Crop

நிலக்கடலை சாகுபடி செய்வது எப்படி?

நிலக்கடலை – வேர்க்கடலை எனவும் அழைக்கப்படுகிறது. நிலக்கடலைச் செடி என்பது லெகுமினோசே குடும்பத்தின் துணைக் குடும்பமான பாபிலியோனேசியைச் சேர்ந்த ஒரு சுய-மகரந்தச் சேர்க்கை பயிராகும்.

நிலக்கடலை ஒரு முக்கியமான எண்ணெய் பயிராகும். மேலும் இது இந்தியாவில் உணவுப் பயிராக வளர்ந்து வருகிறது.

நிலக்கடலை விதை முளைத்தல்

  • விதை மூலம் பரவும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், நோய்க்கிருமிகள் மற்றும்  பல்வேறு பூச்சிகள் இருப்பதால், இதனால் நிலக்கடலை உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
  • இது ஒரு வெப்பமண்டல தாவரமாகும், இதற்கு ஒரு நீண்ட மற்றும் சூடான வளரும் பருவம் தேவைப்படுகிறது.
  • வளரும் பருவத்தில் 50 முதல் 125 செ.மீ வரை நன்கு மழைப்பொழிவு, ஏராளமான சூரிய ஒளி மற்றும் சூடான வெப்பநிலை ஆகியவற்றைப் பெறும் பகுதிகளில் இது நன்றாக வளரும்.
  • நிலக்கடலை விதை முளைத்தல், ஆரம்பகால தாவர வளர்ச்சி, பூக்கும் விகிதம், மற்றும் வளர்ச்சி, இவை அனைத்தும் வெப்பநிலைய சார்ந்தே உள்ளது.

விதை அளவு

  • கொத்து வகைகளில், வரிசைக்கு வரிசை தூரம் 30-40 செ.மீ மற்றும் பரவல் வகைகளில் 45 முதல் 60 செ.மீ.
  • ஒரு ஹெக்டேருக்கு 80-100 கிலோ விதைகள் கொத்து வகைகளுக்கும், 60 முதல் 80 கிலோ விதைகள் பரப்புவதற்கும் போதுமானது.

நிலக்கடலையின் விதைப்பு ஆழம்

நிலக்கடலைக்கு 50 மிமீ சிறந்த நடவு ஆழம். 50 முதல் 75 மிமீ வரையிலான சரியான நடவு ஆழம், செடியின் வளர்ச்சியை உறுதிசெய்கிறது. ஆழமாக நடவு செய்ததன் விளைவாக, முளைக்கும் ஒரு விதை வெளிவர அதிக நேரம் எடுக்கும் மற்றும் தரமற்ற செடி உற்பத்தி செய்யப்படும்.

நிலக்கடலையின் இடைவெளி

  • நிலக்கடலையில் விதை நெரிசல் முளைப்பு திறனை பாதிக்கும். எனவே சரியான இடைவெளி மிகவும் அவசியமாகும்.
  • விதைகளை மண்ணில் 4 செமீ ஆழத்தில் விதைக்க வேண்டும். வரிசைகளுக்கு இடையே 30 செ.மீ இடைவெளியும், நிலக்கடலை செடிகளுக்கு இடையே 10 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.
  • எங்கு நிலக்கடலை வளையம் மொசைக் (மொட்டு நெக்ரோசிஸ்) பரவலாக உள்ளதோ, அங்கு சுமார் 15cm x 15 செமீ இடைவெளியை பின்பற்றவும்.

விதை முளைப்பிற்கு ஏற்ற வெப்பநிலை

மண்ணின் வெப்பநிலை வரம்பு 19 டிகிரி செல்சியஸுக்குக் கீழே செல்லும் போது, ​​நாற்றுகள் முளைப்பது குறையும்.

நிலக்கடலையின் தாவர வளர்ச்சிக்கான உகந்த வெப்பநிலை வரம்பு சாகுபடியைப் பொறுத்து 26 முதல் 30ºC வரை இருக்கும். இனப்பெருக்க வளர்ச்சி அதிகபட்சமாக 24 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். காய்களின் அதிகபட்ச வளர்ச்சி விகிதம் 30 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், ஏனெனில் இதற்கு ஒரு மாதம் சூடான மற்றும் உலர் வானிலை தேவைப்படுகிறது.

நிலக்கடக்கடலை விதை நேர்த்தி

  • நிலக்கடலை விதைகளை விதைக்கு பயன்படுத்தும் போது, ​​அவற்றை பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் ரைசோபியம் கொண்டு விதை நேர்த்தி செய்வது மிகவும் முக்கியமானது. இரண்டு சிகிச்சைகளுக்கும் இடையே ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
  • 1 ஏக்கர்  நிலத்திற்கான விதைகளுக்கு 500-750 கிராம் ரைசோபியம் தேவைப்படும்.
  • விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, திரம் (3 கிராம்/கிலோ விதைகள்), மான்கோசெப் (3 கிராம்/கிலோ விதைகள்), அல்லது கார்பன்டாசிம் (2 கிராம்/கிலோ விதைகள்) ஆகியவற்றைக் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.
  • விதைக்கு குயினல்பாஸ் 25 இசி 25 மிலி அல்லது குளோர்பைரிஃபோஸ் 20 ஈசி 25 மிலி/கிலோ இது வெள்ளைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்.

விதையின் செயலற்ற நிலை

  • செயலற்ற விதைகளுக்கு பொதுவாக 60 முதல் 75 நாட்கள் வரை ஓய்வு  நாட்கள் வேண்டும்.
  • எத்ரலைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது விதைகளை பழுக்க வைக்கும் வாழைப்பழங்களுடன் 3 முதல் 4 நாட்களுக்கு, காற்று புகாத கொள்கலன்களில் சேமித்து வைப்பதன் மூலம் செயலற்ற நிலையை உடைக்கலாம்.
  • விதை முளைக்காமல் இருக்க மண்ணின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை மிக முக்கிய காரணங்களாகும். நிலக்கடலை முளைப்பு விதையின் ஈரப்பதம் 35 சதவிகிதத்திற்குக் கீழே இருந்தால் முளைப்பு தொடங்கப்படுவதில்லை.
  • விதையை 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 12 நாட்களுக்கு சேமித்து வைப்பது உறக்கநிலையை முற்றிலுமாக உடைத்துவிடும்.
  • எத்திலீனை வெளியிடும் எத்தரல் போன்ற செயற்கை வளர்ச்சிக் கட்டுப்படுத்திகள் 24 மணி நேரத்திற்குள் புதிதாக அறுவடை செய்யப்பட்ட செயலற்ற விதைகள் முளைப்பதை திறம்பட தூண்ட உதவும்.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025