Govt for Farmers

பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா

விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 2015 இல் பிரதான் பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தை (PMKSY) அறிமுகப்படுத்தியது 

இந்தியாவில் 80% நீர் விவசாயத்தில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்திய விவசாயிகள் இன்னும் தங்கள் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு மழையை நம்பியே உள்ளனர், இதனால் பயிர் இழப்புகளை சந்திக்க உள்ளாகிறார்கள். இந்த பிரச்சனைகளை தீர்க்கவே இந்திய அரசு பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

பண்ணை உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும் ஒரு விரிவான தீர்வை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

‘ஒரு சொட்டுக்கு அதிக பயிர்’ என்ற கொள்கையுடன் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் நுண்ணீர் பாசனங்களான சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் ஆகியவற்றின் மூலம் பண்ணை அளவில் நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 

திட்டத்தின் அம்சங்கள்

  • இந்த திட்டத்தை செயல்படுத்த 93,068 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் கால அளவு முன்னர் 2020 வரை இருந்த நிலையில் இப்பொழுது 2026 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
  • திட்டத்தின் முக்கிய பயனாளிகளாக விவசாயிகள் கருதப்படுகிறார்கள்.
  • சுமார் 22 லட்சம் விவசாயிகள் பயனடைவதை நோக்கமாக இந்த திட்டம் கொண்டுள்ளது.
  • பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தை திறம்பட செயல்படுத்தி நிரல் கட்டமைப்பிற்கு கொள்கை திசையை வழங்கவும், தேசிய அளவில் திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிட்டு நிர்வாக சிக்கல்களை நிவர்த்தி செய்யவும் பிரதமர் தலைமையில் தேசிய வழிகாட்டுதல் குழுவும், NITI ஆயோக்கின் துணைத் தலைவர் தலைமையில் தேசிய செயற்குழுவும் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
  • வடகிழக்கு மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனாவின் கூறுகள்

துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனப் பயன் திட்டம் (AIBP): இது அணைகள், தடுப்பணைகள், கால்வாய்கள் மற்றும் கிணறுகள் போன்ற தற்போது நடந்து கொண்டிருக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களை முடிக்க மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்கும். 

ஹர் கெத் கோ பானி (HKKP):  இது நுண்ணீர் பாசனம், நீர்நிலை மேம்பாடு மற்றும் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான தீர்வுகளை வழங்கி, பண்ணை மட்டத்தில் இருந்து நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்தும். 2026 குல் 4.5 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசனத் திறனை உருவாக்குவதே ஹர் கெத் கோ பானியின் இலக்காகும். 

நீர்நிலை மேம்பாட்டுக் கூறுகள் (WDC): இந்த நீர்நிலைப் மேம்பாட்டானது மண்ணின் ஈரப்பதம் மற்றும் நிலத்தடி நீர் மீள்நிரப்பு செய்ய உதவி செய்யும். 

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

விவசாயம் செய்பவர்கள் குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள். 

விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • ரேஷன் அட்டை
  • முகவரி ஆதாரம்
  • விவசாய நில ஆவணங்கள்
  • வங்கி இருப்புக் கையேடு

விண்ணப்பிக்கும் முறை

https://pmksy.gov.in/  எனும் பிரதான்பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகவும். இதில் நீங்கள் விண்ணப்பிக்க இருக்கும் திட்டத்தை கிளிக் செய்து கேட்கப்படும் கேள்விகளை கவனமாக நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். 

பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா, நீர் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத்திற்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை கொண்டு வர முடியும் என எதிர்பார்க்கமுடிகிறது. 

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024