சர்வதேச சிறுதானியம் மற்றும் இயற்கை வர்த்தக கண்காட்சி – 2023 என்பது விவசாயிகள், விவசாய குழுக்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், இயற்கை மற்றும் சிறுதானியத் துறையில் உள்ள மத்திய மற்றும் மாநில நிறுவனங்களுக்கான ஒரு தளமாகும். இந்த நிகழ்ச்சி 2023 இன் நான்காவது பதிப்பு 2023 ஜனவரி 20–ம் தேதி பெங்களூருவில் உள்ள திரிபுரவசினியில் தொடங்கியது.
சர்வதேச சிறுதானிய மற்றும் இயற்கை வர்த்தக கண்காட்சி – 2023 என்பது இயற்கை மற்றும் சிறுதானிய துறைகளில் சமீபத்திய மாற்றங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்வில் கண்காட்சி, அரங்கம், வணிகத்திலிருந்து வணிகத்திற்கான கட்டமைப்பு (B2B) மற்றும் பல பிரிவுகள் உள்ளன. இக்கண்காட்சியில் 250க்கும் மேற்பட்ட விற்பனையகம், சிறுதானிய இயற்கை உணவகம், நுகர்வோர் இணைப்பு, விவசாயிகள் பட்டறை, சமையல், ஓவியம் மற்றும் வினாடி வினா போட்டிகள், சிறுதானிய சமையல் செயல்விளக்கம் மற்றும் பிற செயல்பாடுகள் உள்ளன. கண்காட்சியின் போது காட்சிப்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் சிறுதானியம், வனத்தில் அறுவடை செய்த பொருட்கள், சிறுதானிய செயலாக்க இயந்திரங்கள், இயற்கை தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள், மக்கக்கூடிய பேக்கேஜிங், சுற்றுச்சூழல் நட்பு பொருட்கள் போன்றவை அடங்கும்.
இந்த செய்தி விவசாயிகள், விவசாயக் குழுக்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், இயற்கை மற்றும் சிறுதானிய துறையில் உள்ள மத்திய மற்றும் மாநில நிறுவனங்களுக்கு பயனடைய வாய்ப்புள்ளது. விவசாயம், தோட்டக்கலை, சிறுதானிய செயலாக்கம், விவசாயத்திற்கான இயந்திரங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளை இந்த குழுக்கள் இணைக்கவும், ஆராயவும் வர்த்தக கண்காட்சி ஒரு தளமாக செயல்படுகிறது. கூடுதலாக, இயற்கை மற்றும் சிறுதானிய துறையின் ஆதரவளிப்பின் மூலம் அரசாங்க கடமைகளை முன்னிலை படுத்தி, பொதுமக்களுக்கு நேரும் பிரச்சனைகள் பற்றியும் இந்த நிகழ்ச்சி எடுத்துரைத்தது.
தங்க தானியங்களான சிறுதானியங்களை ஊக்குவிப்பதற்காகவும், உற்பத்தியை அதிகரித்து மதிப்பு சங்கிலியை வலுப்படுத்தவும் இந்த விழிப்புணர்வை நடைபெற்றது. மேலும், சிறு தானியங்களின் பயன்பாடு ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கும், விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்வாதாரமும் இதன் மூலம் பெருகும் என்ற நோக்கத்தில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.
பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…
அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…