உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி பிரதான உணவாக உட்கொள்கின்றனர். பூச்சித் தாக்குதலால் விளைச்சல் இழப்பு, விளைச்சலின் தரம் மற்றும் அளவு குறைகிறது. நெல்லில் சராசரியாக 22% மகசூல் இழப்பு பூச்சித் தாக்குதலால் ஏற்படுகிறது. பூச்சிகள் நெல் பயிரின் வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளை உணவாக உட்கொண்டு, அவற்றின் வாழ்நாளை நிறைவு செய்கின்றன. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகளில் பிரவுன் பிளாண்ட் ஹாப்பர் (புகையான்), இலை சுருட்டு புழு, இலை தத்துப்பூச்சி, தண்டு துளைப்பான், இலைப்பேன் மற்றும் கதிர் நாவாய்/குண்டி பூச்சிகள் ஆகியவை நெல் உற்பத்திக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
அறிவியல் பெயர்: ஒரைசா சட்டைவா
நெல் தண்டு துளைப்பான் நெல்லின் மிக முக்கியமான பூச்சிகளில் ஒன்றாகும். ஏனெனில் இது முன்கூட்டியே முதிர்ச்சி அடையும் வகை நெற்பயிர்களில் 20% மகசூல் இழப்பையும், பின் முதிர்ச்சி அடையும் வகை நெற்பயிர்களில் 80% மகசூல் இழப்பையும் ஏற்படுத்துகிறது. இது மானாவாரி சதுப்பு நில நெற்பயிர் வயல்களுக்கு அதிக அழிவை ஏற்படுத்துகிறது. 6 வகையான தண்டு துளைப்பான்கள் நெற்பயிரை தாக்குகின்றன. அதில், மஞ்சள் தண்டு துளைப்பான் நெற்பயிருக்கு மிக அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.
அறிவியல் பெயர்: சிர்போபேகா இன்ஸெர்டுலஸ்
பூச்சி தாக்கும் நிலைகள்: நாற்றங்கால், தாவர மற்றும் இனப்பெருக்க நிலை
சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி நிலை: லார்வா
அதிக நைட்ரஜன் உரமிடுதல், தாமதமாக நடப்பட்ட பயிர் மற்றும் முந்தைய பருவத்தின் எஞ்சிய குச்சிகள் போன்றவை தண்டுத் துளைப்பான்களின் பெருக்கத்திற்குச் சாதகமானது.
10% குருத்து காய்ந்தல் (தாவர நிலையில்); 2% வெள்ளை கதிர் (பூக்கும் காலத்தில்).
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
விர்டகோ பூச்சிக்கொல்லி | குளோரான்ட்ரானிலிப்ரோல் 0.5% + தியோமெதாக்சம் 1% GR |
கால்டன் பூச்சிக்கொல்லி | கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50% SP |
கொரண்டா பூச்சிக்கொல்லி | குளோர்பைரிஃபோஸ் 50% + சைபர்மெத்ரின் 5% EC |
அலன்டோ பூச்சிக்கொல்லி | தியாக்ளோபிரிட் 21.7% SC |
நெற்பயிரில் தண்டுத்துளைப்பான் மேலாண்மை பற்றி மேலும் அறிய : நெற்பயிரில் தண்டு துளைப்பான் மேலாண்மை
அறிவியல் பெயர்: நிலபர்வட்டா லூகன்ஸ்
பூச்சி தாக்கும் நிலைகள்: இனப்பெருக்க நிலை
சேதத்தை ஏற்படுத்தும் நிலை: நிம்ஃப் மற்றும் வயது முதிர்ந்த பூச்சி
திசையன் (வெக்டர்) : புல்தழை குட்டை நோய், காய்ந்த குட்டை நோய், வாடிய குட்டை நோய்
தொடர்ச்சியாக நீரில் மூழ்கி இருக்கும் நிலை, அதிக நிழல், அதிக ஈரப்பதம், அதிக நைட்ரஜன் உரமிடுதல், மிக அடர்த்தியாக விதைக்கப்பட்ட பயிர் போன்றவை புகையான் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சாதகமான சூழ்நிலைகள்.
வேட்டையாடும் சிலந்தி இல்லாத நிலையில் 1 ஹாப்பர்/கதிர், சிலந்திப்பூச்சி இருக்கும் நிலையில் 2 ஹாப்பர்கள்/ஹில்.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
டோக்கன் பூச்சிக்கொல்லி | டைனோட்ஃபுரான் 20% SG |
பெக்சலோன் பூச்சிக்கொல்லி | டிரிஃப்ளூமெசோபைர்ம் 10% SC |
காத்யாயனி BPH சூப்பர் | பைமெட்ரோசின் 50% WG |
உலாலா பூச்சிக்கொல்லி | ஃபிளோனிகாமிட் 50% WG |
பிரவுன் பிளாண்ட் ஹாப்பரின் மேலாண்மை பற்றி மேலும் அறிய: BPH மேலாண்மை
அறிவியல் பெயர்: நெப்போடெட்டிக்ஸ் விரிசன்ஸ்
பூச்சி தாக்கும் நிலைகள்: நாற்றங்கால், தாவர மற்றும் இனப்பெருக்க நிலை
சேதத்தை ஏற்படுத்தும் நிலை: நிம்ஃப் மற்றும் வயது முதிர்ந்த பூச்சி
திசையன் (வெக்டர்): ரைஸ் துங்ரோ வைரஸ் (RTV), நெற்பயிர் மஞ்சள் மற்றும் இடைநிலை மஞ்சள் நோய்
அவை மானாவாரி மற்றும் நீர்ப்பாசன சதுப்பு நிலங்களில் அதிகம் காணப்படுகின்றன. தன்னார்வத் தாவரங்கள், குச்சிகள், தாவரத்தின் ஆரம்ப வளர்ச்சி நிலைகள் போன்றவை இலை தத்துப்பூச்சி தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலைகள்.
60 பூச்சிகள்/ 25 துடைத்தல் (நாற்றங்கால்); 5 பூச்சிகள்/ஹில் (தாவர நிலை); 10 பூச்சிகள்/ஹில் (மலரும் நிலையில்); 2 பூச்சிகள்/ஹில்
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
செஸ் பூச்சிக்கொல்லி | பைமெட்ரோசின் 50% WDG |
லாரா 909 பூச்சிக்கொல்லி | குளோரோபைரிபாஸ் 50% + சைபர்மெத்ரின் 5% EC |
அன்ஷுல் லக்ஷ் பூச்சிக்கொல்லி | லாம்டாசைக்லோத்திரின் 5% EC |
அனந்த் பூச்சிக்கொல்லி | தியாமெதோக்சம் 25% WG |
இலை தத்துப்பூச்சி மேலாண்மை பற்றி மேலும் அறிய: இலை தத்துப்பூச்சி மேலாண்மை
அறிவியல் பெயர்: நேப்ஃபாலோகுரோஸிஸ் மெடினாலிஸ்
பூச்சி தாக்கும் நிலைகள்: தாவர மற்றும் இனப்பெருக்க நிலை
சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி நிலை: லார்வா
அதிக தழைச்சத்து உரமிடுதல், அதிக ஈரப்பதம், நிழலான பகுதி, நெல் வயலில் களைகள் இருப்பது போன்றவை இப்பூச்சியின் தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலைகள்.
10% சேதமடைந்த இலைகள் (தாவர நிலை); 5% சேதமடைந்த இலைகள் (பூக்கும் நிலை).
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
டகுமி | ஃப்ளூபென்டியாமைடு 20% WG |
டல்ஸ்டார் FMC பூச்சிக்கொல்லி | பிஃபென்த்ரின் 10% EC |
ரிலான் பூச்சிக்கொல்லி | எமாமெக்டின் பென்சோனேட் 5% SG |
ஹிபிகி பூச்சிக்கொல்லி | குளோர்பைர்பாஸ் 50% EC |
இலை சுருட்டுப்புழு மேலாண்மை பற்றி மேலும் அறிய: இலை சுருட்டுப் புழு மேலாண்மை
அறிவியல் பெயர்: லெப்டோகெரரிசா அக்யூட்டா
பூச்சி தாக்கும் நிலைகள்: இனப்பெருக்க நிலை
சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி நிலை: நிம்ஃப் மற்றும் வயது முதிர்ந்த பூச்சி
களைகளின் எண்ணிக்கை, நிலைகுலைந்த நடவு, வெப்பமான வானிலை, அடிக்கடி பெய்யும் மழை ஆகியவை கதிர் நாவாய் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சாதகமான சூழ்நிலைகள். இவை பொதுவாக மானாவாரி மற்றும் மேட்டுநில நெற்பயிர்களில் காணப்படும்.
5 பூச்சிகள்/100 பேனிகல்கள் (பூக்கும் நிலை); 16 பூச்சிகள்/100 பேனிகல்கள் (பால் நிலை)
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
கிரீன்பேஸ் நீமோல் | வேப்ப எண்ணெய் சாறு (அசார்டிராக்டின்) – 10000 ppm |
அக்டாரா பூச்சிக்கொல்லி | தியாமெதோக்சம் 25% WG |
பிரிடேட்டர் பூச்சிக்கொல்லி | குளோரோபைர்போஸ் 50% EC |
வோலியம் ஃபிளெக்சி பூச்சிக்கொல்லி | தியாமெதாக்சம் 17.5% + குளோரான்ட்ரானிலிப்ரோல் 8.8% |
கதிர் நாவாய் பூச்சி பற்றி மேலும் அறிய – கதிர் நாவாய் பூச்சி மேலாண்மை
அறிவியல் பெயர்: ஸ்டென்கீட்டோதிரிப்ஸ் பைபார்மிஸ் – Stenchaetothrips biformis
பூச்சி தாக்கும் நிலைகள்: நாற்றங்கால்
சேதத்தை ஏற்படுத்தும் நிலை: லார்வாக்கள் மற்றும் வயது முதிர்ந்த பூச்சி
வறண்ட காலங்களில் மிகவும் தீவிரமான பூச்சியாகும். வறண்ட காலநிலை, களைகளின் எண்ணிக்கை மற்றும் நெல் வயலில் தண்ணீர் தேங்காமல் இருப்பது ஆகியவை இலைப்பேன் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலைகள்.
60 எண்கள்/12 வெட் ஹேண்ட் ஸ்வீப்ஸ் (நாற்றங்கால்)
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் |
காத்யாயனி Imd-178 | இமிடாக்ளோபிரிட் 17.8 % SL |
லாரா-909 பூச்சிக்கொல்லி | குளோரோபைர்பாஸ் 50% + சைபர்மெத்ரின் 5% EC |
ஓஷீன் பூச்சிக்கொல்லி | டைநோட்டிஃப்யூரான் 20% SG |
பெகாசஸ் பூச்சிக்கொல்லி | டயாஃபென்தியூரான் 50% WP |
(குறிப்பு: பொருளாதார வரம்பு நிலை (ETL) – பெருகிவரும் பூச்சிகளின் எண்ணிக்கையைத் தடுக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட வேண்டிய மக்கள்தொகை அடர்த்தி ஆகும்.)
பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…
அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…