Crop

பூக்கும் மற்றும் பழம் காய்க்கும் கட்டத்தில் தக்காளி செடிக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள்

தக்காளி விவசாயிகள், எப்பொழுதும் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்து, நமது பயிர்களின் மகசூலை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். இதை, அடைவதற்கான ஒரு வழி, முக்கியமான கட்டமாகக் கருதப்படும்‌ பூக்கும் மற்றும் பழம் காய்க்கும் நிலைகளில் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களைப் பயன்படுத்துவதே ஆகும். 

இந்தக் கூறுகள் வலுவான தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், பூக்கள் மற்றும் பழங்களின் உற்பத்தியை மேம்படுத்துவதிலும், இறுதியில் நமது தக்காளி அறுவடையை அதிகரிப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

இந்தக் கட்டுரையில், தக்காளி செடிகளுகளில் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பயன்பாடுகளைப் பற்றியும், தக்காளி பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலை மேம்படுத்த, அவற்றின் பரிந்துரைகளைப் பற்றியும் ஆராய்வோம்.

தாவர வளர்ச்சி ஊக்கிகள் (PGR)

தாவர வளர்ச்சி ஊக்கிகள் என்பது தாவரங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தும் இரசாயனப் பொருட்களே ஆகும். அவை தாவர வளர்ச்சி ஹார்மோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

தாவர வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

  • அவை, தாவர வளர்ச்சியைக் குறைத்து, இனப்பெருக்க வளர்ச்சியைத் தூண்டுவதினால், பூ மற்றும் பழ உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும்.
  • ‘பைட்டோஹார்மோன்கள்’ என்றும் குறிப்பிடப்படும் இந்த வளர்ச்சி ஊக்கிகள், தாவரங்களின் வளர்ச்சி விகிதத்தை துரிதப்படுத்தும் அல்லது குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
  • அவை, இலைகள், பூக்கள், தண்டுகள் மற்றும் பழங்கள் பழுக்க வைப்பதை எளிதாக்குகின்றன.

குறிப்பு

உங்கள் பயிரின் குறிப்பிட்ட தேவைகளைக் கருத்தில் கொண்டு, தாவர வளர்ச்சி ஊக்கிகளை கவனமாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியமானது.

பரிந்துரைக்கப்பட்ட தாவர வளர்ச்சி ஊக்கிகள்

டபோலி

  • இரசாயன உள்ளடக்கம்: பேக்லோபுட்ராசோல் 40%, பேக்லோபுட்ராசோல் (PBZ)
  • மருந்தளவு: ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.15 முதல் 0.3 மில்லி வரை இலையின் மீது தெளிக்கலாம் (அல்லது) சொட்டு நீர் பாசனத்திற்கு ஏக்கருக்கு 25 முதல் 30 மி.லி. வரை பயன்படுத்தலாம்.

மிராகுலின்

  • இரசாயன உள்ளடக்கம்: ட்ரைஅகாண்டனால் 0.05% EC
  • மருந்தளவு: ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.75 மி.லி வரை இலையின் மீது தெளிக்கலாம் (அல்லது) சொட்டு நீர் பாசனத்திற்கு ஏக்கருக்கு 150 மி.லி. வரை பயன்படுத்தலாம்.

நுண்ணூட்டச்சத்துக்கள்

நுண்ணூட்டச்சத்துக்கள் தாவரங்களுக்கு உகந்த வளர்ச்சிக்கு சிறிய அளவில் தேவைப்படும் அத்தியாவசியமான கூறுகளாகும். செடிகளின் முக்கியமான கட்டங்களாக கருதப்படும் பூக்கும் மற்றும் பழம் காய்க்கும் நிலைகளில்,  நுண்ணூட்டச்சத்துக்களைப் பயன்படுத்துவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நுண்ணூட்டச்சத்துகளின் முக்கியத்துவம்

இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஒளிச்சேர்க்கை, புரதத் தொகுப்பு மற்றும் நைட்ரஜன் நிலைப்படுத்தல் போன்ற அடிப்படை செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த செயல்முறைகள் ஒவ்வொன்றும் தக்காளி பயிர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.

பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்டச்சத்துக்கள்

ஷாம்ராக் ஆம்பாக்சிலின் காம்பி 2 மல்டி நுண்ணூட்டச்சத்துக்கள்

  • தொழில்நுட்ப உள்ளடக்கம்: மூலக்கூறுகளுடன் பிணைக்கப்பட்ட பல நுண்ணூட்டச்சத்துக்களின் உரம்.
  • மருந்தளவு: ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் இலையின் மீது தெளிக்கலாம் (அல்லது) சொட்டு நீர் பாசனத்திற்கு தினம்தோறும் ஏக்கருக்கு 30 கிராம்  வரை பயன்படுத்தலாம்.

மல்டிபிளக்ஸ் சமாக்

  • தொழில்நுட்ப உள்ளடக்கம்: கால்சியம் & போரான்
  • மருந்தளவு: ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் இலைவழியாகப் பயன்படுத்தவும்.

மல்டிபிளக்ஸ் சல்பர் திரவம்

  • தொழில்நுட்ப உள்ளடக்கம்: சல்பர் 20%
  • மருந்தளவு: ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் இலைவழியாகப் பயன்படுத்தவும்.

தல்வார் ஜிங்க் சூப்பர் 14

  • தொழில்நுட்ப உள்ளடக்கம்: ஜிங்க் EDTA 12%
  • மருந்தளவு: ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 முதல் 1.5 கிராம் வரை இலைவழி தெளிக்கவும்.

குறிப்பு

உகந்த பலன்களை பெற ஒவ்வொரு தயாரிப்புக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் மற்றும் பயன்பாட்டு முறைகளைக் கடைபிடிப்பது அவசியமானது.

முடிவுரை

பூக்கும் மற்றும் பழம் காய்க்கும் நிலைகளின் போது, உங்கள் தக்காளி செடிகளை நன்றாக வளர்ப்பது, ஆரோக்கியமான மற்றும் ஏராளமான அறுவடையை அடைவதே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் செடிகளின் வளர்ச்சியை பெருக்கலாம் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பழங்களின் தரத்தை மேம்படுத்தலாம். இதன் மூலம் வெற்றிகரமான தக்காளி அறுவடையை அடையலாம்.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025