HomeMachineryநெல், சிறுதானியம் மற்றும் பயிறு வகைகளை அறுவடை செய்ய தமிழ்நாடு அரசின் வாடகை இயந்திரத் திட்டம்! 

நெல், சிறுதானியம் மற்றும் பயிறு வகைகளை அறுவடை செய்ய தமிழ்நாடு அரசின் வாடகை இயந்திரத் திட்டம்! 

தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் நெல், சிறுதானியம் மற்றும் பயிறு வகைகளை சாகுபடி செய்து இருப்பின், அவற்றை விரைவாகவும், சிறப்பாகவும் அறுவடை செய்ய தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை, அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு வழங்குகிறது  

என்ன பயிர்களுக்கு எல்லாம் வாடகைக்கு கிடைக்கும் 

நெல், சிறுதானியம் மற்றும் பயிறு வகைப் பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை வழங்கும் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம் 

ஏன் இந்த அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு பெற வேண்டும்?

இதனால் விவசாயிகளால் குறிப்பிட்ட நேரத்தில் அறுவடை செய்ய முடியும். கைமுறையாக செய்யும் போது ஏற்படும் தானிய இழப்புகளை தவிர்க முடியும் 

வேளாண் பணிகளுக்கு கூலிக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது என்று கூறப்படும் நிலையில் அவற்றை நிவர்த்தி செய்யும் விதமகவும், அதற்காக ஏற்படும் செலவுகளை குறைக்கும் விதமாகவும் தமிழ்நாடு அரசு இந்த அறுவடை இயந்திரம் வாடகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது 

வாடகை எவ்வளவு

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை வழங்கும் இந்த வாடகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1010 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

எங்கு கிடைக்கும் 

அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பெற விரும்பும் விவசாயிகள், மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.) மற்றும் உதவி செயற் பொறியாளரை (வே.பொ.) தொடர்புகொள்ளலாம் 

தமிழ்நாடு அரசு வாடகை அறுவடை இயந்திரத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி 

தமிழ்நாடு அரசு வாடகை அறுவடை இயந்திரத்துக்கு ஆன்லைனிலும் (http://mis.aed.tn.gov.in ) விண்ணப்பிக்கலாம் 

மேலும் விவரங்கள்   

தமிழ்நாடு அரசு வாடகை அறுவடை இயந்திரம் பெறுவது குறித்து உங்களுக்கு மேலும் விவரங்கள்  தேவைப்பட்டால், தலைமைப் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 600035 என்ற முகவரியை தொடர்புகொள்ளலாம். மேலும் 044-29515322 என்ற எண்ணய் தொடர்புகொள்ளலாம் 

ஏன் இந்த திட்டம் 

வேளாண் துறையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு வாடகைக்கு அறுவடை இயந்திரம் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பெரும் அளவில் பயன்பெறலாம் 

அறுவடை இயந்திரங்களை சொந்தமாக வாங்க வேண்டுமா 

உங்களுக்கு தேவையான அறுவடை இயந்திரங்களை சொந்தமாக ஆன்லைன் மூலம் பிக் ஹாட்டில் வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு தேவையான இயந்திரங்களை மொத்தமாக பணம் வழங்கியும், தவணை முறையிலும் வாங்க சிறந்த இடம் பிக் ஹாட் ஆன்லைன் வேளாண் கடை. 

Categories:
spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்