நெற்பயிர் இந்தியாவின் மிக முக்கியமான உணவுப் பயிர்களில் ஒன்றாகும். இது மொத்தப் பயிரிடப்படும் பரப்பளவில் 1/4 பகுதியை உள்ளடக்கியது.
உலக மக்கள்தொகையில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசியை முதன்மை உணவாக உட்கொள்கின்றனர். உலக அரிசி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்த அரிசி உற்பத்தி 125 மில்லியன் டன்கள். 2022-23 ஆம் ஆண்டில் நெல் சாகுபடியின் மொத்த பரப்பளவு 45.5 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இதன் சராசரி உற்பத்தி 4.1 டன்/ஹெக்டர் ஆகும். இந்தியாவில், நெல் பெரும்பாலும் காரீப் பருவத்தில் வளக்கப்படுகிறது. இது வெப்பமண்டல மற்றும் துணை-வெப்பமண்டலம், வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் நன்றாக வளரும்.
அறிவியல் பெயர்: ஒரைசா சட்டைவா
நோய்க்காரணி: பைரிகுலேரியா ஒரைசே (இனப்பெருக்க நிலை: மேக்னபோர்தே கிரிசியா)
பாதிக்கும் நிலைகள்: அனைத்து பயிர் நிலைகளும் (நாற்றங்கால் முதல் தாமதமான மணி உற்பத்தி நிலை மற்றும் கதிர் உருவாகும் நிலை வரை பாதிக்கும்.
இது அரிசியின் மிகவும் அழிவுகரமான நோய்களில் ஒன்றாகும். இந்நோய் நெற்பயிர்களின் அனைத்து பகுதிகளையும், முக்கியமாக இலைகள், கழுத்து மற்றும் கணுக்களை பாதிக்கிறது. இது பயிரில் 70-80% மகசூலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீடித்த அல்லது அடிக்கடி மழைப்பொழிவு, குறைந்த மண்ணின் ஈரப்பதம், குளிர்ந்த வெப்பநிலை மற்றும் 93-99% அதிக ஈரப்பதம் உள்ள பகுதிகள், இந்த நோய்க்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
கான்டாஃப் பூஞ்சைக் கொல்லி | ஹெக்ஸகோனசோல் 5% EC |
நேட்டிவோ பூஞ்சைக் கொல்லி | டெபுகோனசோல் 50%+ ட்ரைஃப்ளோக்ஸிஸ்ட்ரோபின் 25% WG |
தனுகா காசு-பி பூஞ்சைக் கொல்லி | காசுகாமாசையின் 3% SL |
ஃபோலிகர் பூஞ்சைக் கொல்லிகள் | டெபுகோனசோல் 250 EC |
நோய் காரணி: சாந்தோமோனாஸ் ஒரைசே
பாதிக்கும் நிலைகள்: தூர் விடும் நிலை முதல் கதிர் உருவாகும் நிலை வரை
பெரும்பாலும் பாசன வடிகால் வசதி உள்ள நிலம் மற்றும் மானாவாரி தாழ்நிலங்களில் பாதிக்கிறது. 25-34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, 70%க்கு மேல் ஈரப்பதம், அதிக நைட்ரஜன் உரமிடுதல், பலத்த காற்று மற்றும் தொடர் மழை ஆகியவை நோய் தொற்றுக்கு சாதகமான சூழ்நிலைகளாகும்.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
ப்ளூ காப்பர் | காப்பர் ஆக்ஸி குளோரைடு 50% WP |
கிறிஸ்டோசைக்ளின் | ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 90% + டெட்ராசிலின் ஹைட்ரோகுளோரைடு 10% SP |
ஜியோலைஃப் ஜியோமைசின் | தாவர சாறுகளின் கூட்டு |
கோனிகா | கசுகாமைசின் 5% + காப்பர் ஆக்ஸி குளோரைடு 45% WP |
நோய்க்காரணி: சரோக்ளாடியம் ஒரைசே
பாதிக்கும் நிலைகள்: துவக்க இலை நிலை
வறண்ட காலங்களுடன் ஒப்பிடும்போது ஈரமான பருவங்களில், இது மிகவும் அதிகமாக தாக்கக்கூடியது. அதிக நைட்ரஜன் உரமிடுதல், காயங்கள் மற்றும் புண்கள் கொண்ட தாவரங்கள், அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை 20-28 டிகிரி செல்சியஸ், நெருக்கமான நடவு அடர்த்தி ஆகியவை நோய் பரவலுக்கு சில சாதகமான சூழ்நிலைகளாகும்.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
தனுஸ்டின் பூஞ்சைக் கொல்லி | கார்பென்டாசிம் 50% WP |
கவாச் பூஞ்சைக் கொல்லி | குளோரோதலோனில் 75% WP |
டாடா மாஸ்டர் பூஞ்சைக் கொல்லி | மெட்டாலாக்சில் 8% + மான்கோசெப் 64% WP |
கோனிகா | கசுகாமைசின் 5% + காப்பர் ஆக்ஸி குளோரைடு 45% WP |
நோய்க்காரணி: ஹெல்மின்தோஸ்போரியம் ஒரைசே
பாதிக்கும் நிலைகள்: நாற்றங்கால் முதல் நெல்மணியில் பால்பிடிக்கும் நிலை வரை
86-100% ஈரப்பதம், 16-36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, பாதிக்கப்பட்ட விதைகள், களைகள், பாதிக்கப்பட்ட தண்டுகள் ஆகியவை நோய் தொற்றுக்கு சாதகமான சில சூழ்நிலைகளாகும்.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
டில்ட் பூஞ்சை கொல்லி | ப்ரோபிகோனசோல் 25% EC |
கான்டாஃப் பிளஸ் பூஞ்சைக் கொல்லி | ஹெக்ஸகோனசோல் 5% SC |
மெர்ஜர் பூஞ்சைக் கொல்லி | ட்ரைசைக்லசோல் 18 % + மான்கோசெப் 62% WP |
கொடிவா சூப்பர் பூஞ்சைக் கொல்லி | அசோக்ஸிஸ்ட்ரோபின் 18.2%+ டைபெனோகோனசோல் 11.4% SC |
நோய்க்காரணி: உஸ்டிலாஜினாய்டியா வைரன்ஸ்
பாதிக்கும் நிலைகள்: பூக்கும் நிலை முதல் முதிர்ச்சி அடையும் நிலை வரை
25-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, 90% க்கு மேல் ஈரப்பதம், அதிக நைட்ரஜன் உரமிடுதல், அதிக மழை மற்றும் காற்று ஆகியவை இத்தொற்றுக்கு சாதகமான சூழ்நிலைகளாகும்.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
அமிஸ்டார் டாப் பூஞ்சைக் கொல்லி | அசோக்ஸிஸ்ட்ரோபின் 18.2%+ டைபெனோகோனசோல் 11.4% SC |
ரோகோ பூஞ்சைக் கொல்லிகள் | தியோபனேட் மெத்தில் 70% WP |
கஸ்டோடியா பூஞ்சைக் கொல்லி | அசோக்ஸிஸ்ட்ரோபின் 11% + டெபுகோனசோல் 18.3% SC |
B கன்ட்ரோல் பூஞ்சைக் கொல்லி | வாலிடாமைசின் 3% L |
நோய்க்காரணி: ரைசோக்டோனியா சோலானி
பாதிக்கும் நிலைகள்: தூர் பிடிக்கும் நிலை முதல் நெல்மணி உருவாகும் நிலை வரை
மழைக் காலங்களில் இந்நோய் பரவுவது அதிகம். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம், அதிக நைட்ரஜன் உரமிடுதல், நெருக்கமாக நடவு ஆகியவை இந்நோய் தொற்றுக்கு சாதகமான சூழ்நிலைகள்.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
ஃபோலிகர் பூஞ்சைக் கொல்லிகள் | டெபுகோனசோல் 250 EC |
கஸ்டோடியா பூஞ்சைக் கொல்லி | அசோக்ஸிஸ்ட்ரோபின் 11% + டெபுகோனசோல் 18.3% SC |
பாவிஸ்டின் பூஞ்சைக் கொல்லி | கார்பென்டாசிம் 50% WP |
டாடா அயன் பூஞ்சைக் கொல்லி | கிரசாக்சிம்-மெத்தில் 40%+ ஹெக்ஸகோனசோல் 8% WG |
நோய்க்காரணி: நெல் துங்ரோ பெஸ்லிஃபாம் வைரஸ் (RTBV) மற்றும் நெல் துங்ரோ ஸ்பெரிகல் வைரஸ் (RTSV)
பாதிக்கும் நிலைகள்: அனைத்து வளர்ச்சி நிலைகள் குறிப்பாக தாவர வளர்ச்சி நிலையில் தாக்கும்
திசையன் (வெக்டர்): இலை தத்துப்பூச்சி
வளர்ச்சி குன்றிய செடிகள்,இலைகளில் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறமாக மாறுதல்.
வயலில் உள்ள திசையன்கள், வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட தண்டுகள் மற்றும் களைகள் போன்றவை RTV தொற்றுக்கு சாதகமான சூழ்நிலைகள்.
(குறிப்பு: நெல் துங்ரோ வைரஸால் பயிர் பாதிக்கப்பட்டிருந்தால், அதை நிர்வகிக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியாது. கீழேயுள்ள தயாரிப்பை பயன்படுத்தி, திசையன்களைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் நெல்லில் மேற்கொண்டு வைரஸ் பரவாமல் தடுக்கலாம்).
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
செஸ் பூச்சிக்கொல்லி | பைமெட்ரோசின் 50% WDG |
லாரா 909 பூச்சிக்கொல்லி | குளோரோபைரிபாஸ் 50% + சைபர்மெத்ரின் 5% EC |
அன்ஷுல் லக்ஷ் பூச்சிக்கொல்லி | லாம்டாசைக்லோத்திரின் 5% EC |
அனந்த் பூச்சிக்கொல்லி | தியாமெதோக்சம் 25% WG |
நோய்க்காரணி: ஜிப்பரெல்லா ஃபுஜிகுரோய்
தாக்கும் நிலைகள்: நாற்றங்கால் முதல் தூர் விடும் நிலை வரை
பாதிக்கப்பட்ட விதைகள், வலுவான காற்று மற்றும் தண்ணீர், இந்நோய் தொற்றுக்கு சாதகமான நிலைமைகளாகும்.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
ரோகோ பூஞ்சைக் கொல்லிகள் (விதை நேர்த்தி) | தியோபனேட் மீத்தில் 70% WP |
கம்பேனியன் பூஞ்சைக் கொல்லி | மான்கோசெப் 63% + கார்பென்டாசிம் 12% WP |
நேட்டிவோ பூஞ்சைக் கொல்லி | டெபுகோனசோல் 50%+ ட்ரைஃப்ளோக்ஸிஸ்ட்ரோபின் 25% WG |
டாடா அயன் பூஞ்சைக் கொல்லி | கிரசாக்சிம்-மெத்தில் 40%+ ஹெக்ஸகோனசோல் 8% WG |
நோய்க்காரணி: ஸ்க்லிரோடியம் ஒரைசே
பாதிக்கும் நிலைகள்: ஆரம்ப தூர் உருவாகும் நிலை
அதிக நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்துதல், பாதிக்கப்பட்ட தண்டுகள், பூச்சி தாக்குதலின் விளைவாக காயங்கள் உள்ள தாவரங்கள் ஆகியவை நோய் தொற்றுக்கு சாதகமான சூழ்நிலைகளாகும்.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
பாவிஸ்டின் பூஞ்சைக் கொல்லி | கார்பென்டாசிம் 50% WP |
அவென்சர் க்ளோ பூஞ்சைக் கொல்லி | அசோக்ஸிஸ்ட்ரோபின் 8.3% + மான்கோசெப் 66.7% WG |
அவ்தார் பூஞ்சைக்கொல்லி | ஜினெப் 68% + ஹெக்ஸகோனசோல் 4% |
B-கன்ட்ரோல் பூஞ்சைக் கொல்லி | வாலிடாமைசின் 3% L |
பாதிக்கும் நிலைகள்: அனைத்து வளர்ச்சி நிலைகளும் பாதிக்கும், ஆனால் தூர் பிடிக்கும் நிலையில் மிக அதிகம்.
திசையன் (வெக்டர்): புகையான் (BPH)
நெல் தொடர்ந்து பயிரிடப்படும் பகுதிகள் மற்றும் ஆண்டு முழுவதும் நோய்த் தொற்று பரவுவதற்கு உதவும் திசையன்களை பரப்புவதற்கு சாதகமான சூழ்நிலையில் உள்ள நிலம்.
(குறிப்பு: நெற்பயிர் புல்தழை குட்டை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை நிர்வகிக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியாது. திசையன்கள் பிரவுன் பிளாண்ட் ஹாப்பரை (BPH) கட்டுப்படுத்தவும், நெல் வயலில் மேற்கொண்டு வைரஸ் பரவாமல் தடுக்கவும், கீழே உள்ள பொருட்களைப் பயன்படுத்தலாம்.)
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
லான்சர் கோல்டு பூச்சிக்கொல்லி | அசிபேட் 50% + இமிடாக்ளோபிரிட் 1.8% SP |
பிரிடேட்டர் பூச்சிக்கொல்லி | குளோரோபைரிபாஸ் 50 % EC |
காத்யாயனி BPH சூப்பர் பூச்சிக்கொல்லி | பைமெட்ரோசின் 50% WG |
ஓடிஸ் பூச்சிக்கொல்லி | புப்ரோஃபெசின் 20%+ அசிபேட் 50% |
நோய்க்காரணி: நெல் காய்ந்த குட்டை வைரஸ்
பாதிக்கும் நிலைகள்: அனைத்து வளர்ச்சி நிலைகளும் பாதிக்கும், ஆனால் தூர் பிடிக்கும் நிலையில் மிக அதிகம்.
திசையன் (வெக்டர்): புகையான் (BPH)
நெல் தொடர்ந்து பயிரிடப்படும் பகுதிகள் மற்றும் ஆண்டு முழுவதும் நோய்த் தொற்று பரவுவதற்கு உதவும் திசையன்களை பரப்புவதற்கு சாதகமான சூழ்நிலையில் உள்ள நிலம்.
(குறிப்பு: நெற்பயிர் காய்ந்த குட்டை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை நிர்வகிக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியாது. திசையன்கள் பிரவுன் பிளாண்ட் ஹாப்பரை (BPH) கட்டுப்படுத்தவும், நெல் வயலில் மேற்கொண்டு வைரஸ் பரவாமல் தடுக்கவும், கீழே உள்ள பொருட்களைப் பயன்படுத்தலாம்.)
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
லான்சர் கோல்டு பூச்சிக்கொல்லி | அசிபேட் 50% + இமிடாக்ளோபிரிட் 1.8% SP |
பிரிடேட்டர் பூச்சிக்கொல்லி | குளோரோபைரிபாஸ் 50 % EC |
காத்யாயனி BPH சூப்பர் பூச்சிக்கொல்லி | பைமெட்ரோசின் 50% WG |
ஓடிஸ் பூச்சிக்கொல்லி | புப்ரோஃபெசின் 20%+ அசிபேட் 50% |
பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…
அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…