Crop

தக்காளியில் அசுவினிகளை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

அசுவினி என்பது, உலகளவில் 400 வகையான தாவரங்களைப் பாதிக்கும் மற்றும் தக்காளி பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பூச்சியாகும். இந்த அசுவினி தாவரங்களின் புளோயமை உண்பதன் மூலமும், இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சுவதன் மூலமும், ஒளிச்சேர்க்கையைத் தடுப்பதன் மூலமும் அல்லது மறைமுகமாக 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு தாவர வைரஸ்களைப் பரப்புவதன் மூலமும் நேரடியாக தாவரத்தை சேதப்படுத்துகிறது. எனவே, உங்கள் தக்காளி பயிர் சேதமடைவதைத் தடுக்க அவற்றைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.

  • தாக்குதலின் வகை: பூச்சி
  • பொதுவான பெயர்: அசுவினி
  • அறிவியல் பெயர்: மைசஸ் பெர்சிகே
  • பூச்சிகள் தாக்கும் நிலை: நிம்ஃப் மற்றும் முதிர்ச்சி அடைந்த அசுவினி பூச்சி
  • மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள் மற்றும் தண்டுகள்

பூச்சி வளர்ச்சிக்கு சாதகமான சுற்றுச்சூழல் காரணிகள்:

அ. வெப்பநிலை: நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பூச்சிகள் உச்சக்கட்ட எண்ணிக்கையில் காணப்படுகிறது. அப்போது வெப்பநிலை 12-25°C ஆக இருக்கும்.

ஆ. சார்பு ஈரப்பதம்: ஒரு தாவரத்தில் வெற்றிகரமாக அதனை நிலைப்படுத்துவதற்கு சாதகமான ஈரப்பதம் 60-70%.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்:

குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு.

அறிகுறிகள்:

அ. ஆரம்ப அறிகுறிகள்: நிம்ஃப்கள் மற்றும் முதிர்ச்சி அடைந்த அசுவினி பூச்சிகள் இரண்டும் இளம் இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இதன் காரணமாக இலைகள் சுருண்டு கிடப்பதைக் காணலாம். இலைகளின் கீழ் மேற்பரப்பில் பூச்சிகள் காணப்படும்.

ஆ. கடுமையான அறிகுறிகள்: கடுமையான நிலைகளில் தாவரங்கள் வளர்ச்சி குன்றியிருப்பதை காணலாம். பூச்சிகள் “ஹனிட்யூ” எனப்படும் தேன் போன்ற ஒட்டும் திரவத்தை வெளியிடுகின்றன. இது எறும்புகளை ஈர்க்கிறது. இது அசுவினி தொற்றை தெளிவாகக் காட்டுகிறது மேலும் இது கரும்பூஞ்சான் நோய் உருவாவதை ஊக்குவிக்கிறது.

தக்காளியில் இலைப்பேனிற்கான உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:

நோய்த்தடுப்பு:

நோய்த்தடுப்பு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி  + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் இலை வழி தெளித்தல்

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி 2-3 5-7 நாட்கள் இலை வழி தெளித்தல்

தயாரிப்பு விவரங்கள்:

  1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ வடிவத்தில் கிடைக்கிறது, இது தாவர சாறுகள் / எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும். இது முக்கியமாக பூச்சிகளின் லார்வா நிலையை குறிவைத்து அழிக்கிறது. பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை முடக்கி, பறக்கும் மற்றும் உணவளிக்கும் செயல் திறனைத் தடுக்கிறது. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரமில் உள்ள சாறுகள் பல்வேறு ஆல்கலாய்டுகளை வழங்குகிறது.

இது தாவரங்களில் SAR-ஐ (முறையான பெறப்பட்ட எதிர்ப்பு திறனை) அதிகரிக்கிறது மற்றும் துளைப்பான்கள், பருத்தி காய்ப்புழு, கம்பளிப்பூச்சி, அமெரிக்கன் படைப்புழு, இலை சுரண்டும் புழுக்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் அனைத்து வகையான புழுக்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  1. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. தயாரிப்பு என்பது தாவரவியல் சாறுகள் / தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் தனித்துவமான கலவையாகும். இந்த உயிர் பூச்சிக்கொல்லி அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் முக்கியமாக வண்டுகள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் குறிவைத்து அழிக்கிறது. சைமோ பக்ட்ரோலின் முக்கிய நன்மைகளாக, இதில் உள்ள ஆல்கலாய்டுகள் தாவரத்தின் SAR- முறையான பெறப்பட்ட எதிர்ப்பினை அதிகரிக்கிறது. சைமோ பக்ட்ரோல் பூச்சிகளை நிர்வகிப்பது மட்டுமல்லாமல், தக்காளியைத் தாக்கக்கூடிய நோய்களுக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும், அதாவது TOSPO- தக்காளி புள்ளி வாடல் வைரஸை இலைப்பேனின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்துகிறது.
  2. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீராகப் பரப்புவதற்கு உதவியாக இருக்கும். இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலை ஈரமாக்குவதையும் பரப்புவதையும் அதிகரிக்கிறது. ஸ்ப்ரெட்டர்கள் பூச்சிக்கொல்லியை இன்னும் சமமாகப் பரப்பவும், மேற்பரப்புகளில் சிறப்பாக ஒட்டிக்கொள்ளவும் உதவுகின்றன. இது கவரேஜ் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.

தயாரிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் பக்கத்தைப் பார்வையிடவும்:

Recent Posts

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024

பப்பாளியில் பூக்கள் உதிர்தல் மற்றும் குறைந்த பழங்கள் உற்பத்தி பிரச்சினைக்கான மேலாண்மை உத்திகள்

பப்பாளி (கேரிகா பப்பாயா) ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்பு காரணமாக வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததுள்ளது. பப்பாளி மரங்களின்…

April 26, 2024

தக்காளி பாக்டீரியல் இலைப்புள்ளி நோயை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

பாக்டீரியல் இலைப்புள்ளி என்பது தக்காளி பயிரிடப்படும் இடங்களில், உலகம் முழுவதும் தக்காளியைத் தாக்கக்கூடிய ஒரு பொதுவான நோயாகும். இது தக்காளியின் ஆரம்பகட்ட வளரும் பருவத்தில் தாவரங்களின் இலைகளைக்…

April 23, 2024

தக்காளி வாடல் நோயை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

உங்கள் தக்காளி செடிகள் மஞ்சள் நிறமாகவும், செடியின் ஒரு பக்கத்திலோ அல்லது இலையின் ஒரு பக்கத்திலோ வாடிப்போனால், அவை ஃபுசாரியம் வாடல் நோய்யாகக் இருக்கலாம். இந்த நோய்…

April 23, 2024

தக்காளி பயிரில் முன்பருவ இலைக்கருகலை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

முன்பருவ இலைக்கருகல் எனப்படும் பூஞ்சை இலை கருகல்நோய் பெரும்பாலும் தக்காளி செடிகளை பாதிக்கிறது. இந்த நோய் சில சந்தர்ப்பங்களில் தக்காளி பயிர்களின் ஆண்டு வருமானத்தை 79% வரை…

April 23, 2024