உலக மீன் உற்பத்தியில் இந்தியா 8% பங்களிப்போடு, உலகின் 3வது அதிக மீன் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. மீன்பிடித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ‘சாகர் பரிக்ரமா‘ என்னும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்திய
சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் விழாவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. சாகர் பரிக்ரமாவின் மூன்றாம் கட்டம் 2023 பிப்ரவரி 19 முதல் 21 வரை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்றது.
இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத் துறை சாகர் பரிக்ரமா திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது, மீனவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் பல்வேறு மீன்பிடித் திட்டங்கள் மூலம் மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டை எளிதாக்குவதாகும்.
இந்த நிகழ்வு மீனவர்கள், மீனவ சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் அவர்களுக்கு நேரிடும் பிரச்னைகளை எடுத்துரைக்க அமைத்த ஒரு தலமாக இருந்தது. இதில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், குஜராத் அரசு, மகாராஷ்டிரா அரசு, இந்திய மீன்வள ஆய்வு, இந்திய கடலோரக் காவல்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம், கிசான் கடன் அட்டைகள் & மாநில திட்டம் தொடர்பான சான்றிதழ்கள் கடலோர மற்றும் பிற பகுதி மீனவர்களுக்கும், மீன் வளர்ப்பவர்களுக்கும், இளம் மீன்பிடித் தொழில்முனைவோர்களுக்கும் வழங்கப்பட்டன.
இந்த சாகர் பரிக்ரமாவின் மூன்றாம் கட்டத்தில் 20000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியானது யூடியூப், முகநூல் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மீனவ மக்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தவும், அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும், கடலோர பகுதிகள் தொடர்பான பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும் இந்த திட்டம் உதவியது.
பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…
அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…