Govt for Farmers

மத்தியப் பிரதேச விவசாயிகளுக்கு நற்செய்தி: கடனுக்கான வட்டி தள்ளுபடி!

விவசாயிகளின் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன், மத்தியப் பிரதேச விவசாயிகள் கடன் வட்டித் தள்ளுபடித் திட்டம் (முக்யமந்த்ரி கிரிஷக் பியாஜ் மாஃபி யோஜனா), மத்தியப் பிரதேச அரசால் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விவசாயக் கடன் வாங்கி, வங்கிகளில்  திருப்பிச் செலுத்தாத விவசாயிகளை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. 

திட்ட மேலோட்டம்

  • திட்டத்தின் பெயர்: மத்தியப் பிரதேச விவசாயிகள் கடன் வட்டித் தள்ளுபடித் திட்டம் 2023
  • திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு: 2023
  • அரசுத் திட்டத்தின் வகை: மத்தியப் பிரதேச மாநில அரசுத் திட்டம்

அம்சங்கள்

  • மத்தியப் பிரதேச விவசாயிகள் கடன் வட்டித் தள்ளுபடித் திட்டம் 2023 – பின்வரும் சில முக்கிய அம்சங்களை வழங்குகிறது.
  • வங்கிகளில் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் கடனுக்கான வட்டியை, மத்தியப் பிரதேச அரசு செலுத்தும்.
  • 31 மார்ச் 2023 நிலவரப்படி, அசல் மற்றும் வட்டி உள்பட ரூ.2 லட்சம் வரை நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  • இந்தத் திட்டம், தொடக்க வேளாண்மைக் கடன் கூட்டுறவு சங்கங்களில் (PACS) உள்ள கடனை தள்ளுபடி செய்கிறது.

திட்டத்தின் நன்மைகள்

  • விவசாயிகளின் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வதன் மூலம், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
  • விவசாயிகள் மீதான நிதிச் சுமையைக் குறைத்து, விவசாய உற்பத்தியை மேம்படுத்த வழிவகுக்கிறது.
  • கடனைத் திருப்பிச் செலுத்துவதைப் பற்றிய கவலையின்றி, விவசாயப் பணிகளைத் தொடர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கிறது.

திட்டத்தின் குறைகள்

கிரெடிட் ஸ்கோரில் தாக்கம்

வட்டி தள்ளுபடி உடனடி நிவாரணம் அளிக்கும், அதே வேளையில் கடனைத் திருப்பிச் செலுத்தாதவராக அறிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் மதிப்பீட்டில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் கடன் பெறுவது கடினமாகிவிடும்.

தனியார் கடன் வழங்குபவர்களை விலக்குதல்

தொடக்க வேளாண்மைக் கடன் கூட்டுறவு சங்கங்களில் (PACS) உள்ள கடன் பெற்றவருக்கு மட்டும், இந்தத் திட்டம் பொருந்தும்.

நிர்வாக சவால்கள்

திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது மற்றும் தகுதியானப் பயனாளிகளை அடையாளம் காண்பது போன்றவை நிர்வாக சவால்களை ஏற்படுத்தலாம். செயல்பாட்டில் தாமதம் அல்லது குழப்பம் ஏற்பட்டால், விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் கிடைக்காமல் போகலாம்.

எதிர்காலத் திட்டங்களைச் சார்ந்திருத்தல்

விவசாயிகள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும், இதுபோன்ற ஆதரவை எதிர்பார்த்து எதிர்காலத்தில் கடன் தள்ளுபடி திட்டங்களை நம்பியிருக்கலாம். இது விவசாயத் துறையில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக கடன் நிவாரணத்தை எதிர்பார்க்கும் வடிவத்தை உருவாக்கலாம்.

மத்தியப் பிரதேச விவசாயிகள் கடன் வட்டித் தள்ளுபடித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புக்குள் இடம் பெறாத விவசாயிகளுக்கு, இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்காது. 

முடிவு

விவசாயிகளின் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வது, அவர்களின் நிதிச் சுமையைத் தணிக்க மத்தியப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க முன்முயற்சி தான், ‘ மத்தியப் பிரதேச விவசாயிகள் கடன் வட்டித் தள்ளுபடித் திட்டம் – 2023’. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், விவசாயிகளை ஆதரிப்பதும், மாநிலத்தில் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதும் அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

Recent Posts

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024

பப்பாளியில் பூக்கள் உதிர்தல் மற்றும் குறைந்த பழங்கள் உற்பத்தி பிரச்சினைக்கான மேலாண்மை உத்திகள்

பப்பாளி (கேரிகா பப்பாயா) ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்பு காரணமாக வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததுள்ளது. பப்பாளி மரங்களின்…

April 26, 2024

தக்காளி பாக்டீரியல் இலைப்புள்ளி நோயை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

பாக்டீரியல் இலைப்புள்ளி என்பது தக்காளி பயிரிடப்படும் இடங்களில், உலகம் முழுவதும் தக்காளியைத் தாக்கக்கூடிய ஒரு பொதுவான நோயாகும். இது தக்காளியின் ஆரம்பகட்ட வளரும் பருவத்தில் தாவரங்களின் இலைகளைக்…

April 23, 2024

தக்காளி வாடல் நோயை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

உங்கள் தக்காளி செடிகள் மஞ்சள் நிறமாகவும், செடியின் ஒரு பக்கத்திலோ அல்லது இலையின் ஒரு பக்கத்திலோ வாடிப்போனால், அவை ஃபுசாரியம் வாடல் நோய்யாகக் இருக்கலாம். இந்த நோய்…

April 23, 2024

தக்காளியில் அசுவினிகளை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

அசுவினி என்பது, உலகளவில் 400 வகையான தாவரங்களைப் பாதிக்கும் மற்றும் தக்காளி பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பூச்சியாகும். இந்த அசுவினி தாவரங்களின் புளோயமை…

April 23, 2024