Crop

வெங்காயம் சாகுபடி

வெங்காயம் அமாரில்லிடேசியே  குடும்பத்தைச் சேர்ந்தது மேலும்  அல்லியம் செபா என்றது இதனின் தாவரவியல் பெயர். வெங்காயம் ஒவ்வொரு வீட்டிலும் மற்றும் உலகம் முழுவதும் காணப்படும் ஒரு பல்நோக்கு காய்கறியாகும். வெங்காயம் விவசாயம் பழமையான, லாபகரமான மற்றும் பின்பற்ற மிகவும் எளிதானதாகும். 

பெரும்பாலான விவசாயிகள் வெங்காயத்தின் உலகளாவிய சாகுபடியை ஏற்றுக்கொள்கிறார்கள். குறைந்த பராமரிப்பு, நல்ல லாப வரம்பை அடைதல் மற்றும் குறைந்த மூலதன முதலீடு தேவை என பல வழிகளில் வெங்காய சாகுபடியை அணுகலாம். மேலும் வெங்காய உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது, மொத்த உற்பத்தியில் 22% பங்குவகுக்கிறது.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

மண் நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும். கனமான மண்ணைத் தவிர்க்கவும். வெங்காயத்திற்கு நன்கு வடிகட்டிய களிமண் உகந்தது, மேலும் மண்ணில் நல்ல கரிம வளம் மற்றும் சாம்பல் சத்து இருந்தால் மிகவும் அற்புதமானதாகும். 

செப்டம்பர் முதல் நவம்பர் வரை வெங்காயம் நடவு செய்ய ஏற்ற காலமாகும். வெங்காயம் பரந்த காலநிலை நிலைமைகளின் கீழ் வளர்க்கப்படுகிறது. இருப்பினும், வெங்காயத்தினால் மிகவும் வெப்பமான அல்லது மிகவும் குளிரான காலநிலையை தாங்க முடியாது. இது கோடை மற்றும் குளிர்காலத்தில் மிதமான வெப்பநிலையில்  நன்கு வளரக்கூடியவை. மேலும் மண்ணில் வெங்காயம் உருவாவதற்கு குறுகிய நாட்கள் மிகவும் சாதகமானவை.

சிறந்த ரகங்கள்

வெங்காயம் நடவு செய்ய பூசா ரெட், பூசா ரத்னர், பூசா ஒயிட் ரவுண்ட், பாட்னா ரெட், பூனா ரெட், அர்கா பிரகதி, அர்கா நிகேதா, அர்கா நிகேதன், அர்கா கல்யாண், அர்கா பிரகதி, அக்ரி பவுண்ஃட் வெளிர் சிகப்பு போன்ற ரகங்கள் ஏற்றதாகும்.

வெங்காயம் இனப்பெருக்கம் மற்றும் விதையளவு

வெங்காய விதைகள் அக்டோபர் முதல் நவம்பர் வரை நாற்றங்காலில் விதைக்கப்படுகின்றன. தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நடவு செய்யப்படும். மேலும் மார்ச் முதல் ஜூன் வரை மலைகளில் நடவு செய்யப்படும். ஒரு ஏக்கருக்கு 3-4 கிலோ விதைகள் தேவை. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நாற்றுகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. முன்கூட்டியே நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.

நாற்றாங்கால் தயாரித்தல்

ஒரு ஏக்கர் நடவு செய்ய சுமார் 2 செண்ட் நாற்றாங்கால் தேவை. நாற்றங்கால் இடத்திற்கு வி எ.எம். என்ற மருந்தை செண்டிற்கு 1 கிலோ என்ற அளவில் கொடுக்கவும். 

நாற்றாங்காலுக்கு செண்டிற்கு ஒரு கிலோ என்ற அளவில் டிஏபி இட்டால் நல்ல நாற்றுக்கள் கிடைக்கும். நாற்றாங்காலில் விதைகளை அடர்த்தியாக விதைக்காமல், பரவலாக விதைகளை விதைக்கவேண்டும். அப்போது தான் நாற்றுக்கள் நல்ல முறையில்  40-45 நாட்களிலேயே தயாராகும்.

நடவு மற்றும் இடைவெளி:

அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் இறுதி வரை நாற்றங்காலில் வெங்காயத்தின் விதை விதைக்கப்படுகிறது. தயாரான வெங்காய நாற்றுகளை 15 X 10 அல்லது 20 X 10 செ.மீ. என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

உரமேலாண்மை

முதலில் அடியுரமாக நன்கு மக்கிய எரு 10 டன், டி.எ.பி 130 கிலோ, மியூரேட் ஆப் பொட்டாஷ் 50 கிலோ, மற்றும் சல்பர் 10 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் இடவும்.

பிறகு நடவு செய்து 30 வது நாட்களிலிருந்து யூரியா 75 கிலோ மற்றும் சல்பர் 200 கிலோ/ ஏக்கர், இந்த உரத்தை மூன்றாக பிரித்து 20 நாட்கள் இடைவெளியில் மேலுரமாக இடவும். 

நீர் நிர்வாகம்

நடவு செய்தவுடன் உயிர் தண்ணீர் பாய்க்கவேண்டும். பிறகு 5 நாட்களுக்கு ஒருமுறை அல்லது நிலத்தின் ஈரத்தை சரிபார்த்து  தொடர்ந்து நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

இலைப்பேன்

பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள், இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுகளாகக் காணப்படும். மேலும் இலைகள் நுனியிலிருந்து வாட துவங்கும். 

கட்டுப்பட்டு முறை

  • இதனை கட்டுப்படுத்த கலப்பு மருந்து (ப்ரொஃபேனோபாஸ் 40% + சைபர்மித்ரின் 4% இ.சி) (Profenofos 40% + Cypermethrin 4%) @ 30 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
  • அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருங்கி நடுவதையும் தவிர்க்கவேண்டும்.

வெங்காய ஈ

இந்த ஈக்கள் நிலத்தில் உள்ள இடுக்குகளில் முட்டை இடும். அந்த முட்டைகளில் இருந்து வரும் புழுக்கள் வெங்காயத்தை சேதப்படுத்தி அழுகல் ஏற்படுத்தும்.

கட்டுப்பாடு :

குயினால்பாஸ் என்ற மருந்தை 30மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

வெட்டுப்புழு

இப்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும்.

கட்டுப்பாடு

  • குளோரிபைரிபாஸ் என்ற மருந்தை வயலுக்கு நீர்பாசனத்தில் கொடுக்கவும்.
  • வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராகப் பயிரிடுவதனால் இதனை கட்டுப்படுத்தலாம்.

இலைப்புள்ளி நோய்

இதனைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து உங்கள் செடி நன்கு நனையும்படி தெளிக்கவேண்டும்.

அறுவடை

அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நீர் பாசனத்தை நிறுத்திவிடவேண்டும். சுமார் 75 சதவீதம் தாள்கள் காய்ந்து படிந்தவுடன் அறுவடை செய்யவேண்டும். வெங்காயம் நன்றாக முதிர்ந்த பின் அறுவடை செய்யவேண்டும். வெங்காயத்தை நன்றாக காய வைத்துப் பிறகு சேமிக்கவேண்டும்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024