Govt for Farmers

பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா – பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம்

பரம்பரகட் க்ரிஷி விகாஸ் யோஜனா (PKVY) விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது. இந்தியாவில் இரசாயனமற்ற இயற்கை விவசாயத்தை கிளஸ்டர் (தொகுப்பு) முறையில் ஊக்குவிக்க இந்திய அரசு இந்த PKVY திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. PKVY என்பது தேசிய நீடித்த வேளாண்மைத் திட்டத்தின் (NMSA) கீழ் வரக்கூடிய மண் சுகாதார மேலாண்மையின் (SHM) ஒரு விரிவான அங்கமாகும். PKVY இன் முக்கிய நோக்கம் இயற்கை விவசாயத்தை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் மற்றும் அதன் மூலம் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் ஆகும்.

திட்ட மேலோட்டம்

  • திட்டத்தின் பெயர்: பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா – பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம்
  • இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது: 2015
  • திட்ட நிதி ஒதுக்கீடு: மத்திய பங்கு ஒதுக்கீட்டின்படி
  • அரசுத் திட்டத்தின் வகை: மத்திய நிதியுதவித் திட்டம்
  • நிதியுதவி/துறைத் திட்டம்: வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
  • விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://pgsindia-ncof.gov.in
  • உதவி எண்: NA

பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனாவின் அம்சங்கள்

பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டமானது பங்கேற்பு உத்திரவாத அமைப்பு (PGS) சான்றளிப்பு முறைகள் மூலம் இயற்கை வேளாண்மைக்கான சான்றிதழை உருவாக்குவதை உள்ளடக்கியது. PGS, பண்ணைகளுக்கு இயற்கை விவரத்துணுக்குகளை (ஆர்கானிக் லேபிள்களை) வழங்குகிறது. இது நிலத்தை வழக்கமான பண்ணைகளிலிருந்து கரிமப் பண்ணைகளுக்கு மாற்றுகிறது மற்றும் அவற்றின் தயாரிப்புகளை உள்நாட்டில் சந்தைப்படுத்த உதவுகிறது.

வகை கருத்துக்கள்
நோக்கம் சட்டப்பூர்வ சான்றிதழுடன் இயற்கை விவசாய நிலத்தை உருவாக்குதல்
பயனாளி விவசாயிகள்
முக்கிய கூறுகள்
  1. நவீன இயற்கைமுறை தொகுப்பு செயல் விளக்கம் – இயற்கை வேளாண்மையின் சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல்/ஊக்குவித்தல்
  2. மாதிரி இயற்கைப் பண்ணை – இது ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் வழக்கமான நிலத்தை இயற்கை விவசாய முறைகளாக மாற்றுவதை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கூறு விவசாயிகளுக்கு வெளிப்பாடு வருகைகள் (Exposure visit)  மூலம் கரிம உள்ளீடுகள் உற்பத்தியின் பல்வேறு அலகுகளின் சமீபத்திய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவலை பரப்ப உதவுகிறது.
விவசாயிகள் தொகுப்பு 50 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் 50 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதற்காக ஒரு குழுவை உருவாக்குவார்கள். 3 ஆண்டுகளுக்கு 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தின் கீழ் 10,000 தொகுப்புகள் உருவாக்கப்படும்.
நிதி உதவி ரூ.50000/எக்டர்/3 வருடங்கள் – தொகுப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு, உள்ளீடுகளுக்கான ஊக்கத்தொகை, மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கு வழங்கப்படுகிறது. இதில் ரூ.31000/ஹெக்டருக்கு/3 வருடங்கள் – உயிர்/கரிம உரங்கள், உயிர் பூச்சிக்கொல்லிகள், விதைகள் போன்ற கரிம இடுபொருட்களை டிபிடி மூலம் தயாரிக்க/கொள்முதல் செய்வதற்காகவும், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல், சேமிப்பு போன்ற அறுவடை மேலாண்மை நடைமுறைகளுக்கு ரூ.8800/ஹெக்டருக்கு 3 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.
நில மாற்றத்திற்கான காலம் PKVY திட்டத்தின் கீழ், PGS சான்றிதழுக்கு சட்டப்பூர்வமாக தகுதி பெற, விவசாயிகள் 36 மாத காலத்திற்குள் நிலத்தை இயற்கை விவசாய நிலமாக மாற்ற வேண்டும்.

 

பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனாவின் பலன்கள்

  • பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் காரணியாகும்.
  • இத்திட்டம் இயற்கை விவசாயிகளுக்கு அதாவது உற்பத்தியிலிருந்து சான்றிதழ் மற்றும் சந்தைப்படுத்தல் வரை, தொடக்கம் முதல் இறுதி வரையிலான ஆதரவை வலியுறுத்துகிறது.
  • கரிம பண்ணை நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது உட்பட விவசாய உற்பத்திகளுக்கான உள்நாட்டு சந்தைகளை மேம்படுத்துவதற்கும் இது உதவுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முழுமையான நிதியுதவி கிடைக்கும்.
  • நவீன முறைகள் மற்றும் பாரம்பரிய முறைகள் கலந்திருப்பதால் விவசாயிகள் மேலும் நீடித்து நிலைக்க இத்திட்டம் உதவுகிறது.
  • இத்திட்டம் குழுக்களை உருவாக்கவும், அதிக உள்ளீடுகளைப் பெறவும், திறனை உருவாக்கவும், சந்தைப்படுத்தல் மற்றும் மதிப்பைக் கூட்டக்கூடிய பிற வேலைகளுக்கு நிதி உதவி வழங்கும்.
  • நேரடி வங்கி பரிமாற்றம் மூலம் விவசாயிகள் தங்கள் வங்கியில் நிதியைப் பெறுவார்கள்

PKVY பற்றிய சமீபத்திய செய்திகள்

சமீபத்திய தரவுகளின்படி, PKVY திட்டத்தில் 32384 தொகுப்புகள் உருவாக்கப்பட்டு 6.53 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 16.19 லட்சம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

PKVY க்கு தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • குடியிருப்புச் சான்றிதழ்
  • வருமானச் சான்றிதழ்
  • ரேஷன் கார்டு
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனாவுக்கு எப்படி விண்ணப்பிப்பது

  1. பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும், அதாவது https://pgsindia-ncof.gov.in
  2. முகப்பு பக்கத்தில், இப்போது விண்ணப்பிக்கவும் விருப்பத்தை தேர்வு செய்யவும்
  3. விண்ணப்பப் பக்கம் திரையில் காட்டப்படும்
  4. படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளிடவும். (பெயர், மொபைல் எண், முகவரி, மின்னஞ்சல் ஐடி, வங்கி விவரங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் குறிப்பிடவும்) மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்
  5. விண்ணப்பத்தின் இறுதி சமர்ப்பிப்புக்கு சமர்ப்பி பொத்தானைக் தேர்வு செய்யவும்

முடிவுரை

பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (PKVY) சான்றளிக்கப்பட்ட இயற்கை விவசாயம் மூலம் வணிக கரிம உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இத்திட்டம் விவசாயிகளை உள்ளீடு உற்பத்திக்கான இயற்கை வளங்களைத் திரட்டி இயற்கை விவசாயம் செய்ய ஊக்குவிக்கும். இரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கான ஆரம்ப கட்டத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024