Crop

கோஸ் காய்கறிகளில் உள்ள வைர முதுகு அந்துப்பூச்சி மேலாண்மை

வைர முதுகு அந்துப்பூச்சி (DBM) ஆரம்பத்தில் ஐரோப்பாவில் காணப்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இது அதிகளவில் காணப்படுகிறது. இது சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் நீண்டு கொண்டிருக்கும் ஆண்டெனாவைக் கொண்டுள்ளது. இதன் முதுகில் வெளிர் நிற வைர வடிவங்கள் இருப்பதால் வைர முதுகு (டைமண்ட்பேக்) அந்துப்பூச்சி என்று பெயர். இந்த அந்துப்பூச்சிகளால் தரையிலிருந்து 2 மீட்டருக்கு மேல் பறக்க முடியாது. இந்த அந்துப்பூச்சிகள் அனைத்து வகையான குருசிபெரஸ் (crucifers) தாவரங்களையும் தாக்கி அவற்றின் தரத்தைப் பாதிக்கிறது மற்றும் அவற்றின் பூ உருவாவதைத் தடுக்கும்.

தாக்குதலின் அறிகுறிகள்

  • வைர முதுகு அந்துப்பூச்சியின் (DBM) நுகர்வு முறை விண்டோயிங் (Windowing) என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் லார்வாக்கள் இலை திசுக்களை உண்டு சல்லடை போன்ற வடிவத்தை உருவாக்குகின்றன. மேலும் மேற்பரப்பின் திசுக்களை உண்பதால் ஒளி ஊடுருவக் கூடிய வகையில் இலைகள் மாற்றப்படுகின்றன.
  • பல நேரங்களில், வைர முதுகு அந்துப்பூச்சி படையெடுத்த தாவரங்கள், புழு உண்ட துளைகள் மற்றும் ஒளிஊடுருவக்கூடிய புள்ளிகளுடன் காணப்படும்.
  • புதிதாக குஞ்சு பொரித்த லார்வாக்கள் இலைத் திசுக்களின் உள்ளே இலைகளைச் சுரண்டியும் மற்றும் வளர்ந்த புழுக்கள் தாவரங்களின் அனைத்துப் பகுதிகளையும் உண்ணும்.
  • லார்வாக்கள் எண்ணிக்கையில் அதிகரித்து, தொடர்ந்து இலைகளை சாப்பிடுவதன் மூலம், அது இலை நரம்புகளை மட்டும் விட்டுவிட்டு முழுமையாக இலையை உண்பதற்கு வழிவகுக்கும்.
  • கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் DBM புழுக்கள் முட்டைக்கோஸ் தலைகள் (பூக்கள்), காலிஃபிளவர் பூக்கள் ஆகியவற்றில் நுழைகின்றன. இதனால் அவை விற்பனை செய்வதற்கும் சாப்பிடுவதற்கும் ஏற்பற்றவையாக கருதப்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறை

  • நாற்றுகளை வைர முதுகு அந்து பூச்சியின் புழுக்கள், பூச்சிகள் மற்றும் முட்டைகள் தாக்காதவாறு பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்க்கலாம்.
  • களைகள் இல்லாத நிலத்தில் விதைகளை விதைப்பதுடன் களை இல்லாதவாறு பாதுகாக்க வேண்டும்.
  • பயிர் சுழற்சி முறையை பின்பற்றுவதன் மூலம் வைர முதுகு அந்து பூச்சியின் வளர்ச்சிகள் தடை செய்யப்படும்.
  • ஊடுபயிர் மற்றும் கவர்ச்சி பயிரை முதன்மையான பயிருடன் வளர்ப்பதன் மூலம் வைர முதுகு  பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

வைர முதுகு அந்துப்பூச்சியை கட்டுப்படுத்த பயன்படும் இரசாயனங்கள்

கீஃபுன் பூச்சிக்கொல்லி 

  • செயல்பொருள்: டோல்ஃபென்பிராட் 15% EC. இது வைர முதுகு அந்துப்பூச்சி உட்பட பல்வேறு பூச்சிகளுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது பூச்சிகள் கடித்தல், உறிஞ்சுதல் மற்றும் தாவர பாகங்களை மெல்லுவதைத் தடுக்கிறது. இதனை 1 லிட்டர் தண்ணீரில் 1.5-2 மில்லி கலந்து பயன்படுத்தலாம்.

சிக்னா பூச்சிக்கொல்லி 

  • செயல்பொருள்: 5.4% EC லுபெண்சுரான் பூச்சிகளுக்கு எதிரான வளர்ச்சி தடுப்பானாகும். அந்துப்பூச்சி இலைகளுடன் தொடர்பு கொண்டால், இது கைட்டின் உருவாக்கத்தைத் தடுக்கும். குரூசிபெரஸ் வகை காய்கறிகளில் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது. 1 லிட்டர் தண்ணீரில் 1.5-2 மில்லி கலந்து பயன்படுத்தலாம்.

இன்டர்பிட் பூச்சிக்கொல்லி 

  • செயல்பொருள்: 10% குளோர்ஃபெனாபைர் SC உள்ளது. பலவிதமான பூச்சிகள் மற்றும் பூச்சிகளுக்கு எதிரான பயனுள்ளதாக இருக்கும். இது இலைகளின் அடிப்பகுதியில் அந்துப்பூச்சிகளின் படையெடுப்பை திறம்பட கட்டுப்படுத்த உதவும். 1 லிட்டர் தண்ணீரில் 1.5-2 மில்லி கலந்து பயன்படுத்தலாம்.

குறிப்பு: பயிர்கள் தொடர்பான அனைத்து வகையான தகவல்களையும் பெற, எங்கள் வலைத்தளமான https://kisanvedika.bighaat.com/ta இணையதளத்தை பார்வையிடவும் அல்லது எங்கள் கட்டணமில்லா எண்ணான 1800 3000 2434-ஐ அழைக்கவும்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024