தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் நெல், சிறுதானியம் மற்றும் பயிறு வகைகளை சாகுபடி செய்து இருப்பின், அவற்றை விரைவாகவும், சிறப்பாகவும் அறுவடை செய்ய தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை, அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு வழங்குகிறது.
நெல், சிறுதானியம் மற்றும் பயிறு வகைப் பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை வழங்கும் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம்.
இதனால் விவசாயிகளால் குறிப்பிட்ட நேரத்தில் அறுவடை செய்ய முடியும். கைமுறையாக செய்யும் போது ஏற்படும் தானிய இழப்புகளை தவிர்க முடியும்.
வேளாண் பணிகளுக்கு கூலிக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது என்று கூறப்படும் நிலையில் அவற்றை நிவர்த்தி செய்யும் விதமகவும், அதற்காக ஏற்படும் செலவுகளை குறைக்கும் விதமாகவும் தமிழ்நாடு அரசு இந்த அறுவடை இயந்திரம் வாடகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை வழங்கும் இந்த வாடகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1010 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பெற விரும்பும் விவசாயிகள், மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.) மற்றும் உதவி செயற் பொறியாளரை (வே.பொ.) தொடர்புகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு வாடகை அறுவடை இயந்திரத்துக்கு ஆன்லைனிலும் (http://mis.aed.tn.gov.in ) விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு வாடகை அறுவடை இயந்திரம் பெறுவது குறித்து உங்களுக்கு மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், தலைமைப் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 600035 என்ற முகவரியை தொடர்புகொள்ளலாம். மேலும் 044-29515322 என்ற எண்ணய் தொடர்புகொள்ளலாம்.
வேளாண் துறையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு வாடகைக்கு அறுவடை இயந்திரம் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பெரும் அளவில் பயன்பெறலாம்.
உங்களுக்கு தேவையான அறுவடை இயந்திரங்களை சொந்தமாக ஆன்லைன் மூலம் பிக் ஹாட்டில் வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு தேவையான இயந்திரங்களை மொத்தமாக பணம் வழங்கியும், தவணை முறையிலும் வாங்க சிறந்த இடம் பிக் ஹாட் ஆன்லைன் வேளாண் கடை.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…