Crop

வைர முதுகு அந்துப்பூச்சியின் பயனுள்ள மேலாண்மை மூலம் குருசிஃபெரஸ் குடும்ப பயிர்களின் அறுவடைகளைப் பாதுகாத்தல்

நீங்கள் தற்போது முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் கேல் போன்ற குருசிஃபெரஸ் பயிர்களை சாகுபடி செய்து கொண்டிருப்பவரா அல்லது பயிரிட திட்டமிட்டிருப்பவரா?. நீங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய சிக்கலுக்குத் தீர்வாக முக்கியமான தகவல் எங்களிடம் உள்ளது.

வைரமுதுகு அந்துப்பூச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த சிறிய மற்றும் அழிவுகரமான உயிரினம் திறம்பட நிர்வகிக்கப்படாவிட்டால், உங்கள் முழு விளைச்சலையும் அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த பூச்சியிலிருந்து உங்கள் குருசிஃபெரஸ் பயிர்களைப் பாதுகாக்கவும், உங்கள் முதலீட்டைப் பாதுகாக்கவும் மற்றும் உங்கள் மகசூலை அதிகரிக்கவும் உதவும் முக்கிய நுண்ணறிவுகளைக் கண்டறிய இக்கட்டுரையை மேலும் கவனமாக படிக்கவும்.

குருசிஃபெரஸ் வைரமுதுகு அந்துப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்

வைரமுதுகு அந்துப்பூச்சியின் லார்வாக்கள் அவற்றின் உணவு மற்றும் சுரண்டல் நடவடிக்கைகள் மூலம் குருசிஃபெரஸ் தாவரங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். பயிர்களில் அவற்றின் இருப்பைக் குறிக்கக்கூடிய அறிகுறிகளைப் பின்வரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • இளம் லார்வாக்கள் மேல்தோல் திசுக்களை சுரண்டுவதன் (சுரங்கம்) விளைவாக, இலைகளில் வெண்மையான திட்டுகள் தென்படும்.
  • லார்வாக்கள் பிந்தைய நிலைகளுக்கு முன்னேறும்போது, அவை முதன்மையாக இலை மேற்பரப்பிலும், பொதுவாக இலைகளின் அடிப்பகுதியிலும், சிறிய ஒழுங்கற்ற துளைகளை உருவாக்குகின்றன.
  • இந்த துளைகள் பார்ப்பதற்கு ஜன்னல் போன்றும் அல்லது ஷாட்-ஹோல் (சுடப்பட்ட துளை) போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
  • லார்வாக்கள் இலைகளை பெருவேட்கையுடன் உண்கின்றன மற்றும் இலை நரம்புகளுக்கு இடையே உள்ள திசுக்களை உட்கொள்வதன் மூலம் இலைகளை எலும்புக்கூடுகளாக மாற்றுகின்றன.
  • இதன் இளம் வயதில் கூட்டுப்புழு உருவாக்குவதற்காக லார்வாக்களால் பின்னப்பட்ட வலை அல்லது பட்டு இழைகள் இலைகள், இலைகளின் அச்சுகள் அல்லது வளரும் நுனிகளில் காணப்படும்.
  • முட்டைக்கோஸ் மற்றும் பிற பாதிக்கப்பட்ட குருசிஃபெரஸ் பயிர்களில் சிதைந்த அல்லது சிறிய தலைகள் (நுகர்வுப் பொருள்) காணப்படும்.
  • இளம் தாவரங்களில் துளிர்கள் அல்லது வளரும் குருத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் தாவரங்களின் வளர்ச்சி குன்றிக் காணப்படும்.
  • பூ அல்லது காய்கள் உருவாகுவதற்கு முன் துளிர் இலைகளை (பிரதான இலைகளை) உண்பது சில குருசிஃபெரஸ் பயிர்களில் பூ உற்பத்தி மற்றும் விளைச்சலை பாதிக்கும்.
  • புழுவின் எச்சங்கள் காணப்படுதல் அதாவது இலைகளில் அல்லது பெரும்பாலும் உணவு உண்ணும் இடங்களுக்கு அருகில் புழுக்களின் கழிவுகள் காணப்படும்.

தடுப்பு நடவடிக்கைகள்

  • வருடா வருடம் ஒரே பகுதியில் குருசிஃபெரஸ் பயிரிடுவதை தவிர்க்கவும். அந்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை சீர்குலைக்கவும், பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் பருப்பு வகைகள், வெள்ளரிகள், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைக் கொண்டு உங்கள் பயிர்களைச் சுழற்சி முறையில் பயிரிடவும்.
  • அறுவடைக்குப் பிறகு பயிர் குப்பைகள் மற்றும் களைகளை அகற்றுவதால், வயல் அதிக ஈரப்பதமாக இருப்பதைத் தடுக்கப்படுகிறது மற்றும் மீண்டும் நோய்த்தொற்றுக்கான வாய்ப்பும் குறைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு 25 வரிசை முட்டைக்கோசுக்கும் இரண்டு வரிசை கடுகு பயிரிடுவதன் மூலம், கடுகு ஒரு பொறிப் பயிராக பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோஸ் நடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பே, கடுகு பயிரை விதைக்கலாம் அல்லது முட்டைக்கோசுடன் 20 நாள் வயதுடைய கடுகு நாற்றுகளை ஒரே நேரத்தில் நடலாம்.
  • வயது வந்த அந்துப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்க இனக்கவர்ச்சி பொறிகளை அமைக்கவும்.
  • அந்துப்பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க பருவத்தின் ஆரம்பத்தில் நடவு செய்யவும்.

ETL – பொருளாதார உச்ச வரம்பு

தினமும் வைரமுதுகு அந்துப்பூச்சியின் இருப்பைக் கவனியுங்கள். 10 செடிகளுக்கு 20 லார்வாக்களை நீங்கள் கண்டால், நடவடிக்கை எடுத்து உங்கள் குருசிஃபெரஸ் பயிர்களைப் பாதுகாக்க வேண்டிய நேரம் நெருங்கியது.

வைரமுதுகு அந்துப்பூச்சியின் ஒருங்கிணைந்த மேலாண்மை

தேவைப்பட்டால், கடைசி முயற்சியாக வைரமுதுகு அந்துப்பூச்சிக் கட்டுப்பாட்டுக்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். தயாரிப்பு லேபிளில் வழங்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும்.

பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம் மருந்தளவு
இயந்திர மேலாண்மை
தபஸ் வைரமுதுகு அந்துப்பூச்சி லுயூர் பொறி 3 பொறிகள்/ஏக்கர்
உயிரியல் மேலாண்மை
டெல்ஃபின் உயிர் பூச்சிக்கொல்லி பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் வரைட்டி குரூஸ்டாக்கி 1 கிராம்/லிட்டர் தண்ணீர்
இரசாயன மேலாண்மை
கோரோஜன் பூச்சிக்கொல்லி குளோரான்ட்ரானிலிபோல் 18.5% SC 0.1 மில்லி/லிட்டர் தண்ணீர்
டகுமி பூச்சிக்கொல்லி ஃப்ளூபென்டியாமைடு 20% WG 0.5 கிராம்/லிட்டர் தண்ணீர்
கீஃபுன் பூச்சிக்கொல்லி டோல்ஃபென்பைரைட் 15% EC 2 மில்லி / லிட்டர் தண்ணீர்
புரோகிளெய்ம் பூச்சிக்கொல்லி எமாமெக்டின் பென்சோனேட் 5% SG 0.5 கிராம்/லிட்டர் தண்ணீர்
கோத்ரெஜ் கிரேசியா பூச்சிக்கொல்லி ஃப்ளூக்ஸாமெட்டமைடு 10% EC 0.8 மில்லி/லிட்டர் தண்ணீர்
பெகாசஸ் பூச்சிக்கொல்லி டயாஃபென்தியூரான் 50% WP 0.5-1 கிராம்/லிட்டர் தண்ணீர்

 

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024