Crop

வெங்காய சாகுபடி: வெற்றிகரமான அறுவடைக்கு ஒரு விரிவான வழிகாட்டி

வெங்காயம் (அல்லியம் சீஃபா) ஒரு முக்கியமான வேர் வகை காய்கறி ஆகும். இது பல இந்திய உணவுகளில் பிரதான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அல்லியம் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் பூண்டு, லீக்ஸ் மற்றும் சின்ன வெங்காயம் போன்ற பயிர்கள் அடங்கும். இவை கந்தகம் கொண்ட சேர்மங்களால் ஏற்படும் காரத்தன்மையுடைய  சுவை மற்றும் நறுமணத்திற்காக அறியப்படுகின்றன. இந்தியா, வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்கள் வெங்காயம் அதிகம் விளையும் பகுதிகளாகும். இந்தியா 2022 ஆம் ஆண்டில் சுமார் 32 மில்லியன் மெட்ரிக் டன் வெங்காயத்தை உற்பத்தி செய்தது. 2022 இல் அதன் சாகுபடியின் மொத்த பரப்பளவு 1.94 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இந்தியாவில் வெங்காயத்திற்கான தேவை அதிகமாக உள்ளது. மேலும் இந்த பயிர் நாட்டின் பல விவசாயிகளுக்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது.

மண் தேவை

கிட்டத்தட்ட அனைத்து மண் வகைகளும் வெங்காய சாகுபடிக்கு ஏற்றது. இருப்பினும், நல்ல வடிகால், ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன் மற்றும் கரிமப் பொருட்கள் நிறைந்த மணல் கலந்த களிமண் முதல் களிமண்ணுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. இதன் வளர்ச்சிக்கு உகந்த மண்ணின் pH 6-7.5 ஆகும்.வெங்காயம் அதிக அமிலத்தன்மை, உப்பு மற்றும் கார மண்ணிற்கு உணர்திறன் கொண்டது. வயலில் நீர் தேங்குவதைத் தவிர்க்கவும்.

நடவு செய்யும் பருவம் மற்றும் நேரம்

மாநிலங்கள் பருவங்கள் விதைப்பு நேரம் நடவு நேரம் அறுவடை நேரம்
மகாராஷ்டரா, குஜராத்தின்

சில பகுதிகள்

காரீஃப் மே-ஜூன் ஜூலை – ஆகஸ்ட் நடுப்பகுதி அக்டோபர்- டிசம்பர்
ஆரம்ப ரபி அல்லது தாமதமான

காரிஃப்

ஆகஸ்ட் – செப்டம்பர் முதல் வாரம் செப்டம்பர்- அக்டோபர் நடுப்பகுதி ஜனவரி நடுப்பகுதி – பிப்ரவரி கடைசி
ரபி அக்டோபர் – நவம்பர் நடுப்பகுதி டிசம்பர் – ஜனவரி முதல் வாரம் ஏப்ரல் – மே
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆரம்ப காரீஃப் மார்ச் – ஏப்ரல் ஏப்ரல் – மே ஜூலை- ஆகஸ்ட்
காரீஃப் மே-ஜூன் ஜூலை- ஆகஸ்ட் அக்டோபர்- நவம்பர்
ரபி செப்டம்பர்-      அக்டோபர் நவம்பர்- டிசம்பர் மார்ச் – ஏப்ரல்
ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்திரப்பிரதேசம் காரீஃப் மே கடைசி – ஜூன் ஜூலை – ஆகஸ்ட் நடுப்பகுதி நவம்பர்- டிசம்பர்
ரபி அக்டோபர் இறுதி – நவம்பர் டிசம்பர் நடுப்பகுதி – ஜனவரி நடுப்பகுதி மே-ஜூன்
மேற்கு வங்காளம், ஒரிசா காரீஃப் ஜூன் – ஜூலை ஆகஸ்ட் – செப்டம்பர் நவம்பர்- டிசம்பர்
தாமதமான கரீஃப் ஆகஸ்ட் – செப்டம்பர் அக்டோபர்- டிசம்பர் பிப்ரவரி – மார்ச்
மலைப்பகுதிகள் ரபி செப்டம்பர்- அக்டோபர் அக்டோபர் – நவம்பர் ஜூன் – ஜூலை
கோடை (நீண்ட நாள் வகை) நவம்பர்- டிசம்பர் பிப்ரவரி – மார்ச் ஆகஸ்ட்- அக்டோபர்

காரீஃப் – மானாவரி சாகுபடி அல்லது சம்பா பருவம்

ரபி – குறுவை சாகுபடி அல்லது குளிர்கால பயிர் 

வெங்காயத்தின் வகைகள்

மாநிலங்கள் வெங்காய வகைகள்/இரகங்கள்
கர்நாடகா & தெலுங்கானா நாசிக் சிவப்பு வெங்காயம் (N-53), ராயல் தேர்வு வெங்காயம், JSC நாசிக் சிவப்பு வெங்காயம் (N-53), பிரேமா 178 வெங்காயம்
ஆந்திரப் பிரதேசம் நாசிக் சிவப்பு வெங்காயம் (N-53), JSC நாசிக் சிவப்பு வெங்காயம் (N-53), பிரேமா 178 வெங்காயம்,குல்மோகர் வெங்காயம்
மத்திய பிரதேசம் நாசிக் சிவப்பு வெங்காயம் (N-53), குல்மோஹர் வெங்காயம், லக்ஷ்மி வெங்காய விதைகள் டைமண்ட் சூப்பர், ராயல் தேர்வு வெங்காயம், ரைஸ் அக்ரோ மஹா வெங்காயம் பீமா சூப்பர் விதைகள்
மகாராஷ்டிரா நாசிக் சிவப்பு வெங்காயம் (N-53), குல்மோஹர் வெங்காயம், JSC நாசிக் சிவப்பு வெங்காயம் (N-53), ராயல் தேர்வு வெங்காயம், லக்ஷ்மி வெங்காய விதைகள் வைர சூப்பர்
உத்தரப்பிரதேசம் நாசிக் சிவப்பு வெங்காயம் (N-53), ராயல் தேர்வு வெங்காயம், JSC நாசிக் சிவப்பு வெங்காயம் (N-53), பிரேமா 178 வெங்காயம், குல்மோஹர் வெங்காயம்

 

வெங்காயத்தை வளர்ப்பதற்கான வெவ்வேறு முறைகள்

வெங்காயத்தை அவற்றின் சாகுபடியின் நோக்கத்தைப் பொறுத்து மூன்று வெவ்வேறு முறைகளில் வளர்க்கலாம்.

  1. நாற்றங்காலில் விதைகளை விதைத்து, பின்னர் பிரதான நிலத்தில் நாற்றுகளை நடவு செய்தல்
  2. வெங்காய உற்பத்திக்காக சிறிய வெங்காய கிழங்குகளை வளர்ப்பது
  3. பரப்புதல் (வீசுதல்) அல்லது நேரடி விதைப்பு

நர்சரி மேலாண்மை

வெங்காய விதைகள் பொதுவாக நாற்றங்கால் படுக்கைகளில் விதைக்கப்படுகின்றன.

நாற்றங்கால் படுக்கை தயாரித்தல்: 1 ஏக்கர் பிரதான வயலுக்கு, 0.05 ஏக்கர் அதாவது, 200 m² நாற்றங்கால் பகுதி தேவை. கடைசி உழவின் போது 200 கிலோ தொழு உரத்தை 2 லிட்டர் டிரைக்கோடெர்மா ஹார்சியானத்துடன் கலந்து இடுவதன் மூலம் நாற்றழுகல், வேர் அழுகல், கழுத்து அழுகல் மற்றும் பிற மண்ணில் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 1 – 1.2 மீ அகலம், 10-15 செ.மீ உயரம் மற்றும் வசதியான நீளம் கொண்ட படுக்கைகளை தயார் செய்யவும். படுக்கைகளுக்கு இடையே 70 செ.மீ இடைவெளியை பராமரிக்கவும்.

விதை விகிதம்: 1 ஏக்கர் வயலுக்கு 3-4 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி: விதைப்பதற்கு முன், 1 கிலோ விதைகளுக்கு 2 கிராம்/லி தண்ணீரில் பாவிஸ்டின் கலந்து விதை நேர்த்தி செய்யவும் அல்லது 1 கிலோ விதைக்கு உயிர் பூஞ்சைக் கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடியை 8-10 கிராம், 50 மில்லி தண்ணீரில் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் நாற்றழுகல் மற்றும் பிற நோய்களைத் தடுக்கிறது.

விதைப்பு: விதைகளை 5-7.5 செ.மீ இடைவெளியில் 1 செ.மீ ஆழத்தில் வரிசையாக விதைக்கவும். விதைத்த பிறகு, விதைகளை மெல்லிய மண், பொடி செய்த தொழு உரம் அல்லது மண்புழு உரம் கொண்டு மூடவும். பின்னர் லேசான நீர்ப்பாசனம் கொடுங்கள். சொட்டுநீர் அல்லது தெளிப்பான் பாசன முறைகளை பின்பற்றலாம். நெல் வைக்கோல் அல்லது கரும்பு இலைகள் அல்லது புல் கொண்டு பாத்திகளை மூடி, தேவையான ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை பராமரிப்பதன் மூலம் முளைப்பதை மேம்படுத்தவும். நாற்றழுகல் நோய் ஏற்படுவதை தடுக்க, 0.5-0.75 கிராம்/லி தண்ணீரில் கார்பன்டாசிம் 50% WP உடன் பாத்தியில் மண் நனையும்படி ஊற்றவும். விதைத்த 10 நாட்களுக்குப் பிறகு, நாற்றுகள் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகளைக் காட்டினால், 0.5 கிலோ / பாத்திக்கு 15:15:15 (NPK) சேர்க்கவும். முளைத்த பிறகு, தழைக்கூளம் அல்லது மூடாக்கு செய்யப்பட்ட புல் அல்லது வைக்கோலை அகற்றலாம்.

பச்சை வெங்காய உற்பத்திக்காக சிறிய வெங்காய கிழங்குகளை வளர்ப்பது

இந்த முறை பச்சை வெங்காயம் / கொத்து வெங்காயத்தை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இவை குளிர்காலத்தின் தொடக்கத்தில் சாலட் தேவைக்காக உபயோகப்படுத்தப்படுகிறது. நடவு செய்வதற்கு, இதற்கு முந்தைய பருவத்தில் வளர்க்கப்பட்ட காரிஃப் வெங்காய வகைகளின் சிறிய வெங்காய கிழங்குகளை உபயோகப்படுத்திக் கொள்ளவும். மண்ணின் வகையைப் பொறுத்து உயர்த்தப்பட்ட படுக்கைகள் அல்லது தட்டையான படுக்கைகளைத் தயாரிக்கவும் (உயர்ந்த படுக்கை-கனமான மண்; தட்டையான படுக்கை – மணல் மண்). 1 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பாத்திக்கு 15 கிராம் விதைகள் போதுமானது. அதாவது, மொத்த நாற்றங்காலுக்கு 3 கிலோ விதை தேவைப்படும். ஜனவரி-பிப்ரவரி மத்தியில் அவற்றை விதைத்தால், தரமான கிழங்குகள் கிடைக்கும். ஏப்ரல் முதல் மே வரை நாற்றங்கால் படுக்கையில் செடிகளை, அவற்றின் தாள் மடியும் வரை விடவும். வெங்காயத்தாளை அறுவடை செய்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்காய கிழங்குகளை மட்டும் ஜூலை வரை தொங்கும் முறையில் சேமிக்கவும். இந்த சேமித்து வைக்கப்பட்டுள்ள சிறிய பல்பெட்டுகளை (வெங்காய கிழங்குகளை) காரீப் பருவத்தில் பச்சை வெங்காயத்தை வளர்ப்பதற்கு, நாற்று நடுவதற்கு பயன்படுத்தலாம்.

பரப்புதல்/நேரடி விதைப்பு

விதை அளவு: 8-10 கிலோ / ஏக்கர்;

விதைக்கும் நேரம்: செப்டம்பர் – அக்டோபர் 

பெரிய வெங்காயமாக இருந்தால், விதைகளை 30 செ.மீ இடைவெளியில் (வரிசைக்குள் 30 செ.மீ. மற்றும் செடிகளுக்கு இடையே 30 செ.மீ.) கோடுகளாக விதைக்கவும். பின்னர், வெங்காய வளர்ச்சிக்கு சரியான இடைவெளியைக் கொடுக்க தின்னிங் (அதிகப்படியான நாற்றுகளை அகற்றுதல்) செயல்முறையை பின்பற்றலாம். சிறிய வெங்காயமாக இருந்தால், விதைகளை சிறிய தட்டையான பாத்திகளில் பரப்பவும். விதைகளை விதைத்த பிறகு, கைகளை எடுப்பதனால், 2.5-3 செ.மீ ஆழம் வரை விதைகள் சென்றடையும். பிறகு லேசான நீர்ப்பாசனம் கொடுங்கள். 10 நாட்கள் இடைவெளியில் களை எடுக்கலாம்.

பிரதான வயலுக்கு நிலத்தை தயார் செய்தல்

வயலை நன்றாக உழவு செய்து, கடைசி உழவின் போது 10 டன் தொழு உரம் சேர்க்கவும். நாற்றுகளை நடவு செய்வதற்கு தட்டையான பாத்திகள் அல்லது அகன்ற பாத்தி சால்களை உருவாக்கலாம். 1.5 – 2 மீ அகலம் மற்றும் 4-6 மீ நீளம் கொண்ட தட்டையான படுக்கைகளை தயார் செய்யவும். அகலமான பாத்திகளுக்கு, 120 செ.மீ அகலமும் 15 செ.மீ உயரமும், இரண்டு பாத்திகளுக்கு இடையே 45 செ.மீ. இடைவெளி கொண்ட பாத்திகளை உருவாக்கவும். நாற்றுகளை நடவு செய்வதற்கு முன் பாத்திகளுக்கு நீர் பாய்ச்சவும்.

நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை பிரதான வயலில் நடவு செய்தல்

விதை விதைக்கப்பட்ட நாற்றங்காலில் இருந்து வளர்க்கப்படும் நாற்றுகள், காரீப் பயிர்களுக்கு விதைத்த 6 – 7 வாரங்களிலும், ராபிக்கு 8 – 9 வாரங்களிலும் நாற்று நடுவதற்கு தயாராகிவிடும். வரிசைகளுக்கு இடையே 15 செ.மீ இடைவெளியும், செடிகளுக்கு இடையே 10 செ.மீ இடைவெளியும் வைத்து நாற்றுகளை நடவு செய்யவும்.

உர அட்டவணை

வெங்காயத்திற்கான உரத்தின் பொதுவான அளவு ஏக்கருக்கு 60:24:24 கிலோ NPK.

ஊட்டச்சத்து உரங்கள் மருந்து அளவு பயன்படுத்தும் நேரம்
கரிம உரங்கள் மக்கிய தொழு உரம் ஒரு ஏக்கருக்கு 10 டன் கடைசி உழவின் போது
தழைச்சத்து-N யூரியா 65 கிலோ அடி உரம்
65 கிலோ மேல் உரம் (நடவு செய்த 20 முதல் 25 நாட்களுக்கு பிறகு)
மணிச்சத்து-P சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (SSP) 150 கிலோ அடி உரம்
சாம்பல் சத்து-K மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (MOP) 40 கிலோ அடி உரம்
நுண்ணூட்டச் சத்து அன்ஷுல் வெஜிடபிள் ஸ்பெஷல் தெளிக்கவும்: 2.5 கிராம்/லி தண்ணீர் முளைத்த 20 முதல் 25 நாட்களுக்குப் பிறகு (20 நாட்கள் இடைவெளியில் குறைந்தது 3 முறை தெளிக்க வேண்டும்)

நீர் மேலாண்மை

வெங்காயம் முக்கியமாக நீர்ப்பாசனம் செய்யப்படும் பயிராக வளர்க்கப்படுகிறது. நீர்ப்பாசனத்தின் அளவு மற்றும் இடைவெளி ஆனது, தட்பவெப்ப நிலை மற்றும் மண்ணின் வகையைப் பொறுத்தது. நாற்று நடவு செய்யும் போது வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 3 வது நாளில் மற்றொரு நீர்ப்பாசனம் கொடுங்கள். பின்னர், மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 10-15 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச கொடுங்கள்.அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு வயலுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்துங்கள். அதிகமாக நீர்ப்பாசனம் அல்லது குறைந்த நீர்ப்பாசனம் செய்வதை தவிர்க்கவும். ஏனெனில் இது வெங்காயத்தின் வளர்ச்சி மற்றும் செயல்திறனை பாதிக்கலாம். சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர் பாசன முறைகளையும் பின்பற்றலாம்.

களை மேலாண்மை

ஆரம்ப வளர்ச்சியின் போது வயலை களைகள் இல்லாமல் வைத்திருப்பது முக்கியம். திறம்பட பின்பற்றப்படும் களை மேலாண்மைக்காக நடவு செய்த 45 நாட்களுக்குப் பிறகு, ஒரு கையால் களையெடுத்த பிறகு, 200 மிலி/ஏக்கருக்கு ஆக்ஸிஃப்ளூர்ஃபென்ஸ் 23.5% EC-ஐ தெளிக்க வேண்டும்.

பயிர் சுழற்சி மற்றும் கலப்பு பயிர் சாகுபடி

கரும்பு நடவு செய்த 5 மாதங்களில் கரும்புடன் ஊடுபயிராக வெங்காயத்தை பயிரிடலாம். அவற்றை பருப்பு வகைகள், சோளம், பிராசிக்கா மற்றும் சோலனேசியஸ் குடும்ப பயிர்கள் ஆகியவற்றை பயிரிட்டு பயிர் சுழற்சி செய்யலாம். வெங்காயம் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகமாக உறிஞ்சும் மற்றும் விரைவாகக் குறைக்கும். பருப்பு பயிர்களுடன் வெங்காயத்தை சுழற்றுவது மண்ணில் நைட்ரஜனை நிலை நிறுத்த உதவும். மறுபுறம், சோளம் பயிரிடுவதன் மூலம், மண்ணில் இந்த பிரச்சனைகளை உருவாக்குவதை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இது வெங்காயத்தை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்காத புரவலன் ஆகும். இதேபோல், வெங்காயத்துடன் பிராசிக்கா மற்றும் சோலனேசியஸ் பயிர்களை சுழற்றுவது மண்ணின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், பூச்சிகள் மற்றும் நோய்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவும்.

தாவர பாதுகாப்பு நடைமுறைகள்

வெங்காய பயிர் பூச்சிகள்

பூச்சிகள் அறிகுறிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
இலைப்பேன்
  • த்ரிப்ஸ் தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு முறுக்கி காணப்படும்.
  • இலைகளில் மேல் வெள்ளித் திட்டுகளைப் போன்று தோற்றமளிக்கும்.
  • சிதைந்த இலைகள் மற்றும் செடிகள் வாடி காய்ந்துவிடும்.
  • வேப்ப எண்ணெய் 0.3%-யை 2.5-3 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • டெலிகேட் பூச்சிக்கொல்லியை 0.9-1 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • குராக்ரான் பூச்சிக்கொல்லி மருந்தை 2.5 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
தலை துளைப்பான்
  • அவை பூவின் காம்புகளை அதன் தண்டுகளை வெட்டி உண்ணும்.
  • வெங்காயத்தில் துளையிட்டு நுழையும். இது கிழங்கின் மேல் பகுதியில் சிறிய, வட்டமான துளைகளாகக் காணப்படுகிறது.
  • லார்வாக்கள் நுழைவுத் துவாரங்களுக்கு அருகில் சிரிய துகள்களாக அதன் எச்சங்களை விட்டுச் செல்கின்றது.
  • புனல் பொறியுடன் ஒரு ஏக்கருக்கு 6 தபஸ் ஹெலிக்-ஓ-லூரைப் பயன்படுத்தவும்.
  • 0.5 -1 மில்லி சன் பயோ ஹான்பியை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • எக்காலக்ஸ் பூச்சிக்கொல்லி மருந்தை 2 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • சிக்னா பூச்சிக்கொல்லியை 1.5-2 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
வெங்காய ஈ
  • ஈக்கள் முதிர்ந்த இலைகள் மற்றும் மண்ணில் முட்டையிடலாம்.
  • இதன் புழுக்கள் வெங்காய கிழங்கில் துளையை ஏற்படுத்தி, சதையை உண்டு, வெங்காயத்திற்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.
  • புழுக்கள் வெங்காய செடிகளின் வேர்களை உண்பதால், வளர்ச்சி குன்றியிருக்கும்.
  • பாதிக்கப்பட்ட செடிகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் வாடிவிடும்.
  • முதிர்ந்த ஈக்களைக் கட்டுப்படுத்த 1 ஏக்கருக்கு 4 பேரிக்ஸ் கேட்ச் வெஜிடபிள் ஈ ட்ராப் பயன்படுத்தவும்.
  • அலிகா பூச்சிக்கொல்லி மருந்தை 0.5 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • கீஃபுன் பூச்சிக்கொல்லி மருந்தை 2 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
வெட்டுப்புழு
  • இளம் லார்வாக்கள் மென்மையான இலைகளை உண்கின்றன. இதனால் அவை வாடி, மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறும்.
  • பின்னர், அவை வளரும்போது, ​​இளம் வெங்காயச் செடி தண்டின் அடிப்பகுதியில் வெட்டி, கடித்த விளிம்புகள் அல்லது துளைகளை ஏற்படுத்தும். பின்னர் இச்செடி வாடி இறந்துவிடும்.
  • வேதக்னா நோபோரை 2.5-3 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • பியூவேரியா பாசியானா (டாக்டர் பாக்டோஸ்) 1-1.5 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • பிளெதோரா பூச்சிக்கொல்லி மருந்தை 2 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
எரியோபைட் சிலந்திப்பூச்சி
  • அவை அடுக்குகளுக்கு இடையில் உள்ள இளம் இலைகளை உண்கின்றன.
  • இலைகள் விளிம்புகளில் மஞ்சள் நிறமாக மாறக்கூடும்.
  • இலைகள் சுருண்டு, முழுவதுமாக திறக்காமல் போகலாம்.

2 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

  • செட்னா பூச்சிக்கொல்லி மருந்தை 1-1.5 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • ஓபரான் பூச்சிக்கொல்லி மருந்தை 0.3 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
சிவப்பு சிலந்திப் பூச்சி
  • நிம்ஃப் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலைகளின் கீழ் மேற்பரப்பை உண்பதால் இலைகளில் திட்டுக்கள் அல்லது வெள்ளை புள்ளிகள் தோன்றும்.
  • இலைகளில் வலைப்பின்னல் தோன்றும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் கடுமையாக பதிக்கும்போது மஞ்சள் அல்லது வெண்கலப் புள்ளிகளைக் காட்டலாம்.

 

வெங்காய பயிரில் நோய்கள்

நோய்கள் அறிகுறிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
நாற்றழுகல் நோய்
  • மண்ணின் மேற்ப்பரப்புக்கு கீழே தண்டுகள் வாடுதல் மற்றும் சரிவு ஏற்படும்.
  • தண்டுகள் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறும்.
  • வேர்கள் அழுகல்.
  • பாதிக்கப்பட்ட நாற்றுகள் காய்ந்து அல்லது வறண்டு காணப்படும்.
அடித்தாள் அழுகல் நோய்
  • வெங்காயச் செடியின் அடிப்பகுதியில் மென்மையாகவும், மெல்லியதாகவும் அழுகி தாவரத்தின் சரிவுக்கு வழிவகுக்கும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாக தோன்றி பின்னர் காய்ந்துவிடும்.
  • வெங்காயத்தில் வெள்ளை அச்சு பூஞ்சான் வளர்ச்சியின் இருப்பு காணப்படும்.
அடிச்சாம்பல் நோய்
  • இலைகளின் அடிப்பகுதியில் சாம்பல் நிற அச்சு உருவாகி, அவை சுருண்டுவிடும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக ஆரம்பித்து, இறுதியில் பழுப்பு நிறமாகவும் உலர்ந்துவிடும்.
ஸ்டெம்பில்லம் அழுகல்
  • பாதிக்கப்பட்ட இலைகளின் நடுவில் சிறிய மஞ்சள் முதல் ஆரஞ்சு வரையிலான கோடுகளைக் கொண்டிருக்கும்.
  • பின்னர், இந்த தண்ணீரில் ஊறவைத்தது போன்ற கோடுகள் பெரிதாகி ஒன்றிணைந்து, இளஞ்சிவப்பு விளிம்புடன் ஒழுங்கற்ற அல்லது சுழல் வடிவ புள்ளிகளை உருவாக்குகின்றன.
  • இண்டோஃபில் M-45 0.8-1 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • பிளிடாக்ஸ் பூஞ்சைக் கொல்லியை 1-2 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
பாக்டீரியா பழுப்பு அழுகல் (சேமிப்பு கிடங்கில் ஏற்படும் தீவிர நோய்)
  • பழுப்பு, நீரில் நனைந்தது போன்ற கோடுகள்/புள்ளிகள் கிழங்குகளின் கழுத்தில் தோன்றும்.
  • பாதிக்கப்பட்ட திசுக்கள் துர்நாற்றத்துடன் மென்மையாகவும் மெலிதாகவும் மாறும்.
கரிப்பூட்டை நோய்
  • இலையின் அடிப்பகுதியிலும், மேற்பரப்பிலும் கருப்பு வித்துக்கள் தோன்றும்.
  • நடவு செய்யும் போது செதில்களின் அடிப்பகுதியில் கருப்பு புண்கள் தென்படும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் கீழ்நோக்கி வளைந்திருக்கும்.
  • ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் வீட்டேவாக்ஸ் பவுடருடன் விதை நேர்த்தி செய்யவும்.
  • விதைப்பதற்கு முன் கிழங்குகளை 20 மில்லி டிரைக்கோடெர்மா விரிடியுடன், 1 லிட்டர் தண்ணீரில் கலந்து நனைக்கவும்.
  • டைத்தேன் M 45 2-2.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் அல்லது மண்ணில் ஊற்றவும்.
வெள்ளை அழுகல் நோய்
  • இலை நுனிகள் மஞ்சள் நிறம் மாற்றம் அடைந்து, இறக்கும்.
  • அழுகும் செதில்கள் மற்றும் கிழங்குகளின் அடிப்பகுதியில் வெள்ளையாக, பஞ்சு போன்ற பூஞ்சை வளர்ச்சி தென்படும்.
  • சிறிய, கோள, கருப்பு ஸ்க்லிரோஷீயா தோன்றும்.
  • வெங்காயம் முழுமையாக அழுகும்.
ஊதா கொப்புள நோய்
  • இலைகளில் சிறிய, ஒழுங்கற்ற ஊதா நிற புள்ளிகள் காணப்படும்.
  • பின்னர், இந்தப் புள்ளிகள் பெரிதாகி, திட்டுகளாக மாறும்.
  • திட்டுக்கள் வெள்ளை மையத்தோடு ஊதா நிற எல்லையால் சூழப்பட்டிருக்கலாம்.
ஆந்த்ராக்னோஸ் (ட்விஸ்டர் நோய்)
  • இலைகள் சுருண்டு, அதன் விளிம்புகளில் பழுப்பு மஞ்சள் நிறத்தில் தண்ணீரில் நனைந்தது போன்று திட்டுக்களால் முறுக்கப்பட்டிருக்கும்.
கழுத்து அழுகல்
  • பாதிக்கப்பட்ட வெங்காயத்தின் கழுத்து மென்மையாக மற்றும் தண்ணீர் ஒழுகக்கூடியதாக இருக்கும். இதனால் வெங்காயம் கீழே விழு வழிவகுக்கும்.
  • பாதிக்கப்பட்ட கழுத்து பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறி  துர்நாற்றத்தை வெளியிடுகிறது.
  • பாதிக்கப்பட்ட வெங்காயத்தின் கழுத்து தொடுவதற்கு பஞ்சு போன்றதாக மாறும்.
  • சேமிப்பிற்கு முன் சரியான உலர்த்தலை உறுதிப்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பின் கையாளும் போது கிழங்குகளுக்கு காயம் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்கு முன் கார்பன்டாசிம் 2 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
வெங்காயம் மஞ்சள் குட்டை வைரஸ்

திசையன்: அசுவினி 

  • இலைகளில் அடிப்பகுதியில் மஞ்சள் கோடுகள் காணப்படும்.
  • இலைகள் நுனிகளில் இருந்து தொடங்கி அடிப்பகுதியை நோக்கி மஞ்சள் நிறமாக மாறும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் சுருங்கி தட்டையாகிவிடும்.
  • வைரஸ் இல்லாத நாற்றுகளைப் பயன்படுத்துங்கள்.
  • ஜியோலைஃப் நோ வைரஸை 3-5 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • நோய்க்கிருமியைக் கட்டுப்படுத்த போலிஸ் பூச்சிக்கொல்லியை 0.2-0.6 கிராம் /லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
ஐரிஷ் மஞ்சள் புள்ளி வைரஸ்

திசையன்: இலைப்பேன் 

  • உலர்ந்த, வைக்கோல் நிற, பழுப்பு, சுழல் வடிவ காயங்களுடன் மஞ்சள் அல்லது பழுப்பு நிற விளிம்புகளுடன் இலைகள் காணப்படும்.
  • இந்தப் புண்கள் பச்சை நிற மையங்களைக் கொண்டிருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்.
  • ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் பயிர் சுழற்சியை பயிற்சி செய்யுங்கள்.
  • களைகளை அகற்றுதல்.
  • டெர்ரா வைரோகில்லை 3 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • மேலே கொடுக்கப்பட்டுள்ள இலைப்பேனின் கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.

(குறிப்பு: பயன்பாட்டின் சரியான நேரத்தை அறிய, பயன்பாட்டிற்கு முன் தயாரிப்பின் லேபிளைச் சரிபார்க்கவும்.)

அறுவடை

அறுவடை நேரம் எந்த நோக்கத்திற்காக பயிர் நடப்பட்டது என்பதைப் பொறுத்தது. காய்ந்த வெங்காயத்திற்கு 5 மாதங்களில் அறுவடை செய்யலாம். பச்சை வெங்காயம் நடவு செய்த 3 மாதங்களில் அறுவடை செய்யலாம். ரபி வெங்காயத்தை அறுவடை செய்ய, 50% கழுத்து/தாள் மடிந்து விழும் அறிகுறியை வைத்து அறுவடை செய்யலாம். தாள்களை கைமுறையாக பிடுங்குவதன் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. ஆனால் காரீஃப் பருவங்களில், மேல் தாள் பகுதி விழாமல் இருப்பதால், இலைகளின் நிறத்தில் சிறிது மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் கிழங்குகள் மாறுவது அறுவடையின் அறிகுறியாகும். வெயில் காலங்களில், மண் கடினமாக இருக்கும் போது, ​​கை மண்வெட்டியைப் பயன்படுத்தி வெங்காயத்தை வெளியே எடுக்கவும். கார்பென்டாசிம் 2 கிராம்/லிட்டர் தண்ணீருடன் பயிர்களுக்கு தெளிப்பது, அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் அறுவடைக்குப் பிறகு எந்தவிதமான பூஞ்சை தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்க உதவும்.

சீர்மைபடுத்துதல்

அறுவடைக்குப் பிறகு, வெங்காயத்தின் அறுவடைக்கு பிறகான ஆயுளை நீடிக்க, தோல் நிறம் சரியாக வளரவும், சேமிப்பிற்கு முன் வயல் வெப்பத்தை அகற்றவும் வெங்காயத்தை சீர்மைப்படுத்த வேண்டும். சீர்மைப்படுத்துவதற்கு, வெங்காய கிழங்குகளை, நேரடியாக சூரிய ஒளி படாமல் இருப்பதற்காக, சிறிய குவியல்களாக, மற்ற வெங்காய தாள்களின் இலைகளால் மூடி, வயலில் பரப்பவும். இலைகள் மற்றும் தண்டுகள் முற்றிலும் உலர்ந்த மற்றும் உடையக்கூடிய வரை வெங்காயம் 3-5 நாட்களுக்கு உலர அனுமதிக்கவும். முழுவதும் உலர்ந்த பிறகு, வெங்காய கிழங்கிற்கு மேலே சுமார் 2-2.5 செமீ தாள் வரை விட்டு விட்டு இலைகளை வெட்ட வேண்டும்.

சேமிப்பு

வெங்காயத்தை சீர்மைப்படுத்திய பிறகு, அவை குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்கப்படும். பூஞ்சான் அச்சு மற்றும் அழுகலைத் தடுக்க அவற்றை நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைப்பது முக்கியம். வெங்காயத்தை முறையாக குணப்படுத்தி சேமித்து வைத்தால், பல மாதங்கள் சேமிக்க முடியும்.

மகசூல்

ஏக்கருக்கு 8-10 டன்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024