Crop

தக்காளி பயிரில் காய்ப்புழுவை நிர்வகிப்பதற்கான கரிம முறையிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

தக்காளி காய்ப்புழுவை ஹெலிகோவர்பா ஆர்மிஜெரா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் தக்காளி சாகுபடியில் ஒரு பெரிய பூச்சி பிரச்சனையாகும். இது ஆப்பிரிக்காவிலிருந்து தோன்றி மற்ற கண்டங்களுக்கு வணிகம் மற்றும் இடம்பெயர்வு மூலம் பரவியது. இது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த 360 க்கும் மேற்பட்ட தாவர பயிர்களை உண்ணக்கூடிய ஒரு பாலிஃபாகஸ் பூச்சியாகும். இந்த பூச்சியின் லார்வா நிலை தக்காளி செடிகளுக்கு நேரடி சேதத்தை ஏற்படுத்துகிறது, பழங்களில் வட்டவடிவ துளைகளை துளைத்து, உட்புற திசுக்களை உண்ணக்கூடியது. இதனால் பழங்கள் விற்பனைக்கு வராமல் மகசூல் மற்றும் பயிரின் தரம் குறைகிறது.

  • தாக்குதலின் வகை: பூச்சி
  • பொதுவான பெயர்: காய்ப்புழு
  • அறிவியல் பெயர்: ஹெலிகோவர்பா ஆர்மிஜெரா
  • பூச்சியின் தாக்கும் நிலை: லார்வாக்கள்
  • மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: பழங்கள், மொட்டுகள் மற்றும் தளிர்கள்

நோய்/பூச்சி வளர்ச்சிக்கு சாதகமான சுற்றுச்சூழல் காரணிகள்:

  • வெப்பநிலை: காய்ப்புழுவின் தாக்குதல் நிகழ்வு 10-20°C வெப்பநிலையில் தொடங்கும். இது 20-30°C வெப்பநிலையில் அதிகபட்ச பொருளாதார அச்சுறுத்தல் உச்சவரம்பினை அடைகிறது.
  • ஒப்பீட்டு ஈரப்பதம்: 45-60% ஈரப்பதம் பூச்சி தாக்கத்திற்கு சாதகமானது.

இந்தியாவில் இப்பூச்சி வகையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்:

மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஒரிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்.

அறிகுறிகள்:

  • ஆரம்ப அறிகுறிகள்: இளம் லார்வாக்கள் புதிய இலைகளை உண்ணும். இது இலை உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. பின்னர், அவை பழங்களை உண்பதற்காகக் காத்திருக்கும்.
  • கடுமையான அறிகுறிகள்: முதிர்ந்த லார்வாக்களால் வட்டவடிவ ஓட்டைகள் உருவாகின்றன. முதிர்ந்த லார்வாக்கள் பழங்களின் உள்ளே தலையை நீட்டிக்கொண்டு, மீதி உடலை வெளியே வைத்துக்கொண்டு பழங்களை உண்ணும். புழுக்கள் ஏற்படுத்திய துளைகள் மற்றும் லார்வாக்களின் எச்சங்களையும் பழங்களின் மீது காண முடியும். அவை மொட்டுகள் மற்றும் தளிர்களையும் கூட உண்கின்றன.

தக்காளியில் காய்ப்புழுவினை கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:

நோய்த்தடுப்பு:

நோய்த்தடுப்பு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1-2 மில்லி + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் இலை வழி தெளித்தல்

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி 2-3 5-7 நாட்கள் இலை வழி தெளித்தல்

தயாரிப்பு விவரங்கள்:

  1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள் / தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும். இந்த ‘சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்’ முக்கியமாக பூச்சிகளின் லார்வா கட்டத்தை குறிவைக்கிறது. பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்து, அதன் பிறகுப் பறக்கும் மற்றும் உண்ணும் செயலைத் தடுக்கிறது. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரமில் உள்ள தாவரச் சாறுகள் பல்வேறு ஆல்கலாய்டுகளால் தாவரங்களின் SAR (முறைமையாக பெறப்பட்ட எதிர்ப்பு) -ஐ அதிகரிக்கிறது. ஆதலால், துளைப்பான்கள், பருத்தி காய்ப்புழு, கம்பளிப்பூச்சி, அமெரிக்கன் படைப்புழு, இலை துளைப்பான் மற்றும் பிற இது போன்ற பூச்சிகள் மற்றும் அனைத்து வகையான புழுக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
  2. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இதன் தயாரிப்பு தாவரவியல் சாறுகள் / தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் தனித்துவமான கலவையாகும். இந்த உயிர் பூச்சிக்கொல்லி அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் முக்கியமாக வண்டுகள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை குறிவைத்து அழிக்கிறது. இதில் உள்ள ஆல்கலாய்டுகளால் முக்கிய நன்மையாக, இது தாவர SAR (முறையான பெறப்பட்ட எதிர்ப்பினை)  அதிகரிக்கின்றது.
  3. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீரான முறையில் பரப்புவதற்கு உதவியாக இருக்கும். இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலின் ஒட்டும் தன்மையையும், அதன் பரவலையும் அதிகரிக்கிறது. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் பூச்சிக்கொல்லியை இன்னும் சமமாக பரப்பவும், இலையின் மேற்பரப்புகளில் சிறப்பாக ஒட்டிக்கொள்ளவும் உதவுகின்றன. இது செயல்திறனை மேம்படுத்தும்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024