வேளாண் துறையில் பெண்களைத் தொழில் முனைவோர் ஆவதை ஊக்குவிக்கச் சிறந்த வாய்ப்புகள்!
இந்திய அரசின், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்துடன் (MANAGE) இணைந்து, ஒரு நாள் நிகழ்ச்சியாக ‘விவசாயப் பெண்களுக்கான வேளாண் தொழில் முனைவோர் மற்றும் கண்காட்சி குறித்த விழிப்புணர்வு’ PAMETI, லூதியானா, PAU வளாகத்தில் நடத்தியது.
விவசாயப் பெண்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் உள்ள தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவர்களின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு, டிஜிட்டல் மீடியாவைப் பயன்படுத்துதல் போன்றவை முக்கியக் குறிக்கோள்களாக இருந்தது.
மேலும் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட G20 நிகழ்வுகளின் மேலோட்டத்தையும் வழங்கினார்.
இது பெண் தொழில்முனைவோர்களுக்கு அவர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை செயலாக்க அலகுகளை நிறுவுவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பெரிதும் உதவும்.
விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் தொழில் முனைவோர் வாய்ப்புகள் குறித்தும், டிஜிட்டல் மீடியாவைப் பயன்படுத்துவதையும், விவசாயப் பெண்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட “விவசாயப் பெண்களுக்கான வேளாண் தொழில் முனைவோர் மற்றும் கண்காட்சி பற்றிய விழிப்புணர்வு” அவர்களின் தொழில்களை ஊக்குவிக்க, ஒரு பாராட்டுக்குரிய முயற்சியாகும்.
பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண் விவசாயத் தொழில் முனைவோர், இந்த நிகழ்ச்சி மூலம் ஒன்றிணைத்து, தங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்திகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு அரசாங்கத் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…