பொது விநியோக அமைப்பின் ஒருங்கிணைந்த மேலாண்மை (IMPDS)
IMPDS திட்டம் விவசாயிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு வரமாக அமைந்துள்ளது. இத்திட்டம், இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையால், மாநில/யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து நாட்டில் வெளிப்படையான மற்றும் சீரான பொது விநியோக முறைக்காக (PDS) செயல்படுத்தப்படுகிறது. இப்பொழுது இது ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை (ONORC) திட்டம் என்று பரவலாக அறியப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள எந்த நியாய விலைக் கடையிலிருந்தும் (FPS) ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு உணவு தானியங்களை வாங்கிச் செல்ல அனுமதி வழங்கும் பொருட்டு நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்துவதாகும்.
திட்டத்தின் பெயர்: பொது விநியோக அமைப்பின் ஒருங்கிணைந்த மேலாண்மை (ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம்)
திட்டம் செயல்படுத்தப்பட்டது: 2018
இத்திட்டம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
அரசுத் திட்டத்தின் வகை: மத்தியத் துறைத் திட்டம்
நிதியுதவி / துறை திட்டம்: நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: அந்தந்த மாநில இணையதளங்கள்
உதவி எண்: 14445
தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் IMPDS திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வகை | கருத்துக்கள் |
நோக்கம் | தானியங்கள், பருப்பு வகைகள், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவற்றை மானிய விலையில் வழங்கல் |
மொத்த செலவு | ரூ. 127.3 கோடி – அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தல் |
திட்டத்தின் செல்லுபடியாகும் கால அளவு | 31 மார்ச் 2023 |
இதன் கீழ் வழங்கப்படும் நன்மைகள் | தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (NFSA) |
யார் பயன் பெறலாம் | கூலித்தொழிலாளர்கள், தினக்கூலிகள், கந்தல் சேகரிப்பவர்கள், தெருவில் வசிப்பவர்கள், தற்காலிக வேலையாட்கள், வீட்டு வேலை செய்பவர்கள் போன்றவர்கள். |
ரேஷன் பொருட்கள் கிடைக்கும் மூலம் | மின்னணு விற்பனை புள்ளி (E – POs) மற்றும் நியாய விலைக்கடை (FPO) |
சமீபத்தில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்திய 36வது மாநிலமாக அசாம் ஆனது. ONORC திட்டம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பை எடுத்துச் செல்லக்கூடியதாக மாறியுள்ளது.
இந்தியாவில் இன்னும் குறைந்த அளவே இணைய ஊடுருவல் வசதி விகிதம் உள்ளது. இது ONORC இன் நம்பகமான செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. ஏழை, புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் வீட்டு வேலைகளையே நம்பியிருக்கிறார்கள். இது, பயோ-மெட்ரிக் பொருத்தத்தின் போது கைரேகைகள் அடிக்கடி மாறுபடுவதில் சிக்கல்களை உருவாக்குகிறது.
படி 1: அந்தந்த மாநிலம்/யூனியன் பிரதேசம் – உணவு இணையதளங்களைப் பார்வையிடவும்
படி 2: முகப்புப் பக்கத்தை உலாவவும் மற்றும் பதிவு செய்ய “புதிய ரேஷன் கார்டு கோரிக்கை” என்பதைக் கிளிக் செய்யவும்
படி 3: NPHH ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, முன்னுரிமை இல்லாத வீட்டு (NPHH) விருப்பத்தைத் தேர்வு செய்யவும்
படி 4: ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு (ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது) மற்றும் ஆதார் எண்ணுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுத்து, செல் (Go) விருப்பத்தினைத் தேர்வு செய்யவும்.
படி 5: ஆதார் மற்றும் கேப்ட்சாவிலிருந்து (Captcha) பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு Go பட்டனைத் தேர்வு செய்யவும்.
படி 6: OTP மற்றும் கேப்ட்சாவின் வெற்றிகரமான சரிபார்ப்பில், ஆதாரில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் காட்டப்படும்.
படி 7: ஆதார் விவரங்கள் சரியாக இருந்தால், சேர் பொத்தானைத் தேர்வு செய்யவும். இதனால் விண்ணப்ப எண் உருவாக்கப்படும்.
படி 8: இதற்குப் பிறகு, தேர்வுப்பெட்டியைத் தேர்வு செய்வதன் மூலம் ரேஷன் கார்டுக்கான முகவரியைத் தேர்ந்தெடுக்கவும். நகர்ப்புற பகுதிக்கு நகரத்தைத் தேர்ந்தெடுத்து பிறகு வார்டு எண் மற்றும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். கிராமப்புறப் பகுதிக்கு பஞ்சாயத்து ஊரை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட முகவரிப் பகுதியின் பின் குறியீட்டினைப் பொறுத்து நியாய விலைக் கடை தானாகத் தேர்ந்தெடுக்கப்படும்.
படி 9: 18 வயதுக்கு மேற்பட்ட மூத்த பெண் உறுப்பினரை HOF (குடும்பத் தலைவர்) ஆக தேர்ந்தெடுக்கவும். இல்லை என்றால் மூத்த ஆண் உறுப்பினரை HOF ஆக தேர்ந்தெடுக்கவும்.
படி 10: குடும்பத் தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பொத்தானைத் தேர்வு செய்வதன் மூலம் HOF உடன் மீதமுள்ள உறுப்பினர்களின் உறவை குறிப்பிட வேண்டும். பின்னர் சேமி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 11: ரேஷன் பொருட்கள் வாங்க விரும்புவதற்கு ஆம்/இல்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
படி 12: மாதிரி நகலில் உள்ள விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், ரேஷன் கார்டை உருவாக்க ஜெனரேட் RC பட்டனைக் கிளிக் செய்யவும். மேலும் பிரிண்ட் பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் RC நகலின் அச்சை (பிரிண்ட் அவுட்) எடுத்துக் கொள்ளலாம்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்பது உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்குப் பிறகு தொலைநோக்கு கண்ணோட்டத்தில் நடைபெறக்கூடிய பொது விநியோகச் சுற்றுச்சூழலின் சீர்திருத்தமாகும். இது பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலையில்லாமல் புலம்பெயர்ந்தோரின் வாழ்வாதாரத்திற்கு உதவும் மற்றும் 2030 ஆம் ஆண்டிற்குள் பட்டினியை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட 2வது நிலையான வளர்ச்சி இலக்கின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய உதவக்கூடிய திட்டம்.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…