BigHaat Public Notice

பிக்ஹாட் அக்ரோ பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தால் பொது நலன் கருதி வெளியிடப்படுகிறது.

பொது அறிவிப்பு

எச்சரிக்கை

வணக்கம், பிக்ஹாட் மூலமாக இந்தியா முழுவதிலிருந்தும் எங்கு இருந்தும் எப்போதும் உயர்தரமான வேளாண் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும். எங்களுக்கு எந்த ஒரு நேரடி விற்பனை நிலையங்களும் கடைகளும் கிடையாது. மேலும் நாங்கள் எந்த சில்லறை விற்பனையைங்களையும் ஊக்குவிப்பதில்லை. எங்களிடம் பிக்ஹாட் இணையதளம் அல்லது ஆப் மூலமாக மட்டுமே வேளாண் பொருட்களை ஆர்டர் செய்ய முடியும். நீங்கள் ஆர்டர் செய்யும் வேளாண் பொருட்கள் நேரடியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கே டோர் டெலிவரி செய்யப்படும்.

சில அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் பிக்ஹாட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாகக் கூறி, சில்லறை விற்பனைக் கடைகள் அல்லது சந்தைகளில் எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதாக எங்களுக்குத் தகவல்கள் வந்தன. அவற்றை நம்ப வேண்டாம். இவை மோசடியான செயற்பாடுகள். எனவே, கவனமாக இருக்குமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். அத்தகைய பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.

பிக்ஹாட்-ல் இருந்து ஏதேனும் தயாரிப்பு அல்லது சேவையை நீங்கள் வாங்க விரும்பினால், தயவுசெய்து எங்கள் www.bighaat.com or இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

உங்கள் நம்பிக்கையையும் ஆதரவையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். மலிவு விலையில் சிறந்த தரமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவைகளை உங்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். விவசாயம் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் தகவல்களுக்கு பிக்ஹாட் சேவையைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.