Crop

மக்காச்சோளம் சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் செய்வது எப்படி?

மக்காச்சோளம் உலகளவில் அதிக பயன்களைக் கொண்ட பயிராகும். உலகளவில் மக்காச்சோளம் உற்பத்தியில் 7வது நாடாக இந்தியா உள்ளது. 2021-2022 ஆண்டுகளில் மட்டும் இந்தியா 3,690,469.12 மெட்ரிக் டன் மக்காச்சோளத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன் மதிப்பு  ரூ. 7,615.46 கோடி. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகியவை இந்தியாவின் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் மாநிலங்களாகும். மக்காச்சோளம் பல நன்மைகளைக் கொண்டுள்ளதால், இதனை ஜம்மு காஷ்மீர் மற்றும் பல வடகிழக்கு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

சிரம நிலை: நடுத்தரம்

விதைகள் தேர்வு

இந்தியாவில் ஏறத்தாழ 3000 மக்காச்சோளம் ரகங்கள் உள்ளது. அம்ப்ரோசியா ஹைப்ரிட் கார்ன், ஜூபிலி ஹைப்ரிட் கார்ன், ஹனி செலக்ட் ஹைப்ரிட் கார்ன், கோல்டன் பாண்டம் கார்ன், டிகல்ப் (டிகேசி 9178 மற்றும் டிகேசி 9081), சின்ஜெண்டா (என்.கே 7328 மற்றும் என்.கே 30), டாடா (3818), சிபி (3818) ‘(டி.எம்.எச் 8255), அட்வாண்டா (ஹை-பிரிக்ஸ் 53), காவேரி விதைகள் (கே.எம்.எச் 1411) மற்றும் ஹைடெக் சோனா – 5101 போன்றவை இந்தியாவின் பிரபலமான ரகங்களாகும்.

விதைகளை ஊறவைத்தல்

மக்காச்சோள விதைகளை அறுவடைக்குப் பிறகு சேமிப்பிற்காக உலர வைப்பது போலவே, மக்காச்சோள விதைகளின் நல்ல முளைப்பிற்கு, அதனைத் தண்ணீரில் ஊறவைப்பது அவசியமாகும்.

மக்காச்சோளம் விதை நேர்த்தி

மக்காச்சோள விதைகளை கறையான்கள் மற்றும் மற்ற மண்மூலம் தாக்கும் பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க, இவற்றை இமிடாக்ளோபிரிட் 17.8% எஸ்.எல் என்ற மருந்தை 4 கிராம்/ ஒரு கிலோ விதை என்ற அளவில் கலந்து விதைக்கவும்.

விதை மூலம் பரவக்கூடிய நோயைக் கட்டுப்படுத்த, விதைகளை கார்பேன்டாசிம் அல்லது திறம் என்ற மருந்தை 2 கிராம்/ ஒரு கிலோ விதை என்ற அளவில் கலந்து நேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு செய்வதனால் விதை மூலம் பரவும் நோயான சாம்பல் அழுகல் நோய், அடி சாம்பல் நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம். இந்த மருந்துகளுடன் நேர்த்தி செய்த பிறகு, இவற்றை நிழலில் 15 நிமிடம் உலரவைத்த பிறகு விதைக்கலாம்.

மக்காச்சோள பயிருக்கான மண் வகை

நன்கு வடிகால் உலகிய மணல் கலந்த செம்மண் அல்லது களிமண் மக்காச்சோளம் நடவு செய்ய ஏற்றதாகும்.

மண்ணின் கார-அமிலத்தன்மை

மக்காச்சோளம் அதனின் ரகத்தைப் பொறுத்து 5.5 – 7.5 என்ற  கார-அமிலத்தன்மை அளவு கொண்ட மண்ணில் விதைக்கலாம். மேலும் இதற்கு ஏற்றதாக 6 – 6.5 கார-அமிலத்தன்மை இருக்க வேண்டும்.

மக்காச்சோளம் நிலம் தயாரித்தல்

நிலத்தை 3-4 முறை நன்கு உழுது நல்ல கட்டிகள் இல்லாதவாறு நிலத்தைத் தயார் செய்ய வேண்டும். இறுதி உழவின் போது நன்கு மக்கிய தொழு உரம் 12.5 டன்/ ஏக்கர் என்ற அளவில் கொடுக்கவும். மேலும் இதனுடன் 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் ஒரு ஏக்கர் என்ற அளவில் கொடுக்கவும். பிறகு விதைப்பதற்கு 45 செ.மீ இடைவெளியில் கால்களை தயார் செய்ய வேண்டும்.

மக்காச்சோளம் விதைப்பு

மக்காச்சோளம் விதைகளை நேரடியாக வயலில் விதைக்கலாம். நடவு காலின் கீழே இருந்து 1/3  உயரத்தில் விதைகளை விதைக்கவேண்டும்.

முடிவுரை

மக்காச்சோள பயிரை நீர் வசதி இருப்பின் நாடு முழுவதும் பயிர் செய்யலாம். இதற்கு அதிக தேவை இருப்பதால் குறைந்த பராமரிப்பில் அதிக மகசூல் மற்றும் லாபத்தை எடுக்கலாம். மேலும் நெல் மற்றும் கரும்பு சாகுபடியுடன் ஒப்பிடுகையில், இதற்குக் குறைந்த தண்ணீர் மட்டுமே தேவைப்படும். இதனால் குறைந்த செலவில் அதிக லாபத்தைப் பெறலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  1. பிரபலமாக பயன்படுத்தப்படும்  மக்காச்சோள இரகங்களைப் பரிந்துரைக்கவும்?
மாநிலம் இரகங்கள் / கலப்பின வகைகள்
ஆந்திர பிரதேசம்

 

 

ஷைன் ஹைபிரிட் மக்காச்சோள விதைகள், பயனியர் அக்ரோ சோள விதை/ மக்காச்சோள விதை, ரைஸ்-303 ஷைன் கலப்பின மக்காச்சோள விதைகள், ரைஸ் அக்ரோ ரைஸ்-303 ஷைன் கலப்பின மக்காச்சோள விதைகள்
தெலுங்கானா

 

பயனியர்அஃரோ் சோள விதை/ மக்காச்சோள விதை, ஷைன் கலப்பின மக்காச்சோள விதைகள்
கர்நாடக

 

ரைஸ்-303 ஷைன் கலப்பின மக்காச்சோள விதைகள், பயனியர் வேளாண் சோள விதை / மக்காச்சோள விதை, சோள விதை (மக்காச்சோள விதை), ரைஸ்-202 ஷைன் கலப்பின மக்காச்சோள விதைகள், ஷைன் கலப்பின மக்காச்சோள விதைகள் ரைஸ்-404 விதைகள்
தமிழ்நாடு

 

பயனியர் அஃரோ சோள விதை / மக்காச்சோள விதை

 

 

2. மக்காச்சோள விதைகளுக்கு விதை நேர்த்தி செய்வது எப்படி?

மக்காச்சோள விதைகளை ஃபோர்டென்சா டுவோ பூச்சிக்கொல்லியுடன் 4 மில்லி/கிலோ விதைகள் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும். இது முக்கியமாக படைப்புழுவைக் கட்டுப்படுத்தும். 

  1. மணல் சார்ந்த மண்ணில் மக்காச்சோளம் பயிரிட முடியுமா?

மக்காச்சோள உற்பத்திக்கு நன்கு வடியக்கூடிய, மணற்பாங்கான செம்மண் அல்லது கருப்பு பருத்தி மண் ஏற்றது. 

  1. மக்காச்சோளத்திற்கான விதை விகிதம் என்ன?
  • கலப்பின வகைகளுக்கு – 7 – 9 கிலோ/ஏக்கர்
  • தீவன சோள வகைகளுக்கு – 16 – 20 கிலோ/ஏக்கர்
  1. மக்காச்சோளத்தின் விளைச்சலுக்கு உகந்த இடைவெளி என்ன?

ஒரு செடிக்குசெடிக்கும் இடையே 20 செ.மீ , நடவு வரிசைக்கு இடையே      60 செ.மீ  இருக்கவேண்டும். 

 6. மக்காச்சோள பயிருக்கான உரம் பரிந்துரையின் அளவு என்ன?

மக்காச்சோளத்திற்கான உரம் பரிந்துரை அளவு 60:26:26 கிலோ/ஏக்கர். அதன் வயலில் பயன்படுத்தக்கூடிய அளவு கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

ஊட்டச்சத்து உரங்கள் அளவு (ஒரு ஏக்கருக்கு)
இயற்கை/கரிம தொழு உரம் / தென்னை நார்க்கழிவு மட்கு உரம் 5 டன்
தழை சத்து யூரியா (அல்லது) 109 கிலோ
அம்மோனியம் சல்பேட் 244 கிலோ
மணி சத்து டை அம்மோனியம் பாஸ்பேட் 56 கிலோ
சாம்பல் சத்து மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (அல்லது) 43 கிலோ
சல்பேட்  ஆஃப் பொட்டாஷ் 52 கிலோ
ஜிங்க் (ஜிங்க் பற்றாக்குறை மண்)

 

ஜிங்க் நுண்ணூட்ட உரம் (Z3) இலைவழி தெளிப்பு: 0.5 – 1 கிராம்/லிட்டர்

மண்ணிற்கான பரிந்துரை: 10 கிலோ 

 

இரும்பு (இரும்புச்சத்து குறைபாடுள்ள மண்ணுக்கு) ஷாம்ராக் இரும்பு செலேட்டட் நுண்ணூட்டச்சத்து இலைவழி தெளிப்பு: 1 கிராம்/லிட்டர்

மண்ணுக்கானப் 

 பரிந்துரை: 10 கிலோ 

உயிர் உரம் அசோஸ்பைரில்லம் (பயனியர் அஃரோ) மண்ணுக்கானப்

 பரிந்துரை: 4 கிலோ 

 

  1. மக்காச்சோளம் வயலில் களை முளைப்பதற்கு முன்பு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி எது?

விதைகளை விதைத்து 3 – 5 நாட்கள் பிறகு அட்ராடாஃப் (அட்ராசைன் 50 WP) களை கொல்லியை 1 – 2 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். இதை தொடர்ந்து விதை விதைத்து 30 – 35 நாட்களில் கையால் களை எடுக்கவும். 

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024