News

புதிய உச்சத்தில் உயரும் இந்தியாவின் விவசாய ஏற்றுமதிகள்: பலன்களைப் பெறும் விவசாயிகள்!

இந்தியாவின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி, நடப்பு 2022-23 நிதியாண்டின் (ஏப்ரல் – டிசம்பர்) ஒன்பது மாதங்களில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, ​​13% அதிகரித்துள்ளது என வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் முன்முயற்சிகள், இந்தியா தனது ஒரு ஆண்டுக்கான ஏற்றுமதி இலக்கில் 84% ஐ அடைவதற்கு பங்களித்து உள்ளது. நடப்பு நிதியாண்டில் பருப்பு வகைகளின் ஏற்றுமதி 80.38% அதிகரித்துள்ளது. பால் பொருள்கள் 19.45% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

கருத்து

இந்தியாவில் விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் (ஏப்ரல் – டிசம்பர் 2022) முதல் 9 மாதங்களில் 13% அதிகரித்துள்ளது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மேற்கொண்ட முயற்சிகளால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், APEDA தயாரிப்புகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 19.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. 2022-23 ஆம் ஆண்டில், நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி இலக்கில் 84% ஐ எட்டியது. பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஏற்றுமதி 30.36% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் 4% அதிகரித்துள்ளது. தானியங்கள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட பொருள்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியில் 24.35% அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளின் ஏற்றுமதி 80.38% அதிகரித்துள்ளது. கோழிப் பொருள்களின் ஏற்றுமதி 91.70% அதிகரித்துள்ளது. பால் பொருட்கள், கோதுமை மற்றும் பிற தானியங்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் B2B கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் இந்தியாவில் புவியியல் குறியீடுகளை ஊக்குவித்தல் போன்ற ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் APEDA இன் முயற்சிகளின் விளைவாக, விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பு, விவசாயிகளுக்கு சாதகமான விளைவாகும். APEDA எடுத்த முயற்சிகள் தான் ஏற்றுமதியை அதிகரிக்க உதவியது. அதாவது, இந்திய விவசாயப் பொருள்கள் உலகளவில் அதிகமாக விற்கப்பட்டு, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்க அதிக வாய்ப்புகளையும், சந்தைகளையும் வழங்குகிறது. ஏற்றுமதியின் வளர்ச்சி, குறிப்பாக பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள் மற்றும் கோழிப் பொருள்கள் போன்ற பகுதிகளில், இந்திய விவசாயப் பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது‌‌. இதனால், விவசாயிகளுக்கு அவர்களின் தயாரிப்புகளுக்கு அதிக விலை கிடைப்பதோடு, வருமானமும் அதிகரிக்கிறது. கூடுதலாக, பல்வேறு நாடுகளில் B2B கண்காட்சிகளின் மூலம், இந்தியத் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த APEDA இன் முயற்சிகள் மற்றும் புதிய சாத்தியமான சந்தைகளை ஆராய்வதன் மூலமாக, விவசாயிகள் தங்களின் தயாரிப்புகளை சர்வதேச சந்தைகளில் விற்பதற்கு புதிய வாய்ப்புகளைத் திறக்க முடியும்.

முக்கியக் குறிப்புகள்

  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 2022 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் 13% உயர்ந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் மொத்த ஏற்றுமதி இலக்கான 23.6 பில்லியன் அமெரிக்க டாலர்களில், 84% எட்டப்பட்டுள்ளது.
  • பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் 30.36% வளர்ச்சியையும், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் 4% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.
  • தானியங்கள் மற்றும் இதர பொருள்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் 24.35% வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
  • பருப்பு ஏற்றுமதி 80.38% மற்றும் கோழி ஏற்றுமதி 91.70% அதிகரித்துள்ளது.
  • பாசுமதி அரிசி ஏற்றுமதி 40.26% மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 4% அதிகரித்துள்ளது.
  • பால் பொருள்கள் ஏற்றுமதி 19.45% மற்றும் கோதுமை ஏற்றுமதி 4% அதிகரித்துள்ளது.
  • மற்ற தானியங்கள் மற்றும் அரைக்கப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி முறையே 13.64% மற்றும் 35.71% வளர்ச்சி கண்டுள்ளது.
  • நாட்டின் விவசாயப் பொருள்களின் ஏற்றுமதி 2021-22 இல் 19.92% அதிகரித்து, 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.
  • B2B கண்காட்சிகள் மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் போன்ற பல்வேறு முயற்சிகளின் மூலம், இந்த அதிகரிப்புக்கு APEDA முக்கிய பொறுப்பாக இருக்கிறது.
  • APEDA, புவியியல் குறியீடுகளுடன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகிறது மற்றும் இந்திய ஒயின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) முயற்சியினால், இந்தியாவில் விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியின் சமீபத்திய அதிகரிப்பு விவசாயிகளுக்கு பெரும் ஊக்கமாக உள்ளது. அதிகரித்துள்ள ஏற்றுமதிகள், விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை, உலக அளவில் விற்பனை செய்வதற்கான அதிக வாய்ப்புகளை சுட்டிக் காட்டுகிறது. இது சாத்தியமான விலை உயர்வு மற்றும் வருமானத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. B2B கண்காட்சிகள் மற்றும் புவியியல் குறிப்புகளின் மூலம், பல்வேறு நாடுகளில் இந்திய விவசாயப் பொருள்களை மேம்படுத்த APEDA இன் முயற்சிகள், விவசாயிகளுக்கு புதிய சந்தைகளைத் திறந்து, அவர்களின் தயாரிப்புகளை விற்பதற்கு இன்னும் அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன. ஒட்டுமொத்தமாக, இது இந்திய விவசாயிகளுக்கு மிகவும் சாதகமான முடிவாகும்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024