News

கால்நடை வளர்ப்பின் சாத்தியத்தை வெளிக்காட்டும் முயற்சி: பசுதன் ஜாக்ருதி அபியான்!

ஆசாதி கா அம்ரித் மஹோஸ்தவின் ஒரு பகுதியாக, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் “பசுதன் ஜாக்ருதி அபியான்” எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமாக தொழில்முனைவோர், தடுப்பூசி மற்றும் பிற பயனாளிகள் சார்ந்த முயற்சிகள் தொடர்பான திட்டங்களில் கவனம் செலுத்திடவும், துறையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்ட அமைப்புகள் பற்றிய தகவல்களை வழங்குவதாகும்.

கருத்து

“பசுதன் ஜாக்ருதி அபியான்” திட்டம், ஆர்வமுள்ள மாவட்டங்களில் சுமார் 2,000 கிராம அளவிலான முகாம்களில் நடத்தப்பட்டது. சுமார் 1 லட்சம் விவசாயிகள் பொது சேவை மையங்களில் இருந்து இந்த விழிப்புணர்வுத் திட்டத்தில் சேர முடிந்தது. இந்நிகழ்ச்சியில், சிடிடி (CDD) கூடுதல் செயலாளர் செல்வி வர்ஷா ஜோஷி தலைமை வகித்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். 

கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணையில் சமீபத்திய நடைமுறைகள் மற்றும் நுட்பங்கள் பற்றிய விவசாயிகளின் புரிதலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மேலும்  அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும்  இந்தத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாக இருந்தது.  திட்டங்களின் தாக்கம் மற்றும் சாதனைகளைத் தெளிவுபடுத்த விளக்கக் காட்சிகள் மற்றும் காணொளிகள் பயன்படுத்தப்பட்டன.

முக்கியக் குறிப்புகள்

  • “பசுதன் ஜாக்ருதி அபியான்” திட்டம் என்பது கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும்.
  • ஆர்வமுள்ள மாவட்டங்களில் சுமார் 2,000 கிராம அளவிலான முகாம்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் சுமார் 1 லட்சம் விவசாயிகள் பொது சேவை மையங்களில் இருந்து இத்திட்டத்தில் சேர முடிந்தது.
  • சிடிடி (CDD) இன் கூடுதல் செயலாளர் திருமதி வர்ஷா ஜோஷி, கூட்டத்தை மேற்பார்வையிட்டு, நிகழ்ச்சி முழுவதும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
  • இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாக, துறையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்ட அமைப்புகளைப் பற்றியத் தகவல்களைப் பரப்புவதாகும். தொழில்முனைவோர், தடுப்பூசி மற்றும் பயனாளிகளுக்கான பிற முன்முயற்சிகள் தொடர்பான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
  • திட்டங்களின் வெற்றி, விளக்கக் காட்சிகள் மற்றும் காணொளிகளின் உதவியுடன் விளக்கப்பட்டது.

“பசுதன் ஜாக்ருதி அபியான்” திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணைத் துறையின் சிறந்த முன்முயற்சியாகும். இது விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணையில் சமீபத்திய நடைமுறைகளுடன், நுட்பங்களைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள பெரிதும் உதவியது. திட்டங்களின் வெற்றி மற்றும் தாக்கம் விளக்கக் காட்சிகள் மற்றும் காணொளிகள் மூலம் விளக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் நோக்கத்தை மிக எளிதாகப் புரிந்தது. இதன் காரணமாக ஏறக்குறைய 1 லட்சம் விவசாயிகள் பொதுச் சேவை மையங்களில் இருந்து விழிப்புணர்வுத் திட்டத்தில் சேர முடிந்தது. இது, அனைத்து பார்வையாளர்களுக்கு அணுகக் கூடியதாக இருந்தது.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024