Crop

கேரட் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை

பாக்டீரியா இலைக் கருகல்

அறிகுறிகள்

  • இந்நோய் வந்தால் இலைகளில் ஒழுங்கற்ற பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும்.
  • இலைக்காம்புகளில் அடர் பழுப்பு நிற கோடுகள் மற்றும் பூப்பகுதிகளில் காய்ந்தும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

இந்த நோயை கட்டுப்படுத்த கலப்பு மருந்து (காசுகமைசின் 5% + காப்பர் ஆக்சி குளோரைடு 45% டபிள்யு.பி) @ 30 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

கேரட் அழுகல் நோய்

அறிகுறிகள்

  • கேரடின் மேற்புற திசுக்கள் அனைத்தும் அழுகி காணப்படும்.
  • அழுகிய பாகங்கள் சாம்பல் நிறத்தில் காணப்படும். பிறகு வயலில் கெட்ட வாடை வீசும்.

கட்டுப்பட்டு முறைகள்

  • இந்த நோயை கட்டுப்படுத்த கலப்பு மருந்து (மெட்டலாக்சைல் 8% + மேன்கோசெப் 64% டபிள்யு.பி) (Metalaxyl 8% WP + Mancozeb 64%) @ 1500 கிராம்/ ஏக்கர் என்ற அளவில் கலந்து வயலுக்கு பாசனத்தில் கொடுக்கவும்.

இலைப்புள்ளி நோய்

அறிகுறிகள்

  • இலைகளில் முதலில் நீளமான கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
  • இலைக்காம்புகளில் அடர் நிறப் புள்ளிகள் தோன்றும். சில சமயங்களில் பிளவுப்பட்டு காணப்படும். முடிவில் இலைகள் மடிந்துவிடும்

கட்டுப்படுத்தும் முறைகள்

  • கலப்பு மருந்து (காசுகமைசின் 5% + காப்பர் ஆக்சி குளோரைடு 45% டபிள்யு.பி) @ 30 கிராம்/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

அடிச்சாம்பல் நோய்

அறிகுறிகள்

  • இலையில் மேற்புறம் மஞ்சள் நிற புள்ளிகள் தென்படும்.
  • இலையின் அடிபுறம் சாம்பல் போன்று பூஞ்சை வளர்ச்சி தென்படும்.

கட்டுப்படுத்தும் முறை

  • செடிகளை சரியான இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • இந்த நோயை சரிசெய்ய கலப்பு மருந்து (கார்பென்டேசிம் 12% + மேன்கோசெப் 63% டபிள்யு.பி) @ 40 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

கேரட் செடியை தாக்கும் பூச்சிகள்

அசுவினி

  • இவை பச்சை மற்றும் மஞ்சள் நிற பூச்சிகள் தண்டுகள் மற்றும் இலைகளில் இருக்கும்.
  • பாதிக்கப்பட்ட செடியின் இலையில் வேளிர்ந்த மஞ்சள் நிற புள்ளிகள் தென்படும்.

கட்டுபாட்டு முறை

  • வேப்பெண்ணை 30 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
  • தியோமீதோக்சம் 25% டபிள்யு.ஜீ (Thiamethoxam.25% WG) @ 12 கிராம்/15லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

கேரட் துரு பூச்சி

  • கேரட்டில் அதிக அளவில் துளைகள் காணப்படும்.
  • செடிகள் வாடியதை போல் காட்சி தரும்.

கட்டுப்படுத்தும் முறை

அறுவடை செய்தவுடன் கேரட்டை மூடிவைக்கவேண்டும். இல்லையெனில் அவற்றில் முட்டையிட்டு அதிக சேதப்படுத்தும்.

கேரட் கூன் வண்டு

  • பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • இவை கேரட்டை துளை இட்டு முற்றிலுமாக சேதப்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த வண்டை கட்டுப்படுத்த குளோரோபைரிபாஸ் என்ற மருந்தை 1 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் கலந்து பாசனத்தில் கொடுக்கவும்.

நூற்புழுக்கள்

  • பாதிக்கப்பட்ட செடியில் உள்ள கேரட் பிளந்து காணப்படும். மேலும் கேரட்டில் கிளைகள் முளைத்தவாறு காணப்படும்.
  • இவை கேரட்டில் 40 % வரை மகசூலை குறைத்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • நடவுக்கு முன்பு வயலை நன்கு உழுவதால் இதனை கட்டுப்படுத்தலாம்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024