நிலக்கடலை வேர்க்கடலை என்றும் அழைக்கப்படுகிறது, நிலக்கடலைச் செடி என்பது லெகுமினோசே குடும்பத்தின் துணைக் குடும்பமான பாபிலியோனேசியைச் சேர்ந்த ஒரு சுய-மகரந்தச் சேர்க்கை பயிராகும்.
வேர் முடிச்சு பாக்டீரியா மூலம் காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தும் திறனை நிலக்கடலை கொண்டுள்ளது.
நிலக்கடலைக்கு உரமிடும்போது, நல்ல வளர்ச்சி மற்றும் மகசூலுக்கு சரியான உரத்தை, சரியான அளவில், சரியான நேரத்தில் வழங்கவேண்டும்.
நைட்ரஜன் தாவர வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதேசமயம் அதிகப்படியான வளர்ச்சியையும் ஏற்படுத்தும். நிலக்கடலை பயிர் சுற்றுச்சூழலின் மூலம் நைட்ரஜனைப் பெறுகிறது. அதனால் நிலக்கடலைச் செடியின் ஆரம்ப வளர்ச்சி நிலையை அறிந்து தழைச்சத்தை கொடுக்க வேண்டும்.
வேர்க்கடலையின் நைட்ரஜன் தேவைகளை அடைவதற்கு ரைசோபியா என்னும் உயிரி ஊட்டச்சத்தை வழங்கவேண்டும். இதனை ஆரம்ப கட்டத்தில் 15-20 கிலோ/ஏக்கர் என்ற அளவில் பயன்படுத்தத் வேண்டும்.
அமோனியம் சல்பேட் | 20% தழைச்சத்து |
கால்சியம் அமோனியம் சல்பேட் | 26% தழைச்சத்து |
யூரியா | 46% தழைச்சத்து |
உலகளவில், நிலக்கடலை பயிருக்கு நிலையான வளர்ச்சிக்கு பொட்டாசியம் தேவைப்படுகிறது.
ஆனால் இந்திய மண்ணில் ஏற்கனவே பொட்டாசியம் நிறைந்துள்ளது.
சுமார் 150 கிலோ/எக்டருக்கு இயல்பாகவே மண்ணில் காணப்படுகிறது. மேலும் 50 கிலோ/எக்டர் (சாம்பல் சத்து) குறைபாட்டை பூர்த்தி செய்ய, பொட்டாசியம் சல்பேட் என்ற உரத்தை நிலக்கடலை விதைகளை விதைக்கும் கட்டத்தில் கலந்து கொடுக்கவும்.
நிலத்தடி தாவரத்தின் சாத்தியமான வளர்ச்சிக்கு, பாஸ்பரஸ் மண்ணுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். இது பயிர் முதிர்வு நிலைகளை மேம்படுத்துகிறது மற்றும் காய் நிறைவை அதிகரிக்கும்.
மெக்னீசியம் மற்றும் துத்தநாகத்துடன் கால்சியம் (19.5%), பாஸ்பரஸ் (16%), மற்றும் சல்பர் (12.5%) ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் சூப்பர் பாஸ்பேட் சிறந்தது. விதைக்கும் போது கடைசி உழவுடன் சூப்பர் பாஸ்பேட் என்ற உரத்தை இட்டு நன்கு கலக்கவும்.
அதாவது 25-30 கிலோ மணி சத்து நிலக்கடலை செடிக்கு கொடுக்கவேண்டும்.
தழைச்சத்து (எக்டர்) | சாம்பல் சத்து (எக்டர்) | மணிச்சத்து (எக்டர்) | சல்பர் (எக்டர்) |
25 கிலோ | 50கிலோ | 75கிலோ | 60 கிலோ |
உயிர் உரம் | அளவு (ஒரு எக்டருக்கு) |
---|---|
பாஸ்போபாக்டீரிய | 2 கிலோ |
ரைசோபியம் | 2 கிலோ |
கரிம உரம் என்பது நன்கு மக்கிய உரத்தின் மற்றொரு பெயர். இந்த உரம் தாவரங்களுக்கு போதுமான ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
நன்கு மக்கிய குப்பை மற்றும் தொழு உரங்கள் பொதுவாக நிலக்கடலை சாகுபடிக்கு விரும்பத்தக்க கரிம உரங்களாகும். மேலும் இதில் உள்ள நுண்ணுயிரிகள் நைட்ரஜன் அளவை சரிசெய்கிறது.
இயற்கைஉரங்கள் | அளவு (டன்/ எக்டர்) |
நன்கு மக்கிய தொழு உரம் | 5 டன் |
பசுந்தாள் உரம் | 3 டன் |
மண்புழு உரம் | 2.5 டன் |
வேப்பம்புண்ணாக்கு | 250கிலோ |
பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…
அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…