HomeCropஇயற்கை பூண்டு சாகுபடி

இயற்கை பூண்டு சாகுபடி

பூண்டின் அறிவியல் பெயர் அல்லியம் சாடிவம், வெங்காயத்திற்கு அடுத்தபடியாக பூண்டு உலகளவில் அதிகம் பயிரிடப்படும் அல்லியம் குடும்ப பயிராகும். இது வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து உருவானது. பூண்டை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு சீனா.

பூண்டு உணவுகள், மருந்துகள் மற்றும் வைத்தியம் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் உடலியல் கோளாறுகளில் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

  • ஈரப்பதம் முதல் சராசரி வெப்பநிலை வரையிலான காலநிலை பூண்டு செடிகளுக்கு ஏற்றது. 
  • இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நன்கு வடிகட்டிய மண்ணின் கலவையில் நன்கு செழிப்பாக வளரும். 
  • பொதுவாக, பூண்டு செடிகளுக்கு சரியான வளர்ச்சிக்கு குறைந்தபட்சம் ஒரு அங்குல நீர் தேவைப்படுகிறது.

நிலம் தயாரித்தல்

  • பூண்டு சாகுபடிக்கு ஊட்டச்சத்துக்கள், நன்கு வடிகட்டிய மற்றும் நடுநிலை மண் கலவை தேவைப்படுகிறது. 
  • மண்புழு உரம், தொழு உரம், உயிர் உரம் உள்ளிட்ட கரிமப் பொருட்களை சரியான அளவில் மண்ணில் இடவேண்டும்.
  • பச்சை மற்றும் கருப்பு பிளாஸ்டிக் மூடாக்கு  ஈரப்பதத்தை பராமரிக்கவும் மற்றும் மண்ணின் வெப்பநிலையை அதிகரிக்கவும்  சிறந்தது.

நடவு மற்றும் பூண்டு வளர்ப்பு

  • பூண்டு வளர்ப்பது மிகவும் எளிதானது, பொதுவாக ஒரு சூடான மற்றும் வறண்ட கோடையுடன் கூடிய குளிர்ந்த காலநிலை சிறந்தது.
  • நடவு செய்யும் போது, ​​​​தலைகளை தனித்தனி கிராம்புகளாகப் பிரிக்க வேண்டும், பிறகு இவை நல்ல மகசூலை கொடுக்க அவற்றுக்கிடையே சிறிது இடைவெளியுடன் நடப்படுகின்றன.
  • நீங்கள் பூண்டு நடவிற்காக  தலையை பிரிக்கும்போது, மெல்லிய அடித்தள அடுக்கை சேதப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அங்கு வேர்கள் வெளிப்பட்டு வளரும்.
  • கிராம்புகளை நீங்கள் விரும்பும் அளவுக்கு மேலோட்டமாகவோ அல்லது ஆழமாகவோ நடவு செய்யலாம், இருப்பினும், தரை மட்டத்திலிருந்து 2 முதல் 3 செ.மீ கீழே இருக்குமாறு நடவு செய்வது சிறந்ததாகும்.

உரமேலாண்மை

இயற்கை உரங்கள்

  • கரிம உரங்கள் பூண்டு செடியை பராமரித்து பயிரின் தரத்தை உயர்த்துகின்றன. வேப்பஎண்ணெய், எலும்பு மாவு, ராக் பாஸ்பேட், மட்டி உரம் மற்றும் கடல் பாசி ஆகியவை சில கரிம உரங்கள். 
  • கூடுதலாக கரிம உரம் ஒவ்வொரு 2 முதல் 3 வாரங்களுக்கு ஒருமுறை பூண்டு செடிகளின் பக்கவாட்டில் கொடுக்கலாம். மேலும் கரிம உரத்தை தண்ணீரில் கரைத்தோ, சொட்டு நீர் பாசன முறையிலோ அல்லது தெளிப்பானாகவோ பயன்படுத்தலாம்.

வளர்ச்சி ஊக்கிகள்

  1. மண் புழு உரத்தை 10 கிராம்/ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை தெளிக்க வேண்டும்
  2. மாட்டு சாணக்குழிக்குப்பையை 5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து 300 லிட்டர் நீரில் கரைத்து, விதைத்த 45,60,75 வது நாளுக்கு பிறகு தெளிக்க வேண்டும்
  3. மஞ்சூரியன்தேயிலை சாற்றை (5%) விதைத்து ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்

நீர் பாசனம்

பூண்டு சாகுபடி நீர் பாசனம் மற்றும் மானாவாரியாகவும், செய்யப்படுகிறது. 

நீர்ப்பாசன சாகுபடியில் தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் நீர் பாய்ச்சவேண்டும்.

களைக்கட்டுப்பாடு

கலைகளை கட்டுப்படுத்த ஆட்கள் கொண்டு கலைகளை அகற்ற வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

இலைப்பேன்

  • வேப்பஎண்ணெய் 30 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து  தெளிக்க வேண்டும்
  • 10% வேப்பங்கொட்டை சாற்றை பயிரிட்ட 45,60,75வது நாட்களில் தெளிக்க வேண்டும்

வெள்ளை வண்டுகள்

  • கோடையில் நிலத்தை உழுவதனால் வெள்ளை வண்டுகளை  கட்டுப்படுத்தலாம்.
  • விளக்கு பொறிகளை வைத்து வண்டுகளை கவர்ந்து அளிக்கலாம்.

நோய்கள்

கருகல் நோய் மற்றும் மண் வழியே பரவும் நோய்கள்

  • டிரைக்கோடெர்மா விரிடி என்ற மருந்தை 30 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.
  • சூடோமோனஸ் ப்ளோராஸ்சென்ஸ் என்ற மருந்தை 30 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

அறுவடை

  • பூண்டு செடியிலுள்ள இலைகள் காய்ந்து போகும் நிலையில் அறுவடை செய்யலாம்.
  • செடியின் இலைகள் மற்றும் வேர்களை வெட்டவேண்டும். பிறகு பூண்டுகளை சூரிய ஒளியில் உலர்த்தி சேமிக்கலாம்.

 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்