News

2022-23 ஆம் ஆண்டில் பருத்தி ஏற்றுமதி 40 லட்சம் பேல்களை எட்டும்!

  • மக்களவையில் பருத்தி ஏற்றுமதி குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திருமதி. தர்ஷனா ஜர்தோஷ் அவர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2022-23ல் பருத்தி ஏற்றுமதி 40 லட்சம் பேல்களாக இருக்கும். பருத்தியின் கிடைக்கும் தன்மை, உலகளாவிய தேவை மற்றும் விலை சமநிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபாடுகள் இருக்கலாம். இந்தியாவில், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்கள் பருத்தி உற்பத்தியில் 65% பங்கைக் கொண்டுள்ளன.
  • பருத்தி ஏற்றுமதியினைப் போலவே சணல் மற்றும் மேஸ்தா போன்றவையும் உயர்ந்து காணப்படுகின்றன. சணல் மற்றும் மெஸ்டா உற்பத்தி தொடர்பான 5 ஆண்டு தரவு கீழே உள்ளது.
ஆண்டு 2018-19 2019-20 2020-21 2021-22 2022-23
அளவு (லட்சம் பேல்கள்) 72 68 60 90 95

 (ஆதாரம்: சணல் ஆலோசனை வாரியம் / சணல் நிபுணர் குழு)

எதிர்பார்ப்புகளை அடைய பின்வரும் உத்திகளை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

  • சணல் பேக்கேஜிங்கின் தொடர்ச்சி, சட்டம் 1987. (பொருட்களின் மேல் உறையிடுவதில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவது)
  • சணல் துறையின் முன்னேற்றம் மற்றும் ஊக்குவிப்புக்காக, தேசிய சணல் மேம்பாட்டுத் திட்டத்தை (NJDP) செயல்படுத்துதல்.
  • சணல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆதரவாக குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அறிவிப்பு.
  • விவசாயிகளை மோசடி நடவடிக்கைகளில் இருந்து தடுக்க, ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அவர்களிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் சணல் கொள்முதல் செய்கிறது.
  • சணல் ஆலைகளின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 26 லட்சம் பேல்களில் இருந்து 28 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு அதிக அளவில் உணவு தானியங்களை சேகரிப்பதால், பேக்கிங் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025