Crop

பருத்தி இயற்கை மற்றும் ரசாயன உரமேலாண்மை

பருத்தி பயிர் உலகளவில் அதிக தேவை விகிதத்துடன் வளரும் வணிகப் பயிராகும். பருத்தி விவசாயிகள் கூறுகையில், உரங்கள் என்பது வளரும் பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். 

குறிப்பாக பருத்தி பயிருக்கு மண் மற்றும் நீர்ப்பாசனம் மூலம் தொடர்ந்து ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்பட வேண்டும். கரிம உரங்கள் மற்றும் உயிர் உரங்களை பாசன நீருடன் கலந்து பருத்தி செடிக்கு கொடுக்க வேண்டும். அவற்றைப் பற்றி விரிவாகப் படிப்போம்.

பருத்தி சாகுபடிக்கு ஏற்ற சிறந்த உரங்கள்

இயற்கை உரங்கள்

பருத்தி விதைகளை விதைப்பதற்கு முன் கரிம உரங்களை இணைப்பது மண்ணின் வளத்தையும் தரத்தையும்  அதிகரிக்க உதவுகிறது, மேலும் அடுத்த சுற்று உரங்களை நட்ட பிறகு கரிம வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் சிறந்த மகசூலுக்கு தழைச்சத்தை மண்ணில் சேர்க்கிறது.

நன்கு மக்கிய தொழு உரம்

  • பண்ணை தொழு  உரம் மற்றும் மக்கிய குப்பை உரம், இவ்விரண்டும் மண் வளம் போன்ற கரிம வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும்  மற்றும் பருத்தி சாகுபடியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கி பெரும் பங்களிப்பை அளிக்கிறது.
  • பருத்திக்கு ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ உயிர் உரம் இதனுடன் 5 டன் பண்ணை எருவை கலந்து விதைப்பதற்கு 15-20 நாட்களுக்கு முன்பு மண்ணில் இடுவது மண்ணின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள்

  • தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் ஆகியவை இணைந்து மண்ணின் ஊட்டச்சத்து அளவை சமன் செய்து பருத்தி வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. இது தாவர வளர்ச்சிக்கும் பருத்தியின் வளர்ச்சிக்கும் தேவையான மண்ணில் அத்தியாவசிய மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களாக செயல்படுகிறது.
  • பாசன நீருடன் கரிம மற்றும் கனிம உரங்களைப் பயன்படுத்துவது விதை வளர்ச்சி, மண்ணின் காற்றோட்டம், மண்ணின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் ஆகியவற்றை கூட்டாக ஊக்குவிக்க உதவும். மேலும் பயிர் வளர்ச்சி மற்றும் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

உயிர் உரம்

  • உயிர் உரங்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை நேரடியாக ஆதரிக்கின்றன மற்றும் நிலத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை பருத்தி பயிருக்கு எளிய முறையில் கிடைக்க உதவுகிறது. மேலும் உயிர் உரங்களைச் சேர்ப்பதால் மண்ணில் நுண்ணுயிர் செயல்பாடு அதிகரிக்கிறது, மண் ஆரோக்கியம் மற்றும் பயிர் மகசூல் அதிகரிக்கிறது.
  • உயிர் உரங்கள் மண்ணின் ஆரோக்கியத்திற்கும் வளத்தை அதிகப்படுத்தவும் உதவுகின்றன. இது கனிம உரங்களுடன் ஒப்பிடும்போது மண்ணில் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் செடியின் வளர்ச்சியின் அளவை 25-30% அதிகரிக்கிறது. உயிர் உரங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் மண் மற்றும் பயிர் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன.

திரவ இயற்கை உரம்

பருத்தியை நடவு செய்த பிறகு, ஊட்டச்சத்து அளிப்பதை அதிகரிப்பது மிகவும் அவசியமாகும், பருத்தியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் அதனின் மகசூலை அதிகப்படுத்தவும்  உரமிடுதல் அவசியமாகும். 

பசுவின் சிறுநீர், ஜீவாமிருதம், செறிவூட்டப்பட்ட உரங்கள், மண்புழு கழிவு நீர் ஆகியவையும் நீர்ப்பாசனத்துடன் கொடுக்க வேண்டும், இது பயிர்களுக்கு விரைவான ஊட்டச்சத்தை வழங்குகிறது.

பருத்தியில் ரசாயன உரங்களின் பயன்பாடு

  • உரங்களைப் பயன்படுத்துதல் மூன்று நிலைகளில் செய்யப்படலாம், அதாவது பயிரின் முக்கியமான கட்டங்களான இலை தொடங்கும் நிலை, காய் காய்க்கும் நிலை மற்றும் பூக்கும் நிலை.
  • பண்ணை மண் பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில், ரசாயன உரங்களுக்கான பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பருத்திக்கான பொதுவான பரிந்துரையில், ஏக்கருக்கு 50:30:35 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கொடுக்கவேண்டும்.

பருத்தி சொட்டுநீர் பாசன அட்டவணை

கடைசி உழவின் போது நன்கு மக்கிய எரு 10 டன், டிஏபி 30 கிலோ, மியூரேட் ஆப் பொட்டாஷ் 25 கிலோ, யூமிக் ஆசிட் பவுடர் 500 கிராம் மற்றும் மைக்ரோ நியூட்ரியண்ட் 10 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் இடவும். 

நாட்கள் உரம் அளவு இடைவெளி
1-30 19:19:19

யூமிக் பவுடர் 

8 கிலோ

500 கிராம் 

10 நாட்கள் இடைவெளியில் 3 முறை
30-50 12:56:00

நுன்னூட்டம் 

8 கிலோ

1 கிலோ 

10 நாட்கள் இடைவெளியில் 2 முறை
50 நாட்களுக்கு மேல் 00:52:34

13:00:45

5கிலோ

5 கிலோ  

தொடர்ந்து 7 நாட்களுக்கு 1 முறை

 

மேலும் பருத்தியில் அதிக எண்ணிக்கையிலான பூக்களை/ காய்களை பெற செடி பூ பூக்க தயாராகும் தருணத்தில் அமைனோ ஆசிட் @ 25 மில்லி மற்றும் சிலேட்டட் மைக்ரோ நியூட்ரியண்ட் @ 20 கிராம்/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும். 

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024