இயற்கை வேளாண்மைக்கான தேசியப் பணித் திட்டம் (NMNF)
2023-24 முதல் இயற்கை வேளாண்மைக்கான தேசிய பணி (NMNF) திட்டத்தை, தனி மற்றும் சுதந்திரமான திட்டமாக உருவாக்குவதால், நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் இந்திய அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் ‘பைலட்’ அடிப்படையில் தொடங்கப்பட்ட ‘பாரதிய பிரகிருதிக் கிரிஷி பத்ததி (BPKP)’ என்ற திட்டத்தை தரம் உயர்த்தி மற்றும் மேம்படுத்தி மாற்றியமைத்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் 15,000 உற்பத்தி குழுக்களை மேம்படுத்துவதன் மூலம், 7.5 லட்சம் ஹெக்டேர் நிலத்தை உள்ளடக்க இந்தத் திட்டம் இலக்கை நிர்ணயித்துள்ளது. மொத்த பட்ஜெட் செலவினம் ரூ.1,584 கோடி (இந்திய அரசின் பங்கு) அரசு 2023-24 ஆம் ஆண்டிற்கு ரூ. 459.00 கோடிகளை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டம் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை கணிசமாகக் குறைத்து, நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2023-24 ஆம் ஆண்டுக்கான உர மானியத்துக்கான பட்ஜெட் ரூ.1,75,099 கோடி ஆகும். விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முக்கியமான நடவடிக்கை இதுவாகும்.
இயற்கை வேளாண்மைக்கான தேசியத் திட்டம், இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களைச் செயல்படுத்தத் தேவையான அறிவும், திறமையும் இல்லாத விவசாயிகளுக்குப் பயன்படாமல் போகலாம். வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள விவசாயிகளுக்கும், இத்திட்டம் பயனளிக்காது.
இயற்கை வேளாண்மைக்கான தேசியப் பணித் திட்டம் (NMNF), நாடு முழுவதும் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய முறைகளை ஊக்குவிக்க, இந்திய அரசாங்கத்தின் பாராட்டத்தக்க முயற்சியாகும்.
இத்திட்டம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, அவர் வாங்கப்படும் வெளிப்புற உள்ளீடுகளைச் சார்ந்திருத்தலை குறைத்து, பாரம்பரிய மற்றும் உள்நாட்டு விவசாய முறைகளை ஏற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘மொத்தம் ரூ.1,584 கோடி மற்றும் அடுத்த நான்கு ஆண்டுகளில் 7.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு’ போன்ற இலக்குகளை “NMNF” திட்டத்தால் அடைவதன் மூலம் இந்தியாவில் “நிலையான விவசாயத்தை” அடைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்கப் படியாகும்.
இயற்கை விவசாயக் குழுக்களை உருவாக்குதல்,விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் இயற்கை விவசாயப் பொருட்களின் சான்றிதழிப்பு போன்றவற்றால் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை ‘விவசாய சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு’ சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…