Crop

முலாம் பழம் சாகுபடியைச் சிறப்பாகச் செய்து அதிக மகசூல் பெறுவது எப்படி?

முலாம்பழம் அல்லது கிர்ணி பழம் (குக்குமிஸ் மெலோ – Cucumis melo L) என்பது இந்தியாவில் குறிப்பாக கோடை காலத்தில் விவசாயிகளால் பரவலாக பயிரிடப்படும் ஒரு பழப் பயிராகும். அதன் தனித்துவமான சுவை மற்றும் வாசனைக்காக பிரபலமாக அறியப்படுகிறது. பழம் அதிக நீர் சத்து உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது மற்றும் உடலிற்கு குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்துகிறது. இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளன. முதிர்ச்சியடையாத பழங்கள் காய்கறிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அவற்றின் விதைகள் உண்ணக்கூடியவை. இது, இனிப்புகள் தயாரிக்க பயன்படுகிறது. இந்தியாவில், முலாம்பழம் முக்கியமாக பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் விளைவிக்கின்றன. சீனா மற்றும் துருக்கிக்கு அடுத்தபடியாக முலாம்பழம் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

பருவம் மற்றும் காலநிலை

முலாம்பழம் பெரும்பாலும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை பயிரிடப்படுகிறது. விதை முளைப்பதற்கான உகந்த வெப்பநிலை 23-25°C மற்றும் அதன் தாவர வளர்ச்சி மற்றும் காய் வளர்ச்சிக்கு தேவையான உகந்த வெப்பநிலை சுமார் 20-32°C ஆகும். பழம் பழுக்கும் கட்டத்தில் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம், இனிப்புத்தன்மையை மற்றும் பழத்தின் நறுமணத்தையும் அதிகரிக்கும். சூடான இரவுகள் பழத்தின் முதிர்ச்சியை துரிதப்படுத்தும். இந்த பழங்கள் வறட்சியைத் தாங்கும் திறன் கொண்டது, ஆனால் உறைபனிக்கு மிகவும் உணர்திறனைக் கொண்டுள்ளன. அதிக ஈரப்பதமான சூழல் அடிச்சாம்பல் பூஞ்சான் நோய், ஆந்த்ராக்னோஸ் போன்ற நோய்களையும் மற்றும் பழ ஈ போன்ற பூச்சிகளின் நிகழ்வு மற்றும் பரவலை ஊக்குவிக்கும்.

வகைகள் அல்லது இரகங்கள்

வகைகள் / கலப்பினங்கள் அம்சங்கள்
மதுராஜா முலாம்பழம்
  • மதுராஸ் வகை பழங்கள்
  • முதிர்வு: 55 – 60 நாட்கள் (மதுராக்களை விட 5 முதல் 7 நாட்கள் முன்னதாக)
  • பழத்தின் எடை 1.0 – 1.25 கிலோ வரை
  • நல்ல சதை நிறம் மற்றும் வாசனை
  • மிதமான குழியுடன் கூடிய மிதமான வலைப் பழங்கள்
  • 12 – 15% TSS (மொத்தம் கரையக்கூடிய திடப்பொருட்கள்)
உர்ஜா கஜ்ரி முலாம்பழம்
  • சதை ஆரஞ்சு நிறத்தில் உள்ளது, BRIX13 க்கு தாங்கும் தன்மை கொண்டது.
  • 60 – 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.
  • சராசரி எடை 12 – 15 கிலோ வரை.
  • தோராயமான விதைகளின் எண்ணிக்கை – 100
மிருதுளா முலாம்பழம்
  • இந்த வகை முன்கூட்டியே மற்றும் அதிக காய் பிடிக்கும் திறன் கொண்டது.
  • வெளிர் மஞ்சள் தோலுடன் வட்டமான பழம் கொண்டது.
  • பழத்தின் சராசரி எடை: 1.5 – 2 கிலோ
  • பூத்த 40 நாட்களுக்குப் பிறகு பழ அறுவடை செய்யப்படும்.
  • சதை வெண்மையாகவும், மென்மையாகவும், நறுமணம் மற்றும் தனித்துவமான சுவையுடன் மிகவும் இனிப்பாகவும் இருக்கும்.
உர்ஜா US-111 முலாம்பழம்
  • சதை ஆரஞ்சு நிறத்தில் உள்ளது, BRIX13க்கு தாங்கும் தன்மை கொண்டது.
  • 60 – 65 நாட்களில் அறுவடைக்கு தயார் ஆகும்
  • சராசரி எடை 1.2 – 1.5 கிலோ வரை
  • தோராயமான விதைகளின் எண்ணிக்கை -50
NS 910 முலாம்பழம்
  • முதிர்வுக்கு தொடர்புடைய நாட்கள் (DS): பச்சையாக – 60-65 நாட்கள்
  • பழ அளவு : 1.5-2.0 கிலோ
  • பழ வடிவம் : ஓவல்
  • பழத்தின் மீது வலை : அருமையான வலைப்பின்னல் கொண்ட பழம்
  • சதை நிறம் : ஆழமான சால்மன்
  • சதை அமைப்பு : அருமையான சதை அமைப்பு
  • விதை குழி : சிறியது
  • TSS %: 13-14
சான்வி முலாம்பழம்
  • வடிவம் : மென்மையான, தங்க-மஞ்சள் தோலுடன் பூகோள வடிவம் கொண்டது.
  • எடை : சுமார் 1-1.5 கிலோ
  • அதன் ஆரஞ்சு சதை 14-16% BRIX (பிரிக்ஸ்) உடன் மிருதுவாக உள்ளது.
  • முன்கூட்டிய முதிர்ச்சி, சாகுபடி மற்றும் பழம் அமைக்க எளிதானது. விதைத்த 70-75 நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்து கொள்ளலாம்.
  • பருவம்: கரீஃப் பருவத்தின் பிற்பகுதியில், கோடையின் தொடக்கத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
MH 38 முலாம்பழம்
  • பழம் நடுத்தர அளவிலான வட்டமானது, ஆரஞ்சு தோலுடன் சிறிது கடினமானது மற்றும் நெருக்கமான வலைப்பின்னல் கொண்டது.
  • பழத்தின் சதை அடர்த்தியாகவும், ஆழமான ஆரஞ்சு நிறமாகவும், நல்ல வாசனையுடன் இனிப்பாகவும் இருக்கும்.
  • பழத்தின் எடை 1.8 – 2.0 கிலோ வரை
  • மிதமாக சாம்பல் மற்றும் அடிச்சாம்பல் பூஞ்சான் நோய்களைத் தாங்கும் திறன் கொண்டது.
  • சர்க்கரை உள்ளடக்கம் TSS 12°BRIX (பிரிக்ஸ்)
  • விதைத்த 70-80 நாட்களில் அறுவடை தொடங்குகிறது.
ருத்ராக்ஷ் அர்ஜுன் முலாம்பழம்
  • ஆரஞ்சு இனிப்பு சதை
  • சர்க்கரை உள்ளடக்கம் 13-15% BRIX
  • கடினமான வலை வெளிப்புற தோல்
  • வடிவம்/அளவு: வட்டமானது
  • எடை: 1.5 – 2.5 கிலோ
  • முதிர்வு: 65-70 நாட்கள்
  • ஏக்கருக்கு தோராயமாக 20-25 டன் மகசூல் கிடைக்கும்
FB மிஸ்தான் F1 கலப்பின முலாம்பழம்
  • பழத்தி்ன் சதை அடர்த்தியான வலையுடன், ஆரஞ்சு நிற சதையுடன் கூடிய நறுமணம் மற்றும் இனிப்பு சுவையில் இருக்கும்.
  • TSS: 12-15%
  • பழத்தின் எடை: 1-2 கிலோ
  • முதல் அறுவடைக்கான நாட்கள்: நடவு செய்த 70-75 நாட்கள் பின் முதிர்ச்சி அடையும்.
  • ஃபுசேரியம் மற்றும் வைரஸால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல தாங்கும் திறனும், நீண்ட போக்குவரத்துக்கு உகந்தது.

மண் தேவை

கரிமப் பொருட்கள் நிறைந்த, நன்கு வடிகால் வசதி கொண்ட, மணல் கலந்த களிமண் முலாம்பழம் சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் pH – கார அமிலத்தன்மை 6.5-7.5 வரை இருக்கலாம். மண்ணின் அமிலத்தன்மையை சிறிது பொறுத்துக்கொள்ளும், ஆனால் அதிக உப்பு செறிவு கொண்ட மண்ணை பொறுத்துக்கொள்ள முடியாது. லேசான மண், பழங்களின் முதிர்ச்சியை அதிகரிக்கிறது. அதாவது பழங்களை முன்கூட்டியே அறுவடை செய்து கொள்ளலாம். கடினமான மண்ணில், நல்ல கொடியின் வளர்ச்சி இருக்கும், ஆனால் பழத்தின் முதிர்ச்சி தாமதமாகும்.

விதை அளவு: ஏக்கருக்கு 400-600 கிராம்

விதைப்பு மற்றும் நடவு முறைகள்

அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்தியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் விதைப்பு செய்யப்படுகிறது. முலாம்பழம் பொதுவாக நேரடி விதை மற்றும் நாற்றங்கால் இடமாற்றம் மூலம் நடவு செய்யப்படுகிறது. சிறந்த முளைப்பினைப் பெற, விதைகளை விதைப்பதற்கு முன் 12-24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஆற்றுப்படுகை சாகுபடியில் முலாம்பழம் விதைகளை குழிகளிலும், உயரமான பாத்திகளிலும் விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன், விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி-யுடன் 1.25 கிராம் / லிட்டர் தண்ணீரில் அல்லது சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸை 50 மில்லி தண்ணீருக்கு 5-10 மில்லி என்ற அளவில் அல்லது மெட்டாலாக்சில் 4%+ மான்கான்செப் 64% WP 1-1.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து விதைக்க வேண்டும்.

நேரடி விதைப்பயிர்களுடன் ஒப்பிடும்போது, பாலித்தீன் பைகளில் வளர்க்கப்பட்ட நாற்றில் 15 இருந்து 20 நாட்களுக்கு  முன்கூட்டிய முதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

நேரடி விதைப்பு நாற்றாங்கால் உருவாக்கம்
குழி உயர்த்தப்பட்ட படுக்கை பாலிபேக்குகள் புரோட்ரேஸ்
சுமார் 60 செ.மீ அகலமும், 60 செ.மீ நீளமும், 45 செ.மீ ஆழமும் கொண்ட குழிகள் தோண்டப்பட வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் இடையே 1.5 முதல் 2 மீட்டர் வரை இடைவெளி விடவும்.

அவற்றை தொழு உரம் அல்லது நன்றாக மடக்கிய உரம் கொண்டு நிரப்பவும்.

ஒவ்வொரு குழியிலும் 1- 1.5 செ.மீ ஆழத்தில் 5-6 விதைகளை விதைத்து மண்ணால் மூடி வைக்க வேண்டும். செடி முளைத்த பின், ஒவ்வொரு குழியிலும் 2 அல்லது 3 செடிகள் மட்டுமே வளர அனுமதிக்கப்படும்மற்றவை வேரோடு பிடுங்கப்படும்.

3- 4 மீட்டர் அகலத்தில் படுக்கைகளை தயார் செய்யவும்.

ஒரு குழிக்கு இரண்டு விதைகள் வீதம் பாத்திகளின் இருபுறமும் 60 செ.மீட்டர் இடைவெளியில் விதைக்கவும். 

15 செ.மீட்டர் x 10 செ.மீட்டர் அளவுள்ள பாலித்தீன் பைகளின் கீழ் பாகத்தில் துளையிடப்பட்ட பிறகு, ப்ரோட்ரேயில் வளர்க்கப்படும் நிபந்தனைகளுடன் நிரப்பப்பட வேண்டும். சம விகிதாச்சார அளவில் மண் மற்றும் தொழு உரம் அல்லது மண் மற்றும் தொழு உரம் மற்றும் வண்டல் மண் (மண்வகை மணலாக இருக்கும் பொழுது) கொண்டு நிரப்பவும்.

விதைகளை 1.5 செ.மீ ஆழத்திற்கு மேல் விதைக்கக்கூடாது.

நாற்றுகள் பாதுகாக்கப்பட்ட நிலையில், புரோட்ரேவினைக் கொண்டு வளர்க்கப்படலாம்.

98 செல்கள் கொண்ட புரோட்ரேக்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு கலத்திற்கு 1-2 விதைகளை விதைக்கலாம்.

வயல் தயாரிப்பு

பிரதான வயலை நன்றாக உழவு செய்து, 2.5 மீ இடைவெளியில் நீண்ட கால்வாய்களை அமைக்க வேண்டும்.

இடைவெளி

நாற்றுகளுக்கு இடைவெளியில் 2-3 அடி இடைவெளியும், வரிசைக்கு வரிசை 5-6 அடி இடைவெளியிலும் அமைக்கவும்.

நடவு செய்தல்

20-30 நாட்கள் வயதுடைய நாற்றுகளை, குறைந்தது 2-3 உண்மையான இலைகளுடன் பிரதான வயலில் இடமாற்றம் செய்யவும். நாற்றுகள் பள்ளங்களின் விளிம்புகளில் அல்லது மேட்டின் கீழ் பாதி உயரத்தில் இடமாற்றம் செய்யப்படுகிறது. இதனால் தாவரங்களுக்கு போதுமான நீர்ப்பாசனம் அல்லது ஈரப்பதம் கிடைக்கும். நடவு செய்த உடனேயே நீர் பாசனம் செய்யப்படுகிறது.

மட்குகள் மற்றும் உரங்கள்

பண்ணை உரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை நிலத்தை தயார் செய்யும் போது இடலாம். பாதி அளவு தழைச்சத்து- N மற்றும் முழு அளவு மணிச்சத்து -P &சாம்பல் சத்து – K-யை அடி உரமாகவும், மீதமுள்ள தழைச்சத்து- N-யை விதைத்த 4 வாரங்களுக்குப் பிறகு மண் அணைக்கும் நேரத்தில் இடாலம். நுண்ணுட்டச்சத்துக்களைத் தெளிப்பதன் மூலம், தாவர வளர்ச்சி, பழ விளைச்சல், சதை மற்றும் தோலின் தடிமன் அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 32:24:12 கிலோ/உரம் பரிந்துரைக்கப்படுகிறது.

ஊட்டச்சத்து உரம் அளவு (ஏக்கருக்கு)
கரிம உரம் மக்கிய தொழு உரம் 8 டன்
வேப்பம் புண்ணாக்கு 40 கிலோ
தபஸ் புஷ்டி அனைத்து தாவர ஊட்டச்சத்து கலவை 2-3 மிலி/லி
உயிர் உரம் அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி: 10 மி.லி சன் பயோ அசோஸ் + குளிர்ந்த வெல்லம் கரைசல் (ஒரு கிலோ விதைக்கு).

மண்ணில் இட: 1 லிட்டர் சன் பயோ அசோஸ் உடன் 50 – 100 கிலோ தொழு உரம் / மட்கு 

சொட்டு நீர்: 5-10 மிலி / லிட்டர் தண்ணீர் 

பாஸ்போபாக்டீரியா (சன் பயோ போசி) மண்ணில் இடுதல்:  10 மிலி சன் பயோ போசி + 50 – 100 கிலோ எரு

உரமிடுதல்: 1-2 லிட்டர்

தழைச்சத்து யூரியா (அல்லது) 70 கிலோ
அம்மோனியம் சல்பேட் 156 கிலோ
மணிச்சத்து சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் அல்லது 150 கிலோ
டபுள் சூப்பர் பாஸ்பேட் 75 கிலோ
சாம்பல் சத்து மியூரேட் ஆஃப் பொட்டாஷ் அல்லது 20 கிலோ
சல்பேட் ஆஃப் பொட்டாஷ் 24 கிலோ
நுண்ணூட்டச் சத்து காசின் பியர் கிரீன் லேபிள் மெக்னீசியம் (Mg 2%, S 5%) 2 – 3 மில்லி/லிட்டர் தண்ணீர்
போரான் 20 1 கிராம்/லிட்டர் தண்ணீர்

நீர்ப்பாசனம்

முலாம்பழம் பயிர் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் அடிக்கடி ஆனால் லேசான நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. நேரடி விதைப்பு பயிருக்கு, மண்ணில் போதுமான ஈரப்பதம் இருந்தால், முதல் நீர் பாசனம் தாமதமாகலாம். நடவு செய்த பயிருக்கு, நடவு செய்த உடனேயே நீர் பாசனம் செய்யப்படுகிறது. வார இடைவெளியில் தொடர்ந்து நீர்ப்பாசனம் செய்யலாம். காய் முதிர்ச்சியடையும் போது மிகவும் அவசியமான போது, அதாவது காலையில் நரம்புகளில் வாடுவதைக் காணும்போது, நீர்ப்பாசனம் செய்யலாம். பழம் முதிர்ச்சியடைந்தவுடன் அதிகப்படியான நீர்ப்பாசனம் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் அது பழத்தின் இனிப்புத்தன்மையைக் குறைக்கும். மண்ணின் வகை மற்றும் வளரும் பருவத்தைப் பொறுத்து முழு பயிர் பருவத்திற்கும் நீர்ப்பாசனம் தேவைப்படலாம்.

பழங்களின் சிறந்த தரத்திற்கும், நோய் மற்றும் களைகளின் தாக்குதலைக் குறைப்பதற்கும், நீர் பாதுகாப்பிற்கும் ‘சொட்டு நீர் பாசனம்’ பரிந்துரைக்கப்படுகிறது.

பயிர் வளர்ப்பிற்கு இடையிலான செயல்பாடுகள்

களையெடுத்தல்

  • களைகளை கட்டுப்படுத்த, வயலில் வெள்ள முறையில் நீர்ப்பாசனம் செய்வதை அனுமதிக்கக்கூடாது. முடிந்தால், சொட்டுநீர் பாசனத்தை நிறுவலாம்.
  • பயிரின் ஆரம்ப வளர்ச்சியின் போது, வயலில் களைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • தழைச்சத்து – N ஐ மேலுரமாக இடும் போது களையெடுத்தல் மற்றும் மண் அணைத்தல் செய்ய வேண்டும்.
  • கொடியின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில், லேசாக மண்ணைக் கொத்துதல் பரிந்துரைக்கப்படுகிறது.

தழைக்கூளம் அல்லது மூடாக்கு இடுதல்

பழங்கள் தண்ணீருடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க வைக்கோல் தழைக்கூளம் மூலம் மூடாக்கு செய்யலாம்.

கவாத்து செய்தல்

பிரதான தண்டுகளில் 7 வது முனை வரையிலான இரண்டாம் தளிர்களை அகற்றவும். இது தாவர வளர்ச்சி மற்றும் காய்களின் தொகுப்பை மேம்படுத்துகிறது. கவாது செய்வதால் மகசூல் மற்றும் பழத்தின் தரம் மேம்படுத்தப்படுகிறது.

தாவர வளர்ச்சி கட்டுப்பாட்டாளர்களின் பயன்பாடு (PGR)

பயன்பாட்டின் நிலைகள்: தாவர, பூக்கும் மற்றும் பழ வளர்ச்சி நிலை (பயன்பாட்டிற்கு முன் தயாரிப்பு லேபிளைப் பார்க்கவும்.)

பொருளின் பெயர் உள்ளடக்கம் மருந்தளவு நன்மைகள்
இசபியன் உயிரி ஊக்கி அமினோ அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஃபோலியார்: 2 மிலி / லிட்டர் தண்ணீர்
  • வேர் வளர்ச்சி மற்றும் மொட்டுகளின் தீவிர வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதிக பூக்கும் திறனைக் தூண்டுகிறது.
  • மகரந்தச் சேர்க்கை மற்றும் நல்ல முன்கூட்டிய முதிர்ச்சி பழங்கள் அமைக்க உதவுகிறது.
  • அறுவடை பழங்களி அளவையும் தரத்தையும் மேம்படுத்துகிறது.
ஹோஷி சுமிட்டோமோ ஜிபெரெலிக் அமிலம் 0.001% L 1.25 மிலி / லிட்டர் தண்ணீர்
  • பூ மற்றும் காய் உதிர்வதை குறைக்கிறது.
  • பூ உற்பத்தியைத் தூண்டுகிறது, பழங்களை பெரிதாக்குகிறது மற்றும் பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது.
காத்யாயனி ஆல்பா நாப்தில் அசிட்டிக் அமிலம் ஆல்பா நாப்தில் அசிட்டிக் அமிலம் 4.5% SL 1-1.5 மிலி / 4.5 லிட்டர் தண்ணீர்
  • பூ பிடிக்கும் திறனைத் தூண்டுகிறது
  • பூ மொட்டுகள் மற்றும் பழுக்காத பழங்கள் உதிர்வதைத் தடுக்கிறது.
  • பழங்களின் அளவை அதிகரிக்கவும், பழங்களின் தரம் மற்றும் விளைச்சலை அதிகரிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் உதவுகிறது.

தாவர பாதுகாப்பு மேலாண்மை

பூச்சிகள்

தயாரிப்பு பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம் மருந்தளவு
பழ ஈ
தபஸ் பழ ஈ பொறி பெரோமோன் – இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 6-8
கோரோஜன் பூச்சிக்கொல்லி குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% SC 0.3 மிலி/லி
அசுவினி மற்றும் இலைப்பேன்
டி. ஸ்டேன்ஸ் நிம்பெசிடின் அசார்டாக்டின் 300 ppm 6 மில்லி / லிட்டர் தண்ணீர்
பாலிட்ரின் C 44 EC பூச்சிக்கொல்லி 40% (புரப்பனோஃபாஸ்) + 4% (சைபர்மெத்ரின்) EC 2 மில்லி / லிட்டர் தண்ணீர்
சிவந்தோ பேயர் பூச்சிக்கொல்லி ஃப்ளூபிராடிபியூரோன் 17.09% SL 2 மில்லி / லிட்டர் தண்ணீர்
இலை துளைப்பான்கள்
ஈகோனீம் பிளஸ் அசாடிராக்டின் 10000 ppm 1.5-2.5 மிலி / லிட்டர் தண்ணீர்
வோலியம் டார்கோ 45 கிராம்/லி குளோரான்ட்ரானிலிப்ரோல் + 18 கிராம்/லி அபாமெக்டின் 1 மில்லி / லிட்டர் தண்ணீர்
பெனேவியா பூச்சிக்கொல்லி சயன்ட்ரானிலிப்ரோல் 10.26% OD 1.7 முதல் 2.0 மிலி / லிட்டர் தண்ணீர்

நோய் மேலாண்மை

பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம் மருந்தளவு
அடிச்சாம்பல் நோய்
அனந்த் டாக்டர் பாக்டோவின் ஃப்ளூரோ (உயிர் பூஞ்சைக் கொல்லி) சூடோமோனாஸ் ஃப்ளூரசன்ஸ் அடிப்படையில் 2.5 மில்லி / லிட்டர் தண்ணீர்
ஃபிளிக் சூப்பர் பூச்சிக்கொல்லி டைமெத்தோமார்ப் 12% + பைராக்ளோஸ்ட்ரோபின் 6.7% WG 3 கிராம் / லிட்டர் தண்ணீர்
ஜாம்ப்ரோ பூஞ்சைக் கொல்லி அமெடோக்ட்ராடின் 27% + டைமெத்தோமார்ப் 20.27% SC 1.6-2 மிலி / லிட்டர் தண்ணீர்
ஆந்த்ராக்னோஸ்
ஈகோனீம் பிளஸ் அசாடிராக்டின் 10000 ppm 1.5-2.5 மிலி / லிட்டர் தண்ணீர்
பாவிஸ்டின் பூஞ்சைக் கொல்லி கார்பென்டாசிம் 50% WP 0.6 கிராம் / லிட்டர் தண்ணீர்
கோசைட் பூஞ்சைக் கொல்லி காப்பர் ஹைட்ராக்சைடு 53.8% DF 2 கிராம் / லிட்டர் தண்ணீர்
வாடல்
ஈகோனீம் பிளஸ் அசாடிராக்டின் 10000 ppm 1.5-2.5 மிலி / லிட்டர் தண்ணீர்
ரோகோ பூஞ்சைக் கொல்லிகள் தியோபனேட் மெத்தில் 70% WP தண்ணீருடன் 0.5 கிராம்
சாம்பல் நோய்
வான்ப்ரோஸ் வி-குரே பூஞ்சைக் கொல்லி & பாக்டீரிசைடு யூஜெனால், தைமால், பொட்டாசியம் உப்புகள், கேட்டயானிக் மேற்பரப்பு முகவர், சோடியம் உப்புகள் & பதப்படுத்திகள் 1.5-2 கிராம் / லிட்டர் தண்ணீர்
ஃபிளிக் சூப்பர் பூச்சிக்கொல்லி டைமெத்தோமார்ப் 12% + பைராக்ளோஸ்ட்ரோபின் 6.7% WG 3 கிராம் / லிட்டர் தண்ணீர்
மெரிவோன் பூஞ்சைக் கொல்லி ஃப்ளூஆக்சாபைராக்ஸைடு 250 G/L + பைராக்ளோஸ்ட்ரோபின் 250 G/L SC 0.4-0.5 மிலி/லி

அறுவடை

  • பாதி பழுத்த நிலை (ஹாஃப் சிலிப்): பழங்கள் மேசை பயன்பாட்டிற்கு முழுமையாக தயாராக இருக்காது. ஆனால் தொலைதூர சந்தை பயன்பாட்டிற்கு நல்லது. தண்டிலிருந்து பழங்களை அறுவடை செய்ய, சிறிது அழுத்தம் தேவைப்படுகிறது.
  • முழுவதும் பழுத்த நிலை (ஃபுல் சிலிப்): பழங்கள் மேசை பயன்பாட்டிற்கு முற்றிலும் தயாராக உள்ளன மற்றும் உள்ளூர் சந்தைக்கு சிறந்தது. பழங்களைப் பிரிக்க அழுத்தம் தேவையில்லை.
  • முலாம்பழம்(மஸ்கி) வாசனை: பழுக்க வைக்கும் போது, பழங்கள் இனிமையான முலாம்பழம் வாசனையை உருவாக்குகின்றன.
  • நிறத்தில் மாற்றம்: பழம் பழுக்க வைக்கும் கட்டத்தில், தோல் மென்மையாக மாறும். பழத்தின் தோல் நிறம் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும்.
  • முழு வலையமைப்பு: பழத்தின் மேற்பரப்பில் வலை போன்ற அமைப்பு உருவாகிறது.

சேமிப்பு

முலாம்பழம் அழுகக்கூடிய பழங்கள் வகையைச் சார்ந்தது மற்றும் அறை வெப்பநிலையில் 2-4 நாட்களுக்கு மட்டுமே சேமிக்க முடியும். அவை 2-4 டிகிரி செல்சியஸ் மற்றும் 85-90% ஈரப்பதத்தில் 2-3 வாரங்களுக்கு குளிர்கலனில் சேமிக்கப்படலாம்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024