நபார்டு வங்கியுடன் இணைந்து இந்திய அரசு அக்ரி கிளீனிக்ஸ் மற்றும் அக்ரி பிஸ்னஸ் என்ற மெகா திட்டத்தை 2002-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய வேலையில்லா இளைஞர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி, தொழில் தொடங்க மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்குச் சேவை வழங்க வேண்டும் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகும்.
தேசிய இளைஞர்கள் தின கொண்டாட்டத்தில் அக்ரி கிளீனிக்ஸ் மற்றும் அக்ரி பிஸ்னஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற வேளான் தொழில் முனைவோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நாடு முழுவதிலிருந்தும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள், ICAR விஞ்ஞானிகள், வங்கி நிறுவனங்கள் மற்றும் தனியார்த் துறை நிறுவனங்கள் பங்கேற்றனர். வேளாண் தொழில் முனைவோர் RKVY-RAFTAAR மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு நிதி மற்றும் இந்தத் திட்டங்களின் கீழ் உள்ள பிற வாய்ப்புகள் போன்றவற்றை இதில் அறிந்து கொண்டனர்.
நாடு முழுவதிலிருந்தும் 850-க்கும் மேற்பட்ட வேளாண் தொழில்முனைவோர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் RKVY-RAFTAAR மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டங்களின் கொள்கை முடிவுகள், அண்மை மாற்றங்கள், மானியங்கள் கடன் திட்டங்கள் என முக்கிய விவரங்களைப் பகிரப்பட்டன.
முக்கிய குறிப்புகள்:
இந்த விருது வழங்கும் விழா, வேளாண் தொழில் முனைவோர்களின் கடின உழைப்பிற்கும், சாதனைக்கும் மரியாதை செய்யும் வகையில் நடைபெற்றது. கிராமப்புறங்களில் சுய வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவதே அக்ரி கிளீனிக்ஸ் மற்றும் அக்ரி பிஸ்னஸ் திட்டத்தின் நோக்கமாகும்.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…