Crop

UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி கரும்பு பயிரில் பூச்சி மேலாண்மை

கரும்பு 10-12 மாதங்கள் நீண்ட காலத்திற்கு வளரும். எனவே, பல பூச்சி தாக்குதல்களுக்கு ஆளாகிறது. பூச்சித் தாக்குதலால் கரும்பு விளைச்சல் 20-25% வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குருத்துத் துளைப்பான், இடைக்கணுத் துளைப்பான், நுனித்தண்டுத் துளைப்பான், கரையான், வெள்ளை ஈ, செதில் பூச்சி மற்றும் வேர்ப்புழு போன்ற 200-க்கும் மேற்பட்ட பூச்சிகள் கரும்புகளை சேதப்படுத்துகின்றது. அவற்றில், சுமார் 12 பூச்சிகள் பயிரின் அளவு மற்றும் தரம் இரண்டையும் கடுமையாக பாதிக்கும். காலநிலை மாற்றம், பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் இயற்கை வளங்களின் விரைவான செலவழித்தல் ஆகியவற்றால் ஏற்படும் வானிலை நிகழ்வுகளாலும் நவீன விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கு (IPM) உயிரியக்கக் கட்டுப்பாடு நடவடிக்கை ஒரு முக்கிய கருவியாகும். ஏனெனில், இது வழக்கமான முறைகளைக் காட்டிலும் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் ஆரோக்கியமான நட்பு விருப்பங்களை வழங்குகிறது.

பூச்சிகளின் பட்டியல்

  1. குருத்துத் துளைப்பான்
  2. இடைக்கணுத் துளைப்பான்
  3. நுனித்தண்டுத் துளைப்பான் வெள்ளை ஈ
  4. செதில் பூச்சி
  5. வேர்ப்புழு

1. குருத்துத் துளைப்பான்

அறிவியல் பெயர்: சைலோ இன்பஸ்கேட்டுலஸ் ஸ்நெல்லன் 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: கரும்பு விதைக்கரணை

அறிகுறிகள்

  • 1-3 மாத பயிர்களில், குருத்து காய்தல் காணப்படும் மற்றும் அதை எளிதாக வெளியே இழுக்கலாம்.
  • புழுவானது மையத் தளிர்க்குள் நுழைந்து, உட்புற திசுக்களை உண்பதன் மூலம் குருத்து காய்தல் உண்டாக்குகிறது.
  • வைக்கோல் நிறத் தளிர்களின் அழுகிய பகுதியானது, விரும்பத்தகாத வாசனையை வெளியிடுகிறது.
  • தரை மட்டத்திற்கு சற்று மேலே உள்ள தண்டின் அடிப்பகுதியில் சில துளைகள் காணப்படும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு / முற்காப்பு

தடுப்பு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1-2 மில்லி+ 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு

தீர்வு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி 2-3 5-7 நாட்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) / மண்ணில் ஊற்றுதல்
  1. இடைக்கணுத் துளைப்பான்

அறிவியல் பெயர்: சைலோ சக்காரிபேகஸ் இன்டிகஸ்

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: கரும்பு விதைக்கரணை

அறிகுறிகள்

  • நடவு செய்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, இதன் புழுக்கள் கரும்புச் செடிகளைத் தாக்கும்.
  • இடைக்கணுப் பகுதிகள், சிறியதாகவும் மற்றும் சுருங்கியதாகவும் மாறி துளைகள் காணப்படும்.
  • கணுப்பகுதியில் உள்ள துளைகள், புதிதாக வெளியேற்றப்பட்ட மலப்பொருட்களால் நிரப்பப்படுகின்றன.
  • பாதிக்கப்பட்ட பகுதியில் கழிவுகள் காணப்படும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு / முற்காப்பு

தடுப்பு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1-2 மில்லி + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு

தீர்வு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி 2-3 5-7 நாட்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) / மண்ணில் ஊற்றுதல்
  1. நுனித்தண்டுத் துளைப்பான்

அறிவியல் பெயர்: சிர்ப்போபேகா எக்ஸ்செர்ப்டாலிஸ் 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: கரும்பு விதைக்கரணை

அறிகுறிகள்

  • இப்பூச்சியின் புழுக்கள் முதன்மையாக கரும்புகளின் நுனிப்பகுதியை தாக்குகின்றன. அங்கு இவை நுனிக்குருத்து மற்றும் மேல் மூட்டுகளின் கீழ் வழியாக தண்டுப் பகுதிக்குள் ஊடுருவுகின்றன.
  • அறுவடைக்குத் தயாரான கரும்புகளை வெட்டுவதை, இந்த குருத்து காய்தல் கடினமாக்குகிறது.
  • லார்வாக்கள் விரிந்த இலைகளுக்குள் நுழைந்து, வளரும் இலைகளில் வரிசையாக, இணையான துளைகளை உருவாக்குகின்றன.
  • தண்டின் மேற்பகுதியில், துளைகளுடன் கூடிய இலைகள் கொத்தான தோற்றத்தைக் காட்டுகிறது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு / முற்காப்பு

தடுப்பு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1-2 மில்லி + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு

தீர்வு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி 2-3 5-7 நாட்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) / மண்ணில் ஊற்றுதல்
  1. வெள்ளை ஈக்கள்

அறிவியல் பெயர்: அலிரோலோபஸ் பாரோடென்சிஸ்

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை

வெள்ளை ஈக்களின் அறிகுறிகள்

  • இலைகள் மஞ்சள் நிறமாகி, பின்னர் வெளிர் நிறமாக மாறும்.
  • இலை இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறமாக மாறும். பின்னர் காலப்போக்கில் காய்ந்துவிடும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளில் கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள் தோன்றும்.
  • தீவிர சூழ்நிலைகளில், அது தீப்போன்று தோன்றுகிறது.
  • தாவரங்களின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே இருக்கும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு / முற்காப்பு

தடுப்பு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு

தீர்வு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் 1-2 மில்லி + 0.10 மில்லி 2-3 5-7 நாட்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
  1. செதில் பூச்சிகள்

அறிவியல் பெயர்: மெலாஸ்பிஸ் குளோமமெர்டா

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை மற்றும் கரும்பு விதைக்கரணை

செதில் பூச்சியின் அறிகுறிகள்

  • கடுமையான தொற்றின் போது மஞ்சள் நிறமடைகிறது மற்றும் பாதிக்கப்பட்ட கரும்புகளின் இலைகள் நுனி வாடிப்போகும் அறிகுறியை வெளிப்படுத்துகின்றன மற்றும் ஆரோக்கியமற்ற வெளிர் பச்சை நிறமாக மாறுகிறது.
  • இலைகள் கடுமையாக காய்ந்ததும், அவை விரியாமலேயே மஞ்சள் நிறமாக மாறும்.
  • கரும்பு இறுதியில் காய்ந்துவிடும்; தாக்கப்பட்ட பயிர் அதன் வீரியத்தை இழக்கிறது; கரும்புகள் சுருங்கிப் போகின்றன; வளர்ச்சி தடைபடுகிறது; இடை முனை நீளம் கணிசமாக குறைகிறது. வெட்டப்படும் போது, இந்த கரும்புகள் சிவப்பு-பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • மோசமாக பாதிக்கப்பட்ட கரும்புகளில், தடிமனான பழுப்பு நிற கழிவுகள் கணு மற்றும் இடை முனைகளில் காணப்படுகின்றன.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு / முற்காப்பு

தடுப்பு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு

தீர்வு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் 1-2 மில்லி + 0.10 மில்லி 2-3 5-7 நாட்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) / மண்ணில் ஊற்றுதல்
  1. வேர்ப்புழு (சாம்பல் நிற வண்டு)

அறிவியல் பெயர்: கோலோட்ரைக்கியா கொன்சங்கினியா

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை, வேர்கள் மற்றும் தளிர்கள்

அறிகுறிகள்

  • இலைகள் வாடி மஞ்சளாக மாறுதல். முழுக்குருத்துப் பகுதியும் உலர்த்தப்படுகிறது.
  • இழுக்கப்படும் போது, பாதிக்கப்பட்ட கரும்புகள் எளிதில் உடைந்து விடும். வேர்களும் மற்றும் தண்டுப் பகுதியும் இதே போல் பாதிக்கப்பட்டிருக்கும். தாக்கப்பட்ட கரும்புகள் கீழே சாய்ந்து விடும்.
  • நிகழ்காலப் பயிருடன் ஒப்பிடும் போது, மறுதாம்பு பயிர்களுக்கு ஏற்படும் சேதம் மிகவும் கவனிக்கத்தக்கது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு / முற்காப்பு

தடுப்பு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1-2 மில்லி + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு

தடுப்பு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி 2-3 5-7 நாட்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) / மண்ணில் ஊற்றுதல்

தயாரிப்புகள்

வழக்கமான பூச்சிக்கொல்லிகளை விட உயிர் பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழல் நட்புடன் உள்ளன. ஏனெனில், அவை நுண்ணுயிரிகள், தாவரங்கள், எண்ணெய்கள் மற்றும் தாதுக்கள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படும் பூச்சிக்கொல்லிகள். செயற்கை பூச்சிக்கொல்லிகளை விட அவை பாதுகாப்பானவை, குறிப்பிட்ட பூச்சியை அழிக்கும் திறன் கொண்டவை மற்றும் மக்கும் தன்மை கொண்டவை. பரந்த நிறமாலை கொண்ட பூச்சிக்கொல்லிகளை போலல்லாமல் இவை பொதுவாக இலக்கு பூச்சி மற்றும் நெருங்கிய தொடர்புடைய உயிரினங்களை மட்டுமே பாதிக்கின்றன. வழக்கமாக பயன்படுத்தும் செயற்கை பூச்சிக்கொல்லிகள் உயிரினங்கள் மற்றும் பறவைகள், பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. கரும்பு பயிர்களுக்கு, பல்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிர் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். உயிர் பூச்சிக்கொல்லிகள் மண்ணின் தரம் மற்றும் கரும்பின் பயிர் உற்பத்தித்திறனையும் மேம்படுத்துகிறது. UAL பிராண்டின் சிறந்த ஆர்கானிக் பொருட்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்
  2. சைமோ பக்ட்ரோல்
  3. சைமோ தைமோக்ஸ்
  4. ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்
  5. ஜிமோ கேன்மேக்ஸ்

1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள்/தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும்.

  • இதில் உள்ள தாவர சாறுகள் தாவரத்தில் SAR -ஐ(Systemic Acquired Resistance – முறையான வாங்கிய எதிர்ப்பினை) அதிகரிக்கின்றன. இந்த உயிரி பூச்சிக்கொல்லியானது அனைத்து பயிர்களுக்கும் மற்றும் மூன்று வகையான துளைப்பான்கள் மற்றும் கரும்பைத் தாக்கும் கரையான் ஆகியவற்றிற்கு எதிராகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
  • இது முக்கியமாக பூச்சிகளின் லார்வா நிலையை குறிவைத்து அழிக்கிறது. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்வதால், அதன் பறக்கும் திறன் மற்றும் உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது.
  • சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் இரண்டும் ஆரம்பகால தண்டு துளைப்பான் மற்றும் நுனித்தண்டுத் துளைப்பான்களைக் கட்டுப்படுத்த ஒரு தடுப்பு நடவடிக்கையாக தெளிக்கப்படுகிறது.
  • வெள்ளை ஈக்கள் மற்றும் செதில் பூச்சிகளின் தாக்கத்திற்குப் பிறகு, அவற்றை கட்டுப்படுத்த சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  மருந்து தெளிக்கப்படுகிறது. நோய் கடுமையாக இருந்தால், 5-7 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறை தெளிக்க வேண்டும்.
  • சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் மட்டும் கரும்பின் வேர்ப்புழுவிற்கு (சாம்பல் நிற வண்டு) எதிராகத் தெளிக்கப்படுகிறது.
  1. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. தயாரிப்பு என்பது தாவரவியல் சாறுகள்/தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப்பொருட்களின் தனித்துவமான கலவையாகும்.
  • இதன் முக்கிய நன்மைகள் என்னவென்றால், இது அனைத்து வகையான பூச்சிகளிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் இது ஒரு பரந்த நிறமாலை கொண்ட  பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது.
  • இந்த உயிர் பூச்சிக்கொல்லி அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் முக்கியமாக கரும்பைத் தாக்கும் வேர்ப்புழு (சாம்பல் நிற வண்டு), செதில் பூச்சி மற்றும் கரையான்கள் மற்றும் கரும்புகளை குறிவைத்து அழிக்கிறது.
  • செயல் முறை நரம்பு மண்டலத்தை முடக்குகிறது மற்றும் இயக்கம்/பறத்தல் மற்றும் உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது.
  • வெள்ளை ஈக்கள் மற்றும் செதில் பூச்சிகளின் தாக்கத்திற்குப் பிறகு, சைமோ பக்ட்ரோல் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் இரண்டும் உடனடியாக தெளிக்கப்படுகிறது.
  • தண்டு துளைப்பான், இடைக்கணுத் துளைப்பான், நுனித்தண்டுத் துளைப்பான், வெள்ளை ஈக்கள் மற்றும் செதில் பூச்சிகளைப் கட்டுப்படுத்த, சைமோ பக்ட்ரோல் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்  ஆகியவற்றை இரண்டு முறை தெளிக்கலாம். அதேசமயம், சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் இரண்டும் கரையான் மற்றும் வேர்ப்புழுவிற்கு (சாம்பல் நிற வண்டு) எதிராக தெளிக்கப்படுகிறது.
  1. ஜிமோ தைமோக்ஸ்: இது ஒரு செறிவூட்டப்பட்ட பரந்த நிறமாலை கொண்ட கரிம பூஞ்சை மற்றும் பாக்டீரியாவினைக் கட்டுப்படுத்தும் முகவர் ஆகும். இத்தயாரிப்பு தாவரவியல் சாறுகள் செறிவு, தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப் பொருட்கள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையைக் கொண்டுள்ளது.
  • ஜிமோ தைமோக்ஸ் பாக்டீரியல் புள்ளி நோய் மற்றும் புசாரியம் வாடல் நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு பயனுள்ள உயிர் பூச்சிக்கொல்லியாகும்.
  • வேர்ப்புழுவிற்கு எதிராக, சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ தைமோக்ஸ்-ஐ தடுப்பு நடவடிக்கையாக மண்ணில் ஊற்ற வேண்டும். தேவைப்பட்டால் 3-5 வார இடைவெளியில் 1-2 முறை ஊற்றவும்.
  • நோய் தாக்கிய பிறகு உடனடித் தீர்வாக, இவை பரிந்துரைக்கப்படுகின்றன. நோய் கடுமையான நிலையில் இருந்தால் 1-2 மி.லி/லிட்டர் தண்ணீருக்கு, 5-7 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை தெளிக்க வேண்டும்.
  1. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீராகப் பரப்புவதற்கு உதவியாக இருக்கும்.
  • இதை கரும்பினை தாக்கக்கூடிய அனைத்து பூச்சிகளுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலின் ஒட்டும் தன்மையையும், அதன் பரவலையும் அதிகரிக்கிறது.
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்-ஐ UAL -இன் பிற தயாரிப்புகளுடன் இணைந்து பயன்படுத்தலாம். இது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அருமையான பரவலன். இது அனைத்து தெளிப்பு கரைசல்கள் மற்றும் மண்ணில் பயன்படுத்தப்படும் கரைசல்களின் செயல்திறனை அதிகரிக்கவும் செய்கிறது.
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் மருந்தின் அளவு, பயன்பாட்டு முறையைப் பொறுத்தது. தொட்டி கலவைக்கு, 0.10 மில்லி/லிட்டர் தண்ணீர் (அதாவது 10 மில்லி/100 லிட்டர் தண்ணீர்) பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்திற்கு, ஏக்கருக்கு 25 மில்லி/ 200 லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
  1. ஜிமோ கேன்மேக்ஸ்: இது ஒரு தூள் வடிவ தயாரிப்பு ஆகும். இது கரும்பு பயிர்கள் வளர்க்கப்படும் பகுதிகளில் மண் மேம்பாட்டாளராகப் பயன்படுத்தப்படுகிறது. இது மரபணு மாற்றம் செய்யப்படாத மண் புரோபயாடிக்குகள், ப்ரீபயாடிக்குகள், நிலைப்படுத்திகள், பேரூட்டம் & நுண்ணூட்டச்சத்துக்கள் போன்ற மண் மேம்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது.
  • இது மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
  • இது கரிமப் பொருட்களின் சிதைவை துரிதப்படுத்துகிறது.
  • இது மண்ணில் உள்ள ஹியூமஸ் / கார்பனின் அளவை அதிகரிக்கிறது.

சான்றிதழ்: UAL ஆனது ZYMO® மற்றும் ΧΥΜΟ® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் கரிம உயிர்-தீர்வுகளைத் தயாரித்து சந்தைப்படுத்துகிறது, இவை OMRI, ECOCERT, EU, JAS, NOP மற்றும் NPOP போன்ற கரிம வேளாண்மைக்கான பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தரங்களால் சான்றளிக்கப்பட்டுள்ளன. UAL தயாரிப்புகள் கரிம மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு மட்டும் உறுதியளிக்கவில்லை,  தரம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புகளின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024