Crop

மார்ச் முதல் ஜூன் வரை பயிரிடப்படும் கோடை அல்லது ஜெய்த்(Zaid) பயிர்கள்

இந்தியா, பல்வேறு தட்பவெப்ப காலநிலைகளைக் கொண்ட நாடாக இருப்பதால், விவசாயத்தில் பல பருவங்கள் உள்ளன. பயிர்களின் நடவு நேரம் ஆனது, பயிர் வகை, பருவங்கள், பகுதி மற்றும் காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவில், பயிர்கள் பொதுவாக கரீஃப், ரபி மற்றும் ஜெய்த் என்று மூன்று பருவங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. கரீஃப் பருவம் என்பது மழைக்காலப் பருவம் எனவும் அழைக்கப்படுகிறது. இது பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும். ரபி பருவம் அல்லது குளிர்காலப் பருவம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தைக்  குறிக்கிறது. ஜெய்த் அல்லது கோடைக்கால பயிர்ச்செய்கை மார்ச் முதல் ஜூன் வரையிலான பருவகாலத்தைக் கொண்டது. இந்தியாவில் விவசாயத்தின் வெவ்வேறு பருவங்களால் ஆனது, விவசாயிகள் தங்கள் பயிர்கள் மற்றும் வருமான ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது நாட்டின் ஒட்டுமொத்த விவசாய வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.

2017-18 ஆம் ஆண்டில் 29.71 லட்சம் ஹெக்டேர்களாக இருந்த கோடை அல்லது ஜெயித் பயிர்களின் சாகுபடி பரப்பளவு படிப்படியாக 2.7 மடங்கு அதிகரித்து 2020-21 ஆம் ஆண்டில் 80.46 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. சரியான மேலாண்மை, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் சரியான பயிரில் மூலதனத்தை உபயோகப்படுத்துவதன் மூலமும், விவசாயிகள் தங்களின் மகசூலை மற்றும் கோடை காலத்தில் லாப வரம்புகளையும் அதிகரிக்கலாம்.

ஜெய்த்(Zaid) அல்லது கோடைக்காலப் பயிர் பருவம்

ஜெய்த் பயிர்கள் மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் பயிரிடப்படும் பயிர்கள். அவை குறுகிய காலப் பயிர்களாகும். பெரும்பாலும் இந்தக் காலத்தில் கலப்பின வகைகளையே பயிரிடுகின்றனர். சூடான மற்றும் வறண்ட கால நிலைக்கு உகந்த கோடைகாலப் பயிர்களே இந்த பருவத்தில் பயிரிடப்படுகிறது. ஒரு சில பயிர்களுக்கு, அதன் தாவர வளர்ச்சிக்கு வெப்பமான காலநிலையும் மற்றும் இனப்பெருக்க வளர்ச்சிக்கு நீண்ட நாள் பருவமும் (அதிக நேரம் சூரிய ஒளி) தேவைப்படுகிறது. அவ்வகையான பயிர்கள் வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம்பழம், வெண்டைக்காய், பாகற்காய், கத்தரி, உளுந்து, பச்சைப்பயறு, பூசணிக்காய் மற்றும் தக்காளி போன்றவை ஆகும்.

ஜெய்த்  பயிர்களை வளர்ப்பது ஏன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை ஆராயுங்கள்

ஜெய்த்/கோடை காலத்தில் வளர்க்கப்படும் பயிர்களின் சில அம்சங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

  • கோடை கால பயிர்கள் குறுகிய வளரும் காலத்தைக் கொண்டவை மற்றும் விதைத்த 60-90 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம். இதன் மூலம் விவசாயிகள் ஒரு வருடத்தில் பல பயிர்களைப் பயிரிட்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும். இந்த பயிர்கள் கோடைக் காலத்தின் வெப்பம் மற்றும் வறண்ட நிலைகளை தாங்கும் மற்றும் பொதுவாக இருக்கும் வறட்சி மற்றும் வெப்ப அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டது.
  • காரிஃப் மற்றும் ராபி பயிர்களை விட ஜெய்த்/கோடைக் காலப் பயிர்களுக்கு குறைந்த நீரே தேவைப்படுகிறது. இதனால் குறைந்த நீர் இருப்பு உள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது.
  • குறுகிய காலமே இருக்கும்போதிலும், சரியான மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றினால் பயிர்கள் அதிக மகசூலைத் தரும்.
  • கரிஃப் மற்றும் ராபி பருவங்களுக்கு இடையில், கோடைக் காலப் பயிர்களால் குறைந்த காலத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை வழங்க முடியும்.
  • ஜெய்த்/கோடைக் காலப் பயிர்கள் பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படுவது குறைவு. ஏனெனில், கோடை காலத்தின் வறண்ட நிலைகள் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு செழித்து வளர கடினமானதாக இருக்கும்.
  • தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற ஜெய்த்/கோடைக் காலப் பயிர்களுக்கு கோடை காலத்தில் சந்தையில் அதிக (கிராக்கி) தேவை உள்ளது. இது விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை அளிக்கும்.
  • கோடை பயிர்களைப் பயிரிடுவது மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உதாரணமாக, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்கள் மண்ணைப் பண்படுத்துகிறது.
  • இந்தப் பயிர்களை வளர்ப்பது ஒற்றைப் பயிரை சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் விவசாயத்தைப் பல்வகைப்படுத்த உதவுகிறது. இது காலநிலை மாற்றம், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் ஏற்படும் பயிர் தோல்வியின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
  • விவசாயிகள் காரீஃப் மற்றும் ராபி பருவங்களில் அதிக மழையினால் ஏற்படும் இழப்பை கோடைப் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் ஈடுசெய்யலாம்.
  • மேலும் ஜெயித்/கோடைக் காலப் பயிர்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம், பூசணிக்காய் மற்றும் பாகற்காய் போன்ற பயிர்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, ஊட்டச்சத்து கூடுதலாக கிடைக்கும்.
  • மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் போன்ற கோடைக்காலப்‌ பயிர்கள் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கலப்பின விதைகளைப் பயன்படுத்தி உங்கள் கோடை பயிர்களின் மகசூலை அதிகரிக்கவும்

கோடைக்காலப் பயிர்கள் கலப்பினங்கள்/வகைகள்
கத்தரிக்காய் VNR 212 கத்திரிக்காய், ஜனக் கத்தரிக்காய், பருல் கத்தரி, ஃபிட்டோ ஊதா கத்தரி, மொக்தா மோதி கத்தரி, VNR 125 கத்தரி, சுங்ரோ குல்ஷன் கத்தரி, ஹர்ஷ் கத்தரி
பூசணிக்காய் அர்ஜுனா பூசணி, IRIS கலப்பின காய்கறி விதைகள் F1 கலப்பின பூசணி IHS 205, MAHY 1 பூசணி விதைகள், URJA US 101- பூசணி F 1 கலப்பின விதைகள், ருத்ராக்ஷ் F1 பார்க்கர் பூசணி, F1 கலப்பின பூசணி லட்டு – 1066, URJA அமிரித் பூசணி விதைகள்
பாகற்காய் VNR கடாஹி பாகற்காய், US 1315 பாகற்காய், அபிஷேக் பாகற்காய், NS 1024 பாகற்காய், பிரகதி 065 F1 பாகற்காய், US 33 பாகற்காய், அமன்ஷ்ரி பாகற்காய், பான் 1911 பாகற்காய், US 6214 பாகற்காய்
தர்பூசணி NS 295 தர்பூசணி, AFA 306 தர்பூசணி, அன்மோல் மஞ்சள் தர்பூசணி, அபூர்வா தர்பூசணி, URJA US 888 தர்பூசணி F1 கலப்பின விதைகள், IRIS கலப்பின பழ விதைகள் தர்பூசணி, அருண் 0035 தர்பூசணி, பகீசா தர்பூசணி, PAN 2053 சிறப்பு கலப்பின தர்பூசணி விதைகள்
வெள்ளரிக்காய் க்ரிஷ் F1 கலப்பின வெள்ளரி, NS 404 வெள்ளரி விதைகள், ஹிரண்ய சாம்பார் வெள்ளரி, சானியா வெள்ளரி, சோயா வெள்ளரி, மினி ஏஞ்சல் வெள்ளரி, மாலினி வெள்ளரி பான் மாதுரி கலப்பின வெள்ளரி பச்சை
முலாம்பழம் மதுராஜா முலாம்பழம், உர்ஜா கஜிரி முலாம்பழம், மிருதுலா முலாம்பழம், உர்ஜா யுஎஸ் 111 முலாம்பழம், சான்வி முலாம்பழம், MH 38 முலாம்பழம், ருத்ராக்ஷ் அர்ஜுன் முலாம்பழம், FB மிஸ்தான் F1 கலப்பின முலாம்பழம்
வெண்டை ராதிகா வெண்டை, நவ்யா வெண்டை, குங்கும் வெண்டை, சிங்கம் வெண்டை, NS 862 வெண்டை, NS 7774 வெண்டை, சாம்ராட் வெண்டை, PAN 2127 கலப்பின வெண்டை, வீனஸ் பிளஸ் வெண்டை
தக்காளி சாஹோ தக்காளி, அபிலாஷ் தக்காளி, NS 4266 தக்காளி, ஹீம்ஷிகர் தக்காளி, ஹீம்சோனா தக்காளி, To-3150 தக்காளி, JK தேசி தக்காளி விதைகள், US 440 தக்காளி, பாலியானா தக்காளி, லட்சுமி தக்காளி
மக்காச்சோளம்/கார்ன் ரைஸ் 303 ஷைன் கலப்பின சோள விதைகள், ரைஸ்-202 ஷைன் கலப்பின சோள விதைகள்
மிளகாய் ஆர்மர் சில்லி F1, ராயல் புல்லட் மிளகாய், யுஎஸ் 341 மிளகாய், யஷஸ்வினி மிளகாய், சர்பன் 102 பயட்கி மிளகாய், HPH 5531 மிளகாய், NS 1101 மிளகாய், நவ்தேஜ் MHCP-319 மிளகாய், தேவசேனா 88 மிளகாய்
சுரைக்காய் ஹருணா சுரைக்காய், பான் 1719 கலப்பின சுரைக்காய், காவேரி சுரைக்காய், மான்யா சுரைக்காய், இண்டம் சுரைக்காய், பான் சுரைக்காய் 16000, IRIS கலப்பின காய்கறி விதைகள் F1 கலப்பின சுரைக்காய் மும்தாஜ் ரௌண்ட்

முடிவுரை

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பல பிராந்தியங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதிலும் கோடைப் பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அதிக வெப்பநிலை போன்ற சவால்கள் கோடைகாலப் பயிர் சாகுபடியை கடினமாக்கும். அதே வேளையில், சரியான பயிர்களைத் தேர்ந்தெடுப்பது, சரியான விதைகள் மற்றும் சாகுபடி நுட்பங்களளைப் பயன்படுத்துவதால், விளைச்சலை அதிகரிக்கவும் மற்றும் லாபத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஜெயித் /கோடைக்காலப் பயிர்களான தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் முலாம்பழம் போன்றவை விவசாயிகளின் வருமானத்தை பல்வகைப்படுத்தவும், நிலையான விவசாய முறைகளை பின்பற்றவும் வழிவகை செய்கிறது. கூடுதலாக, சரியான வகை அல்லது கலப்பின விதைகளை வாங்குவதால், உகந்த மகசூலை உறுதி செய்து கோடைகாலப் பயிர் வளர்ச்சியை லாபகரமாகவும் மாற்ற உதவுகிறது.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025