Crop

காபி பயிருக்கான நிலத்தயாரிப்பு முறைகள்

இந்தியாவில் 2021-2022 ஆம் ஆண்டில் மட்டும் 3.69 லட்சம் டன் காஃபி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய காஃபி உற்பத்தியாளர்கள் பிரேசில், வியட்நாம், கொலம்பியா, இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளே ஆகும். உலகின் ஏழாவது பெரிய காஃபி உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. இந்தியாவில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை காஃபி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளன. இந்திய காஃபி வலுவான கலவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனினும், உற்பத்தி செய்யப்படும் மொத்த காஃபியில் கிட்டத்தட்ட 80%-க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், பெல்ஜியம், ஸ்லோவேனியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு காஃபி ஏற்றுமதி செய்கிறது. 

இந்தியாவில் இரண்டு வகையான காஃபி வகைகள் பயிரிடப்படுகிறது: அவை அரபிகா மற்றும் ரோபஸ்டா.

சிரம நிலை: கடினமான

விதைகளின் தேர்வு

இரண்டு முக்கிய வகைகள் உள்ளன, அராபிகா மற்றும் ரோபஸ்டா. அந்த இரண்டு வகைகளிலிருந்து பிரபலமான கலப்பினங்கள் கென்ட், எஸ்-795, காவேரி மற்றும் செலக்ஷன் 9 ஆகும்.

காபி விதை நேர்த்தி

விதைகள் பொதுவாக நம்பகமான சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும். ஏனெனில், காஃபி பீன்களில் இருந்து காபி விதைகளை உற்பத்தி செய்வது மிகவும் கடினம். காபி விதைகள் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவுடன் கலந்து விதை நேர்த்தி செய்யப்படு வேண்டும். காஃபி விதைகள் பல்வேறு இரசாயனங்களுக்கு ஏற்ப பாதிப்புக்கு உள்ளாகும் உணர்திறன் கொண்டவை மற்றும் இது முளைக்கும் செயல்முறையைப் பாதிக்கும் என்பதால் அதிக இரசாயனங்களுடன் விதை நேர்த்தி செய்யப்படுவதில்லை. காஃபி விதையின் மூடிய உறை கவனமாக அகற்றப்பட வேண்டும். விதைகள் சோடியம் ஹைபோகுளோரைட்டின் 1% கரைசலில் கழுவப்படுகின்றன. எந்த இரசாயன எச்சத்தையும் அகற்ற விதைகள் உடனடியாக கனிம நீக்கப்பட்ட நீரில் கழுவப்படுகின்றன. விதைகள் பின்னர் 48 மணி நேரம் ஊறவைக்கப்படுகின்றன.

காபிக்கு நாற்றங்கால் படுக்கை தயாரித்தல்

காஃபி மரக்கன்றுகள் வழக்கமாக வாங்கி நடப்படும். ஏனெனில், விதையிலிருந்து காபி மரக்கன்றுகளைப் பெறுவது மிகவும் கடினமானது, நேரத்தை எடுத்துக்கொள்வது மற்றும் மென்மையானது. நர்சரிகளில் காபி மரக்கன்றுகள் பொதுவாக பாலிதீன் பைகளில் வளர்க்கப்படுகின்றன. பாலிதீன் பை மெல்லிய மண், வெர்மிகுலைட் மற்றும் மட்கிய ஒரு மெல்லிய அடுக்குடன் கலக்கப்படுகிறது. பின்னர் விதைகள் தனித்தனியாக விதைக்கப்பட்டு நிழலில் வைக்கப்படுகின்றன. இவை முளைப்பதற்கு 2.5 மாதங்கள் ஆகும். காஃபி விதைகள் மிகவும் உணர்திறன் கொண்டவை. எனவே, அதிக நீர் அல்லது மிகக் குறைந்த அளவு நீர் விதைகளை அழித்துவிடும்.

காபிக்கு நிலம் தயாரித்தல்

வயலில் களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். வயலைக் குப்பைகள் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். சிறந்த நீர் மேலாண்மைக்கு வயல் நிலம் சரிவான மேற்பரப்பில் இருக்க வேண்டும். ஊட்டச் சத்து அல்லது உரம் இடுவதற்கு முன் வயலில் மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், அதற்கேற்ப சுண்ணாம்பு இட வேண்டும். எக்டருக்கு 5 டன் என்ற அளவில் தொழு உரம் அல்லது மட்கும் உரம் போன்ற பருமனான கரிம உரங்களைச் சேர்ப்பது ஒரு விதியாகவே உள்ளது. மரக்கன்றுகள் பொதுவாக நிழலில் நடப்படும். கூடவே ஏதேனும் ஒரு மரக்கன்றையும் நிழலுக்காக நட வேண்டும்.

காபிக்கான மண் வகை தேவைகள்

காஃபி பொதுவாக அதிகம் தண்ணீர் தேக்கம் இல்லாத, அதிகளவு மட்கும் மற்றும் pH 5 முதல் 6 வரை உள்ள மண்ணில் நடப்படுகிறது. மண் அமிலமாக இருக்க வேண்டும். மேலும், இது நன்றாகப் பராமரிக்கப்பட வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மண் பரிசோதனை செய்து, மண்ணின் ஊட்டச்சத்து தண்மையைக் கண்டறிய வேண்டும்.

முடிவுரை

காஃபி சாகுபடி செய்வதற்கு மிகவும் கடினமான பயிர் மற்றும் மிகவும் உணர்திறன் கொண்டது. இருப்பினும், காபியை முறையாகப் பயிரிட்டால் விவசாயிக்கு முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  1. காபியின் பிரபலமான இரகங்கள் மற்றும் கலப்பின வகைகள் யாவை?

இரகங்கள் – அராபிகா மற்றும் ரோபஸ்டா 

கலப்பின வகைகள் – கென்ட், எஸ் – 795, காவிரி மற்றும் செலெக்க்ஷன் 9 

  1. காபி விதைகளுக்கு விதை நேர்த்தி செய்வது எப்படி?

காபி கொட்டைகள்/விதைகளை 10 மில்லி அசோஸ்பைரில்லியம் (சன் பயோ அசோஸ்) அல்லது பாஸ்போபாக்டீரியாவுடன் (சன் பயோ ஃபோசி), குளிர்ந்த வெல்லம் கரைசலில் கலந்து விதை நேர்த்தி செய்யவும். விதைப்பதற்கு முன்  விதைகளை நிழலில் உலர்த்தி, அதே நாளில் விதைக்கவும். 

  1. விதைகள் முளைப்பதற்கு எவ்வளவு நாள் ஆகும்?

2.5 மாதங்கள் ஆகும். 

  1. காபிக்கு ஏதேனும் குறிப்பிட்ட வளர்ச்சி நிலை உள்ளதா?

காபி கன்றுகள் பொதுவாக நிழலிடப்பட்ட நிலையில் நடப்படும். இவை மரங்களுடன் வளர்ப்படுகின்றன. 

  1. காபி செடிகளுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் முக்கிய தோட்ட மரங்கள் யாவை?

காபி 3 அடுக்கு நிழல் அமைப்பில் வளர்கிறது. கீழ் நிழல் அடுக்கு பொதுவாக எரித்ரினா  அல்லது கிளைரிசிடியா  போன்ற நைட்ரஜன் பொருத்தும் இனமாகும். இரண்டாம் நிழல் அடுக்கில் சில்வர் ஓக், வெள்ளை அல்லது சிவப்பு சீடர் போன்ற மரங்கள் இலைகளை உதிர்வதன் மூலம் மழைக்காலங்களில் பயனுள்ள நிழலை வழங்குகிறது. மூன்றாம் நிலை ஹார்ட் வுட்  மரங்களால் ஆனது. 

  1. காபி சாகுபடிக்கு எந்த வகையான மண் சிறந்தது?

நல்ல வடிகால் வசதியுடைய இரு பொறை மண் சாகுபடிக்கு ஏற்றது. 

  1. காபிக்கு நீர்ப்பாசனம் எவ்வாறு செய்யப்படுகிறது?

நவம்பர் – ஜனவரி மற்றும் பிப்ரவரி – ஏப்ரல் மாதங்களில் தெளிப்பு நீர் (ஸ்பிரிங்ளர்) மூலம் நீர் செலுத்துவதன் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்கும், பூக்கள் மலர ஆரம்பிக்கும். 

  1. காபி செடிகளுக்கான உரம் பரிந்துரை என்ன?

4 ஆம் ஆண்டு வரையிலான இளம் காபி செடிகளுக்கான உர பரிந்துரையின் பொதுவான அளவு மற்றும் அதன் வயலில் பயன்படுத்தக்கூடிய  அளவு கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆண்டு NPK  அளவு (கிராம்/செடி/ஆண்டு) உர அளவு (கிராம்/செடி/ஆண்டு)
யூரியா ராக் பாஸ்பேட் மியூரேட் ஆஃப் பொட்டாஷ்
அராபிகா
1-ம் ஆண்டு 20:10:20 43 33 33
2-ம் ஆண்டு 20:10:20 43 33 33
3-ம் ஆண்டு 25:15:25 54 50 42
4-ம் ஆண்டு 25:15:25 54 50 42
ரோபஸ்டா
1-ம் ஆண்டு 38:28:38 83 92 63
2-ம் ஆண்டு 38:28:38 83 92 63
3-ம் ஆண்டு 38:28:38 83 92 63
4-ம் ஆண்டு 40:30:40 87 99 67

 

முதிர்ச்சியடைந்த காபி செடிகளுக்கான NPK அளவு மற்றும் உரத் தேவை கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

Bearing bush NPK  அளவு (கிலோகிராம்/ஏக்கர்  )

 

உர அளவு (கிலோகிராம்/ஏக்கர்  )

 

யூரியா ராக

பாஸ்பேட்    

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்
விளைச்சல் அளவு (கிலோ/ஏக்கர்)
அராபிகா
1000 120:90:120 260 297 200
500 70:50:70 152 165 117
ரோபஸ்டா
1000 120:90:130 260 297 217
500 70:50:80 152 165 134

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025