Crop

வெண்டை பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

மால்வேசியே என்பது வெண்டைகாயின் குடும்பமாகும். வெண்டையின் பச்சை நிறம் மற்றும் துடிப்பான சுவைக்காக வளர்க்கப்படும் வருடாந்திர பயிர். இதில் கால்சியம், புரதம், வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்து மினரல்கள் உள்ளன. வெண்டை சாகுபடி உலகம் முழுவதும் நடைபெறுகிறது, மேலும் ஓக்ரா பயிரின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது.

பூச்சிகள், நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்கள் ஓக்ரா பயிரின் ஆரோக்கியமான விளைச்சலின் பாதையைத் தடுக்கின்றன. வெண்டையின்  நோய்கள், பூச்சியின் அறிகுறிகள் மற்றும் அவற்றின்  தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான தகவல் கீழே  விவாதிக்கப்பட்டுள்ளன.

வெண்டை பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

தண்டு மற்றும் காய் புழு

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட செடிகள் குருத்து பகுதி காய்ந்து காணப்படும்.
  • செடியில் பூக்கள் உதிர்வு ஏற்படும்.
  • காய்களில் புழுக்கள் துளையிட்டு சேதப்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறை

  • ஏக்கருக்கு 4 என்ற அளவில் இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து இதனை கட்டுப்படுத்தலாம்.
  • ரைசோபெர்லா கார்ணியா என்னும் இரை விழுங்கி பூச்சியின் முதல் நிலை புழுக்களை ஹெக்டேருக்கு ஒரு லட்சம் அளவுக்கு விட வேண்டும்.
  • இதனை கட்டுப்படுத்த ஃப்லூபென்டாமைட் 39.35% எஸ்.சி (Flubendiamide 39.35% SC)@ 7 மில்லி/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

காய்ப்புழு

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட செடியில் உள்ள காய்களில் துளைகள் காணப்படும்.
  • செடியின் அடியே புழுக்களின் எச்சம் தென்படும்.

கட்டுப்படுத்தும் முறை

  • கவர்ச்சி செடியாக சாமந்தி பூ செடிகளை நடவுசெய்ய வேண்டும்.
  • ரைசோபெர்லா கார்ணியா என்னும் இரை விழுங்கி பூச்சியின் முதல் நிலை புழுக்களை ஹெக்டேருக்கு ஒரு லட்சம் அளவுக்கு விட வேண்டும்.
  • இதனை கட்டுப்படுத்த ஃப்லூபென்டாமைட் 39.35% எஸ்.சி (Flubendiamide 39.35% SC)@ 7 மில்லி/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

வெள்ளை ஈ

அறிகுறிகள்

  • இலையின் மேற்புறத்தில் வெள்ளை நிற புள்ளிகள் காணப்படும்.
  • செடியின் வளர்ச்சி குன்றி இருக்கும்.
  • இலையின் மேற்புறத்தில் கருமை நிறபூஞ்சானை உருவாக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த பூச்சியயை கட்டுப்படுத்த ஃப்லோநிக்அமைட் 50% டபிள்யு.ஜீ (Flonicamid.50%.WG) @ 8 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

அசுவினி

அறிகுறிகள்

  • இந்த பூச்சி செடியின் இலைகளில் சாற்றை உறிஞ்சி குடித்து சேதத்தை ஏற்படுத்தும்.
  • இலைகள் சுருங்கி, சுருண்டு விழுந்து விடும்
  • செடியின் வளர்ச்சிக் குன்றிவிடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இதனை கட்டுப்படுத்த தியோமீதோக்சம் 25% டபிள்யு.ஜீ (Thiamethoxam.25% WG) @ 12 கிராம்/15லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

வெண்டைக்காய் செடியை தாக்கும் நோய்கள்

இலைப்புள்ளி நோய்

அறிகுறிகள்

  • இந்த நோய் ஈரப்பதமுள்ள காலங்களில் தோன்றும்.
  • இலைகளில் உதிர்வு ஏற்படும்.
  • பாதிக்கப்பட்ட செடியின் இலைகளில் கருமை நிற புள்ளிகள் தென்படும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த நோயை கட்டுப்படுத்த மேன்கோசெப் 75% டபிள்யு.பி @ 40 கிராம்/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

மஞ்சள் நரம்பு தேமல் நோய்

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட செடியின் இலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும் இலையின் நரம்பை தவிர அனைத்தும் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.
  • செடியின் வளர்ச்சி நின்றுவிடும்.
  • வெண்டை காய்கள் ஒழுங்கற்ற வடிவத்தில் வளர துவங்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த நோயை வெள்ளை ஈக்கள் பரப்புகிறது. எனவே முதலில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட செடியை வயலில் இருந்து நீக்கிவிட வேண்டும்.
  • ஃப்லோநிக்அமைட் 50% டபிள்யு.ஜீ (Flonicamid.50%.WG) @ 8 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

சாம்பல் நோய்

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட செடி இலையின் மேற்பகுதியில் வெள்ளை நிற பூஞ்சானின் வளர்ச்சி தென்படும்.
  • இவைகள் குளிர் காலத்தில் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த நோயை கட்டுப்படுத்த மேன்கோசெப் 75% டபிள்யு.பி @ 40 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

வேர் அழுகல்

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட செடிகள் முற்றிலுமாக வாடியதை போல் காட்சியளிக்கும்.
  • இறுதிக்கட்டத்தில் செடி முழுமையாக காய்ந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த நோயை கட்டுப்படுத்த வயலுக்கு பாசனத்தில் மேன்கோசெப் என்ற மருந்தை 1 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் கொடுக்கவும்.

 

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025