Crop

தாவர நிலையில் தக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ஒரு விவசாயியாக, உங்கள் தக்காளி செடிகளை விதை முதல் முதிர்ச்சி அடையும் வரை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சியை நீங்கள் முதலீடு செய்கிறீர்கள். இருப்பினும், மிகுந்த கவனத்துடன் இருந்தாலும், இந்த தாவரங்கள் உங்கள் கடின உழைப்பை வீணாடிக்கும் விதமாக பூச்சிகளுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையில், தாவரக் கட்டத்தில் தக்காளிப் பயிர்களைக் குறிவைக்கும் பொதுவான பூச்சிகளைப் பற்றி ஆராய்வோம் மற்றும் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பயனுள்ள உத்திகளைப் பற்றியும் காண்போம்.

இலைப்பேன்

நோய்க்காரணி: த்ரிப்ஸ் டபாகி, ஃபிராங்க்லினெல்லா ஸ்பீசியஸ்.

அறிகுறிகள்

  • தக்காளி விவசாயிகள் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டிய ஒரு பூச்சி இலைப்பேன் ஆகும். இந்த சிறிய பூச்சிகள் உங்கள் தக்காளி செடிகளின் இளம் இலைகளை உண்பதோடு, சேதத்தையும் ஏற்படுத்துகின்றன.
  • இவை, பயிர்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் TOSPO வைரஸையும் பரப்புகிறது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

அசுவினி

நோய்க்காரணி: மைசஸ் பெர்சிகே, ஏஃபிஸ் காசிப்பி

அறிகுறிகள்

  • அசுவினிகள் சாறு உறிஞ்சிகளுக்கு பெயர்பெற்றது. பொதுவாக நாற்று நிலைகளின் போது, இது தக்காளி செடிகளை பாதிக்கிறது.
  • இந்த சிறிய பூச்சிகள் மென்மையான இலைகளின் சாற்றை உறிஞ்சிகின்றன. இது தவறான வடிவம் மற்றும் வளர்ச்சி குன்றிய நிலைக்கு வழிவகுக்கிறது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

சிலந்திப் பூச்சிகள்

நோய்க்காரணி: டெட்ரானைகஸ் ஸ்பீசியஸ்.

அறிகுறிகள்

  • இந்த நுண்ணிய பூச்சிகள் இலைகளில் மஞ்சள் அல்லது வெண்மை நிறப் புள்ளிகளை உண்டாக்கி, தாவர வளர்ச்சியை பலவீனமடைய செய்கின்றது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • ஃபாஸ்டர் பூச்சிக்கொல்லியை (சைஃப்ளூமெட்டோஃபென் 20% SC) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற விகிதத்தில் பயன்படுத்தவும் (அல்லது)
  • ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.3 முதல் 0.5 மில்லி என்ற விகிதத்தில் குனோய்ச்சி (சைனோபிராஃபென் 30%) தெளிக்கவும்.

வெள்ளை ஈ

நோய்க்காரணி: பெமிசியா டபாசி  

அறிகுறிகள்

  • வெள்ளை ஈக்கள் தக்காளி இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
  • உறிஞ்சுவதன் விளைவாக, சிதைந்த மற்றும் தவறான இலைகளைக் காணலாம்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

மாவுப்பூச்சி

நோய்க்காரணி: மாகோனெல்லிகாக்கஸ் ஸ்பீசியஸ்., ஃபெனாகாக்கஸ் சோலெனோப்சிஸ்.

அறிகுறிகள்

  • மாவுப்பூச்சி சாறு உறிஞ்சிகளாகும். அவை தக்காளிச் செடியிலிருந்து சாற்றை உறிஞ்சி அவற்றை வலுவிழக்க செய்கின்றன.
  • அவை தேன்பனி போன்ற திரவத்தைச் சுரக்கின்றன. இது மற்ற பூச்சிகளை ஈர்க்கிறது மற்றும் தாவரத்தில் சூட்டி அச்சு பூஞ்சான் வளர வழிவகுக்கின்றது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

குறிப்பு: உங்கள் தக்காளி செடிகளின் வெற்றிகரமான வளர்ச்சிக்கு நாற்று நிலையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது. பூச்சி சேதத்தின் அறிகுறிகளை உங்கள் தாவரங்களைத் தவறாமல் கண்காணித்து, பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு கட்டுப்படுத்தவும். பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது, தயாரிப்பு லேபிள்களில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் நினைவில் கொள்ளுங்கள்.

முடிவுரை

வெற்றிகரமான தக்காளி பயிரிடுவதற்கு, தாவர நிலையின் போது பயனுள்ள பூச்சி கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. இந்த உத்திகளைச் செயல்படுத்துவதன் மூலமும், விழிப்புடன் இருப்பதன் மூலமும், உங்கள் தக்காளிப் பயிரின் ஆரோக்கியத்தையும், உயிர்ச்சக்தியையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024