Govt for Farmers

தினை சார்ந்த தயாரிப்புகளை ஊக்குவிக்கும் மத்திய அரசின் அருமையான திட்டம் இதுதான்!

தினை அடிப்படையிலான உற்பத்திக்கான உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLISMBP), 2022 ஆம் ஆண்டில் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தால் (MOFPI), உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைக்கான PLI திட்டத்தின் துணை அங்கமாக தொடங்கப்பட்டது. சமைப்பதற்குத் தயார் / உண்ணத் தயார் (RTC/RTE) தயாரிப்புகளில், தினைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் அவற்றின் மதிப்புக் கூட்டல் மற்றும் விற்பனையை மேம்படுத்துதல்  இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

திட்ட மேலோட்டம்

  • திட்டத்தின் பெயர்: தினை அடிப்படையிலான உற்பத்திக்கான உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLISMBP)
  • திட்டம் மாற்றப்பட்ட / செயல்படுத்தப்பட்ட ஆண்டு: 2022
  • திட்ட நிதி ஒதுக்கீடு: ரூ.800 கோடி (பெரிய நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி மற்றும் MSME -களுக்கு ரூ.300 கோடி)
  • அரசுத் திட்டத்தின் வகை: மத்திய அரசுத் திட்டம்

அம்சங்கள்

  1. செலவு

  • செலவினம்: ரூ.800 கோடி
  • திட்டக் காலம்: 2022-23 முதல் 2026-27 வரை
  1. தகுதி

  • விண்ணப்பதாரர்: தனியுரிமை நிறுவனம், கூட்டாண்மை நிறுவனம் / வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை / இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம், கூட்டுறவு, MSME.
  • வகைப்பாடு: MSME மற்றும் பெரிய நிறுவனம்
  • பெரிய நிறுவனத்திற்கான குறைந்தபட்ச விற்பனை: ரூ.250 கோடி
  • MSME தகுதிக்கான குறைந்தபட்ச விற்பனை: ரூ.2 கோடி
  • MSME-களுக்கு Udyam பதிவுச் சான்றிதழ் கட்டாயம்
  • ஊக்கத்தொகை வழங்குவதற்குத் தேவைப்படும் தகுதியான தயாரிப்புகளின் விற்பனையில் குறைந்தபட்ச CAGR 10%.
  1. ஊக்கத்தொகை

  • பெரிய நிறுவனம்: ரூ.100 கோடி வரை ஒதுக்கப்பட்ட செலவினம்
  • MSME: ரூ.40 கோடி வரை ஒதுக்கப்பட்ட செலவினம்
  1. திட்ட மேலாண்மை முகமைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு, அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவால் கண்காணிக்கப்படுகிறது.

தினை அடிப்படையிலான உற்பத்திக்கான உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தில் (PLISMBP) விற்பனை, அதிகரிக்கும் விற்பனை மற்றும் அதற்கான ஊக்கத்தொகைகளைக் கணக்கிடுவதில் அடிப்படை ஆண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. அடிப்படை ஆண்டு ஒதுக்கீட்டை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

  • திட்டத்தின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு (2022-23 முதல் 2024-25 வரை), கணக்கீட்டு நோக்கங்களுக்கான அடிப்படை ஆண்டு 2020-21 என அமைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்த காலகட்டத்தில் செலுத்த வேண்டிய விற்பனை, அதிகரிக்கும் விற்பனை மற்றும் ஊக்கத்தொகை ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு, அடிப்படை ஆண்டில் அடையப்பட்ட விற்பனையுடன் ஒப்பிடப்படும்.
  • நாம் முன்னேறும் போது, அடிப்படை ஆண்டு நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளுக்கு மாறுகிறது. நான்காவது ஆண்டிற்கு (2025-26), அடிப்படை ஆண்டு 2022-23 ஆகவும், ஐந்தாவது ஆண்டிற்கு (2026-27) அடிப்படை ஆண்டு 2023-24 ஆகவும் இருக்கும். இந்தச் சரி செய்த திட்டத்தின் மதிப்பீடு துல்லியமாகவும், நேரம் செல்லச் செல்ல புதுப்பித்ததாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

திட்டம் பற்றிய சமீபத்திய செய்திகள்

தினை சார்ந்த தயாரிப்புகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியதன் காரணமாக இந்தத் திட்டம் சமீபத்திய செய்திகளில் கவனம் பெற்றது. 

2023 ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக (IYM) கொண்டாடப்படுவதால், உணவுப் பொருள்களில் தினைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அவற்றின் மதிப்புக் கூட்டலை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தினைகளை ஊக்குவிக்கவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஏற்றுமதியாளர்களை ஈர்ப்பதற்காகவும் APEDA உடன் இணைந்து ஒரு உலகளாவிய நிகழ்வு, கண்காட்சி மற்றும் வாங்குபவர் – விற்பனையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. 

நன்மைகள்

  • சமைப்பதற்குத் தயார் / உண்ணத் தயார் பொருள்களில் தினைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
  • உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் தினை சார்ந்த பொருள்களின் மதிப்புக் கூட்டல் மற்றும் விற்பனையை ஊக்குவிக்கிறது.
  • தினை நுகர்வு மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகளை ஊக்குவிக்கிறது.
  • உணவுப் பதப்படுத்தும் தொழிலின் வளர்ச்சியை ஆதரிக்கவும் மற்றும் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

குறைகள்

உமி நீக்கப்பட்ட அல்லது பாலீஷ் செய்யப்பட்ட தினை தானியங்கள், வண்ண வரிசைப்படுத்தப்பட்ட தினை தானியங்கள் மற்றும் தினை மாவு / அட்டா போன்ற முதன்மை பதப்படுத்தப்பட்ட தினைப் பொருள்களை, முதன்மையாக கையாளும் விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்காது. ஏனெனில் இந்தத் தயாரிப்புகள் தகுதியான உணவுப் பொருள்கள் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

PLISMBP திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  1. முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.
  2. வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
  3. இதனுடன் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
  4. பிறகு, ஆன்லைனில் விண்ணப்பிக்க என்ற மெனுவை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
  5. வழங்கப்பட்ட விண்ணப்ப எண் மூலம், உங்கள் விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணித்துக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்

  • விண்ணப்பதாரரின் பதிவுச் சான்றிதழ் (தனியுரிமை நிறுவனம், கூட்டாண்மை நிறுவனம் / LLP / நிறுவனம்)
  • Udyam பதிவுச் சான்றிதழ் (MSME விண்ணப்பதாரர்களுக்கு)
  • அடிப்படை ஆண்டு மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான விற்பனைத் தரவு
  • குறிப்பிடப்பட்ட பிற தொடர்புடைய ஆவணங்கள்

முடிவுரை

தினை அடிப்படையிலான உற்பத்திக்கான உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLISMBP) என்பது, தினை சார்ந்த தயாரிப்புகளை ஊக்குவிப்பது மற்றும் உணவுப் பதப்படுத்தும் துறையில் அவற்றின் மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசின் ஒரு சிறந்த முயற்சியாகும். 

இத்திட்டமானது, MSME-கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்குச் சமைப்பதற்குத் தயார் / உண்ணத் தயார் (RTC/RTE) உணவுப் பொருள்களில், தினைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக சலுகைகளை வழங்குகிறது. தினை நுகர்வை ஊக்குவிப்பதன் மூலம், உணவுப் பதப்படுத்தும் துறையின் வளர்ச்சிக்கு இத்திட்டம் பங்களிக்கிறது மற்றும் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025