பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) எனும் திட்டத்தை, உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் (MoFPI) அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தது. PMKSY திட்டம் என்பது விவசாயத் துறையை நவீனமயமாக்கவும், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு விரிவானத் திட்டமாகும். இத்திட்டம் விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், பதப்படுத்துதலை நவீனப்படுத்துதல், விவசாய உற்பத்தி கழிவுகளைக் குறைத்தல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
வகை | கருத்துக்கள் |
நோக்கம் | செயலாக்கத்தை நவீனப்படுத்த, விவசாயக் கழிவுகளைக் குறைத்து விவசாயத்திற்கு துணைபுரிய வேண்டும் |
திட்டம் நீட்டிக்கப்பட்ட காலம் | 2021-22 முதல் 2025-26 வரை |
மூலதன மானியம் | பல்வேறு கூறுகளின் கீழ், முதலீட்டாளர்களுக்கு தகுதியான திட்டச் செலவில் 35% முதல் 75% வரை, உதவித்தொகை வடிவில் வழங்கப்படுகிறது |
பயனாளிகள் | இந்திய விவசாயிகள் |
உதவி முறை | உற்பத்திக் குழுவிலிருந்து பயிர்களைக் கொண்டு செல்வதற்கும், பயிர்களுக்கான சேமிப்பு வசதிகளை வாடகைக்கு எடுப்பதற்கும் (அதிகபட்சம் 3 மாதங்கள்) உண்டாகும் செலவில், 50% மானியத்தை அமைச்சகம் வழங்கும் |
ஒரு நிறுவனத்திற்கு (ஒன்று அல்லது அதிகப் பயிர்கள்) கொள்முதல், கொண்டு செல்லுதல் மற்றும் சேமித்து வைக்க வேண்டிய குறைந்தபட்ச அளவு |
|
PMKSY திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை, 18,06,027 விவசாயிகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. 2017-18 முதல் 2022-23 வரை, PMKSY திட்டத்தின் பல்வேறு துணைத் திட்டங்களின் கீழ், 4,026 திட்ட முன்மொழிவுகளில் 1,002 முன்மொழிவுகள் மாநில அரசுகள் மற்றும் தொழில்முனைவோரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
2016-17 ஆம் ஆண்டில் ரூ.1.79 லட்சம் கோடியாக இருந்த உணவுப் பதப்படுத்துதல் துறையின் மொத்த மதிப்பு, 2020-21 ஆம் ஆண்டில் ரூ.2.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.27%.
பல விவசாயிகளும், உணவுப் பதப்படுத்தும் பிரிவுகளும் PMKSY திட்டத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. விழிப்புணர்வை அதிகரிப்பதும், பங்கேற்பை ஊக்குவிப்பதும் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானதாகும்.
PMKSY திட்டம் என்பது, இந்தியாவில் விவசாயம் மற்றும் உணவுப் பதப்படுத்தும் துறையை மாற்றும் திறன் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். மதிப்புக் கூட்டலை ஊக்குவிப்பதன் மூலமும், வீணாவதைக் குறைப்பதன் மூலமும், இந்தத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், நுகர்வோருக்கு பதப்படுத்தப்பட்ட உணவின் தன்மை மற்றும் தரத்தை மேம்படுத்த முடியும்.
பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…
அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…