சேமிப்புக் கிடங்கு மானியத் திட்டம்: விவசாயிகளுக்கான முழு விளக்கம் இதோ!
இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியத் தொழில்களில் ஒன்றான விவசாயம், சேமிப்புக் கிடங்குகளுடன் கைகோர்த்துச் செல்கிறது. உற்பத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் விவசாயத் துறையுடன், சேர்த்து கிடங்குகளுக்கானத் தேவையும் அதிகரித்து வருகிறது.
தொழில்துறைக்கு உதவுவதற்காக, இந்திய அரசாங்கம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்காக, ‘மூலதன முதலீட்டு மானியத் திட்டமான’ ‘கிராமின் பண்டாரன் யோஜனாத் திட்டத்தை ஏப்ரல்.1.2001’ அன்று அறிமுகப்படுத்தியது. விவசாயிகள் தங்கள் விளைப்பொருள்களை சேமித்து வைப்பதற்கு முறையாக கிடங்குகளை கட்ட அல்லது புதுப்பிக்க, கிடங்கு கட்டுமானத்திற்கு மானியம் வழங்குவதே, இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குத் திட்டம், விவசாயிகள் தங்கள் விளைப்பொருள்களை மழை மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, அறுவடை செய்வதற்காக ஏற்ற சேமிப்பு அலகுகளை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் கிடங்கு கட்டுமானத்திற்கான நபார்டு வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்து பின்பற்ற வேண்டும்.
கிடங்குக்கான நபார்டு கடனின் கூடுதல் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
வகை | கருத்துகள் |
யார் தகுதியானவர்கள்? | தொழில்முனைவோர், நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் விவசாயக் குழுக்கள் போன்றவை. |
திட்டத்தில் உள்ளடக்கிய செயல்பாடுகள் | சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் குழிகளை நிர்மாணித்தல் அல்லது பழுதுபார்த்தல் |
சேமிப்பு அலகு குறைந்தபட்சத் திறன் |
|
கடன் தொகை |
|
செலவை உள்ளடக்கியது | எல்லைச் சுவர், மேடை, உள் வடிகால் அமைப்பு, தரப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் உள் சாலை அமைப்பு போன்றவை. |
தேவையான ஆவணங்கள் | ஆய்வுத் துறை, சட்டத் துறை மற்றும் இடர் மேலாண்மைத் துறைகளின் வழிகாட்டுதல்களின்படி |
கடனை திரும்பச் செலுத்துதல் | குறைந்தபட்சம் வட்டி செலுத்துதலுடன் 2 ஆண்டுகள் தடை |
கடன் வட்டி விகிதம் | கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி வட்டி விகிதங்களின்படி |
கடன் காலம் | 7 ஆண்டுகளுக்கு மேல் |
காப்பீட்டுத் தொகை | கடனைப் பெற விண்ணப்பதாரர் சொத்துக்கான காப்பீட்டைப் பெற வேண்டும் |
இந்தத் திட்டத்தின் கீழ் அந்தந்த வங்கிகளில் இருந்து ஆய்வு மற்றும் கடன் ஒப்புதல் ஆகியவை அடுத்த நடவடிக்கைகளில் அடங்கும்.
கிடங்கு மீதான அரசாங்க மானியத்திற்கான விண்ணப்பத்திற்கு, பல்வேறு திட்டங்களில் சில குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் தேவை.
கிடங்கு மானியத் திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. இந்தத் திட்டத்தைப் பற்றியக் கூடுதல் விவரங்களுக்கு நீங்கள் மாநில அரசு அல்லது உள்ளூர் விவசாய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…