 |
கர்நாடக | கோ 7704,கோ 62175, கோ 8014, கோ 8011, கோ க 671, கோ 86032, கோ 85002 |
ஆந்திர பிரதேசம் | கோ 6907, கோ டி 8201, கோ 8013, கோ 62175, கோ 7219, கோ 8014, கோ 8001 |
உத்தர பிரதேசம் | யுபி 9530, கோ சி 96436, கோ 09022, கோ 05009 (கரன் 10) |
மகாராஷ்டிரா | கோ 06027, கோ எஸ்என்கே 05104, கோ 0403 (சம்ரிதி) |
நான்கு முக்கிய பருவங்கள் உள்ளன;
கரும்பு பயிருக்கான உர பரிந்துரை அளவு 121:40:81 கிலோ/ஏக்கர். அதன் வயலில் பயன்படுத்தக்கூடிய அளவு கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து | உரங்கள் | அளவு (ஒரு ஏக்கருக்கு) |
இயற்கை/கரிம | தொழு உரம் (அல்லது) | 5 டன் |
உரம் (அல்லது) | 10 டன் | |
ஆலை அழுக்கு | 15 டன் | |
தழை சத்து | யூரியா (அல்லது) | 265 கிலோ |
அம்மோனியம் சல்பேட் | 592 கிலோ | |
மணி சத்து | சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (அல்லது) | 253 கிலோ |
டபுள் சூப்பர் பாஸ்பேட் | 127 கிலோ | |
சாம்பல் சத்து | மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (அல்லது) | 135 கிலோ |
சல்பேட் ஆஃப் பொட்டாஷ் | 162 கிலோ | |
ஜிங்க் (ஜிங்க் பற்றாக்குறை மண்)
| ஆனந்த் அக்ரோ இன்ஸ்டா சீல் ஜிங்க் 12% நுண்ணூட்டச்சத்து | இலைவழி தெளிப்பு: 0.5 – 1 கிராம்/லிட்டர் மண்ணுக்கானப் பரிந்துரை: 10 கிலோ
|
இரும்பு (இரும்புச்சத்து குறைபாடுள்ள மண்ணுக்கு) | ஷாம்ராக் இரும்பு செலேட்டட் நுண்ணூட்டச்சத்து
| இலைவழி தெளிப்பு: 1 கிராம்/லிட்டர் மண்ணுக்கானப் பரிந்துரை: 10 கிலோ |
கரும்பு விதைக் கரணை என்பது கரும்புத் தண்டுகளின் பகுதிகளாகும், அவை பயிர்ப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் மொட்டுகள் ஆகும். 2-3 மொட்டுகள் கொண்ட கரணைகள் நடவு செய்வதற்கு சிறந்ததாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவை அதிகம் அல்லது குறைவான மொட்டுகளைக் கொண்ட கரணைகளை விட சிறந்த முளைப்பு மற்றும் விளைச்சலைத் தருகிறது.
நடவு செய்த 3வது நாளில் விசைத் தெளிப்பான் அல்லது மின்கலத் தெளிப்பானை பயன்படுத்தி, அட்ராட்டாஃப் (அட்ராசின் 50 WP) 1 – 2 கிராம்/லிட்டர் அல்லது டாடா மெட்ரி களைக்கொல்லியை (70% WP மெட்ரிபுசின்) ஏக்கருக்கு 100 – 120 கிராம் என்ற அளவில் தெளிக்கவும்.
கரும்பில் ஊடுபயிராக சணப்பு மற்றும் தக்கைப் பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்கள் பயிரிடுவதால், மண்ணில் தழை சத்தை சேர்க்கும். மேலும், கரும்பு மகசூலை ஏக்கருக்கு 4 – 6 டன் அதிகரிக்கும்.
பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…
அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…