Crop

கொய்யா பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

கொய்யா (சைடியம் குஜாவா) மிர்டேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் இது வெப்ப மண்டலத்தின் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது. 

இதில் வைட்டமின் சி மற்றும் கனிமங்கள் அதிகம் உள்ளது. இது பழ பயிர்களின் மொத்த பரப்பளவில் சுமார் 3.3% ஐ உள்ளடக்கியது மற்றும் இந்தியாவின் மொத்த பழ உற்பத்தியில் கொய்யா 3.3% பங்களிக்கிறது. 

இந்தியாவில், உத்தரபிரதேசம் கொய்யா  உற்பத்தியில் முன்னணியில் உள்ளது, அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தின் அலகாபாத் பகுதி இந்தியாவிலும் உலகிலும் சிறந்த தரமான கொய்யாவை உற்பத்தி செய்து வருகிறது.

கொய்யா அஸ்கார்பிக் அமிலத்தன்மை கொண்டவை. ஜாம், ஜெல்லி, தேன், ஜூஸ், கொய்யா கேக், ப்யூரி போன்ற பல பொருட்களாக இதை பதப்படுத்தலாம். இதன் வேர்கள், பட்டை, இலைகள் மற்றும் பழங்கள் போன்ற அனைத்தும் மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை. 

கொய்யா நோய் மேலாண்மை

வாடல் நோய்

  • பாதிக்கப்பட்ட செடியில் உள்ள இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக தென்படும்.
  • செடியில் இலை உதிர்வு ஏற்பட்டு முழு செடியும் இறக்க நேரிடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த நோயை கட்டுப்படுத்த காப்பர்ஆக்சி குளோரைடு என்ற மருந்தை  2 கிராம்/ ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து செடியின் வேர் பகுதியில் கொடுக்கவும்.

கொய்யா பழ அழுகல் நோய்

  • இந்த நோய் செடியை மழைக்காலத்தில் பாதிக்கும்.
  • பாதிக்கப்பட்ட செடியில் பழங்கள் அழுகி கீழே விழும்.
  • இது மகசூலை முற்றிலுமாக பாதிக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த நோயை கட்டுப்படுத்த தியோபனேட் மீதைல் 70% டபிள்யு.பி (Thiophanate methyl 70 % WP) @ 15 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

ஆந்த்ராக்னோஸ் பழ அழுகல் நோய்

  • பழங்களில் கருப்பு நிற புள்ளிகள் தென்படும்.
  • பழம்  மற்றும் பூக்களின் உதிர்வு ஏற்படும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த நோயை கட்டுப்படுத்த தியோபனேட் மீதைல் 70% டபிள்யு.பி (Thiophanate methyl 70 % WP) @ 2கிராம்/ 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

இலைப்புள்ளி நோய்

  • பாதிக்கப்பட்ட செடியில் உள்ள இலைகளில் கருப்பு நிற புள்ளிகள் தென்படும்.
  • இந்த நோய் தீவிர தாக்குதலின் போது மற்ற கிளைகளுக்கும்  பரவும்.
  • இந்த நோய் கொய்யாவின் தரத்தை குறைக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த நோயை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் என்ற மருந்தை 2 கிராம்/ ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து செடி நன்கு நனையும்படி 20 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்கவும்.

கொய்யா பூச்சி மேலாண்மை

பழ ஈக்கள்

  • இந்த பூச்சி கொய்யா பழத்தில் சாற்றை உரிந்து குடிக்கும்.
  • சாற்றை குடித்த இடங்களில் கருமை நிற புள்ளிகள் தென்படும் .
  • பாதிக்கப்பட்ட பழங்கள் பிஞ்சிலேயே பழுத்து உதிர்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த பூச்சியை கட்டுப்படுத்த குயினால்பாஸ் என்ற மருந்தை 30 மில்லி மற்றும் நாட்டுச்சக்கரை 50 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.
  • மேலும் பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்கவும்.

இலைப்பேன்

  • செடியில் பச்சை மற்றும் வெளிர்ந்த மஞ்சள் நிறங்களில் சிறு பூச்சிகள் தென்படும்.
  • பாதிக்கப்பட்ட இலை  மற்றும் காய்களில் கருப்பு நிறத்தில் சொறி போன்று காட்சியளிக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த பூச்சியை கட்டுப்படுத்த வயலில் தம்பலப்பூச்சி (Lady Bird Beetle) போன்ற நன்மை செய்யும் பூச்சியின் இனப்பெருக்கத்தை ஆதரிக்கவேண்டும்.
  • மேலும் இதனை கட்டுப்படுத்த தியோமீதோக்சம் 25% டபிள்யு.ஜீ (Thiamethoxam.25% WG) @ 12 கிராம்/10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

மாவு பூச்சி

  • இந்த பூச்சி செடியின் உள்ள  இலைகளில் சாற்றை உரிந்து குடிக்கும்.
  • இது செடியில் கொழுந்து பகுதியில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த பூச்சியை கட்டுப்படுத்த பப்ரோஃபெசின் 70% டி.எஸ் @ 12 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் செடி நன்கு நனையும்படி தெளிக்கவும்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024