தேசிய மூங்கில் பணி
மூங்கில் சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு முக்கியமான தொழிலாகும். இந்தியாவில் போதுமான உயர்தர மூங்கில்களின் இருப்பு உள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் மூங்கில் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் மூங்கில் சாகுபடியின் பரப்பளவு சுமார் 13.96 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் மேலாக உள்ளது, மேலும் 136 க்கும் மேற்பட்ட தனித்துவமான மூங்கில் இனங்களை கொண்டுள்ளது. ‘ஏழைகளின் மரம்’ என்றும் அழைக்கப்படும் மூங்கிலின் உற்பத்தில் இந்தியா ‘இரண்டாம் இடத்தில்’ உள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க மூங்கில் உற்பத்தியை அதிகரிக்க ‘தேசிய மூங்கில் பணி’ என்னும் திட்டத்தை 2006-07 ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்த பணி தற்போது ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு துணைத் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மறுசீரமைக்கப்பட்ட ‘தேசிய மூங்கில் இயக்கம்’ 2018-19 ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய மூங்கில் திட்டம் மாநில நோடல் ஏஜென்சிகள் (SNAs) மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆர்வமுள்ள நபர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தங்கள் மாநிலத்திலுள்ள அந்தந்த SNA’களைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்தத் திட்டமானது, மூங்கில் பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கான வருமான ஆதாரத்தை உருவாக்குதல், நிலையான மூங்கில் சாகுபடி நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் மூங்கில் அடிப்படையிலான மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இந்த பணி கவனம் செலுத்தி வருகிறது.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…