Govt for Farmers

பால் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும், பால்வள மேம்பாட்டுக்கான தேசிய திட்டம் (NPDD)!

பால்வளத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தவும், நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்திய அரசால் 2014 ஆம் ஆண்டு, பால்வள மேம்பாட்டுக்கான தேசியத் திட்டம் (NPDD) தொடங்கப்பட்டது. கறவை மாடுகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், சுத்தமானப் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், பால் கூட்டுறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஆதரவை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

திட்ட மேலோட்டம்

  • திட்டத்தின் பெயர்: பால்வள மேம்பாட்டுக்கான தேசிய திட்டம் (NPDD)
  • திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு: 2014
  • திட்டம் மறுசீரமைக்கப்பட்ட ஆண்டு: ஜூலை 2021
  • பட்ஜெட் ஒதுக்கீடு: ரூ.1,790 கோடி
  • செயல்படுத்திய துறை: கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை
  • செயல்படுத்தும் அமைப்பு: மாநில அமலாக்க அமைப்பு (SIA) – மாநில கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பு
  • அரசுத் திட்டத்தின் வகை: மத்திய அரசுத் திட்டம்
  • நிதியுதவி / துறைத் திட்டம்: துறைத் திட்டம்
  • இணையதளம்: http://www.nddb.coop/, https://dahd.nic.in/

திட்டத்தின் நோக்கங்கள்

  • விவசாயிகளை நுகர்வோருடன் இணைக்கும் குளிர் சங்கிலி உள்கட்டமைப்பை நிறுவுதல் உட்பட, உயர்தரப் பால் உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அதிகரித்தல்.
  • பால் உற்பத்தியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல் மற்றும் தற்போதுள்ள பயிற்சி வசதிகளை மேம்படுத்துதல்.
  • கிராமப்புற அளவில் பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களை வலுப்படுத்துதல்.
  • சாத்தியமான பால் கூட்டமைப்புகள் மற்றும் ஒன்றியங்களில் பால் உற்பத்தியை அதிகரித்தல்.

திட்டத்தின் அம்சங்கள்

தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் (NPDD), விவசாயிகள் மற்றும் பால்வளத் துறைக்கு பல்வேறு அம்சங்களையும், நன்மைகளையும் வழங்குகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களை பின்வருமாறு குறிப்பிடலாம்.

கூறு “A” கூறு “B”
முதன்மை குளிரூட்டும் வசதிகள் மற்றும் தரமான பால் பரிசோதனை கருவிகளை செயல்படுத்த தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கி, மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. கூட்டுறவு மூலம் பால் பண்ணை (DTC)- ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) நிதி உதவி வழங்குகிறது.
  • தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குதல்.
  • கிராமத்தில் உள்ள விளைபொருட்களுக்கு சந்தை இணைப்புகளை வழங்குதல்.
  • பங்குதாரர் நிறுவனங்களின் திறனை, கிராமம் முதல் மாநிலம் வரை வலுப்படுத்துதல்.

திட்டத்தின் நன்மைகள்

தேசியப் பால்வள மேம்பாட்டுத் திட்டம் (NPDD), விவசாயிகள் மற்றும் பால்வளத் துறைக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அவற்றில் சிலவற்றை இப்போது காண்போம்.

  • பால் கறக்கும் விலங்குகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
  • சுத்தமான பால் உற்பத்தியை ஊக்குவித்தல்.
  • பால் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துதல்.
  • பால் தரம் மற்றும் அளவு மேம்பாடுத்துதல்.
  • வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
  • விவசாயிகளின் வருமானம் அதிகரித்தல்.

திட்டத்தின் குறைகள்

தேசியப் பால்வள மேம்பாட்டுத் திட்டம் (NPDD), பல நேர்மறையான தாக்கங்களைக் கொண்டிருந்தாலும், சில குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை இப்போது காண்போம்.

  • வரையறுக்கப்பட்ட பாதுகாப்புத் தொகை: NPDD திட்டம், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பால் பண்ணையாளர்களை மட்டுமே உள்ளடக்கியது. பல விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் கிடைக்காமல் போய் விடுகிறது.
  • சிறு விவசாயிகள் மீது கவனம் இல்லாமை: இத்திட்டம் பெரிய அளவிலான பால் பண்ணையாளர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் பால் உற்பத்தியில் பெரும்பகுதியை உருவாக்கும் சிறு அளவிலான விவசாயிகளின் தேவைகளைப் புறக்கணிக்கிறது.
  • கடன் வசதிகள் இல்லாமை: NPDD திட்டம், விவசாயிகளுக்கு போதுமான கடன் வசதிகளை வழங்காததால், அவர்களது பண்ணைகளில் முதலீடு செய்வதிலும், உற்பத்தியை மேம்படுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
  • போதிய விரிவாக்கச் சேவைகள்: இந்தத் திட்டம் விவசாயிகளுக்குப் போதுமான விரிவாக்கச் சேவைகளை வழங்குவதில்லை. சிறந்த நடைமுறைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான அவர்களின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.
  • போதிய விலை ஆதரவு: NPDD திட்டம் விவசாயிகளுக்கு போதுமான விலை ஆதரவை வழங்காததால், அவர்களின் பாலுக்கு நியாயமான விலை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
  • சந்தைகளுக்கு வரம்புக்குட்பட்ட அணுகல்: விவசாயிகள் பெரும்பாலும் சந்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்கள் பால் மற்றும் பிற பால் பொருள்களை விற்பதில் சிரமம் ஏற்படுகிறது.
  • போதியப் பயிற்சி இல்லை: இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு போதியப் பயிற்சி அளிக்காததால், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

  1. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
  2. NPDD திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  3. துல்லியமான மற்றும் முழுமையான விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  4. உங்கள் ஆதார் அட்டை, பான் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்பட தேவையான ஆவணங்களை, விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும்.
  5. விண்ணப்பப் படிவத்தை இணைக்கப்பட்ட ஆவணங்களுடன் மாவட்ட கால்நடைப் பராமரிப்பு அலுவலர் அல்லது பால்வள மேம்பாட்டு அதிகாரி போன்ற இதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும்.
  6. நியமிக்கப்பட்ட அதிகாரிகள், விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை சரிபார்த்து, பின்னர் விண்ணப்பத்தை செயலாக்குவார்கள்.
  7. விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், மானியம் அல்லது கடன் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

தேசியப் பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (NPDD) கீழ் விண்ணப்பிக்க, பின்வரும் ஆவணங்கள் அனைத்தும் தேவைப்படும்.

  • அடையாள ஆதாரம்
  • முகவரி ஆதாரம்
  • வங்கிக் கணக்கு விவரங்கள்
  • பால் கறக்கும் விலங்குகளின் உரிமை ஆவணங்கள்

பால்வள மேம்பாட்டுக்கான தேசியத் திட்டம் (NPDD) என்பது, இந்தியாவில் உள்ள பால்பண்ணைத் துறைக்கு ஒரு நன்மை பயக்கும் திட்டமாகும். இது கறவை விலங்குகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், சுத்தமான பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் ஆதரவை வழங்குகிறது. பால்பண்ணைத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதிலும் இத்திட்டம் வெற்றி அடைந்துள்ளது.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024