Govt for Farmers

காய்கறிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய ஒடிசா மாநிலத்தின் அருமையானத் திட்டம் இதோ!

ஐந்து காய்கறிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், காய்கறிகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் விதை மசாலா ஆகியவற்றிற்கு மற்ற மாநிலங்களை நம்பியிருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன் “உருளைக்கிழங்கு, காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் வளர்ச்சி” எனும் புதிய மாநிலத் திட்டத்தை ஒடிசா மாநிலம் தொடங்கி உள்ளது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பயிரிடுவதற்கும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், இந்தத் திட்டம் நிதி உதவி அளிக்கிறது.

திட்ட மேலோட்டம்

  • திட்டத்தின் பெயர்: உருளைக்கிழங்கு, காய்கறி மற்றும் மசாலா வளர்ச்சித் திட்டம்
  • திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு: 2022
  • திட்ட நிதி ஒதுக்கீடு: ரூ.1,142.24 கோடி
  • கால அளவு: 2022-23 முதல் 2025-26 வரை
  • அரசுத் திட்டத்தின் வகை: ஒடிசா மாநில அரசுத் திட்டம்
  • நிதியுதவி/துறைத் திட்டம்: மாநிலத் துறைத் திட்டம்

திட்டத்தின் நோக்கம்

உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பயிரிடுவதற்கு, விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • 5 காய்கறிகள் (உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ்) உற்பத்தியில் மாநிலத்தை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும்.
  • மசாலாப் பொருட்களின் பரப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.

திட்டத்தின் நன்மைகள்

உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பயிரிட விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கிறது.

  • விவசாயிகளின் வருமானம் அதிகரித்தல் மற்றும் கிராமப்புறங்களில் புதிய பல வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
  • ஒடிசா மாநிலம், மற்ற மாநிலங்களை நம்பியிருப்பதைக் குறைத்தல்.
  • 5 காய்கறிகள் (உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ்) உற்பத்தியில் மாநிலம் தன்னிறைவு பெறுதல்.

ஒடிசா மாநில அரசால் உருவாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, காய்கறி மற்றும் மசாலாத் திட்டத்தின் வளர்ச்சித் திட்டம், காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கும், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் சாகுபடிக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம், இத்திட்டம் விவசாயத் துறையை மேம்படுத்துவது மட்டுமின்றி, விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும். 2022-23 முதல் 2025-26 வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு, ரூ.1,142.24 கோடி பட்ஜெட்டுக்கு ஒடிசா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஒடிசாவின் விவசாய நிலப்பரப்பை மாற்றி, மேலும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் இந்தத் திட்டம் தயார் நிலையில் உள்ளது.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024