விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களின் விலை குறைவாக உள்ள போது அவற்றை விற்று நட்டம் அடையாமல், அவற்றை சேமித்து வைத்து, அதிக விலை வரும் போது விற்று லாபம் பார்க்க எஸ்பிஐ வங்கியும் தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து கடன் (Produce Marketing Loan) வழங்குகின்றன.
இந்த கடன் திட்டம் கீழ் விவசாயிகள் தங்களது விளை பொருட்களைச் சேமிப்பு கிடங்கில் வைத்த பிறகு, அவர்கள் வழங்கும் இ-ரசீதை வைத்துக் கடன் வழங்கப்படும். பின்னர் விளைப்பொருட்கள் விலை உயரும் போது அதனை விற்றுவிட்டு கடனை அடைக்கலாம். மேலும் குறைந்த வட்டி விகிதத்தில் இந்த கடன் வழங்கப்படும். அங்கீகாரம் பெற்ற / அங்கீகாரம் பெறாத சேமிப்பு கிடங்கு என இரண்டிலும் விளைப்பொருட்களைச் சேமித்து வைத்து கடன் பெற முடியும்.
தகுதி?
இந்த கடன் திட்டத்திற்குத் தனிநபர் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் குழுக்களாகவும் இணைந்து பயனடைய முடியும்.
கால அளவு?
அதிகபட்சம் 12 மாதங்கள் வரை சேமிப்பு கிடங்குகளில் விளை பொருட்களைச் சேமித்து வைத்து அதிக விலை உயரும் போது அவற்றை விற்று கடனை அடைக்கலாம்.
கடன் எப்படிக் கணக்கிட்டு வழங்கப்படும்?
அடகு வைக்கப்பட்ட பண்டத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில், குறைந்தபட்ச ஆதரவு விலை கடனாக வழங்கப்படும்.
- குறைந்தபட்ச ஆதரவு விலை, எங்கு அறிவிக்கப்பட்டாலும் அல்லது
- தற்போதைய சந்தை விலை அல்லது
- அங்கீகாரம் பெற்ற / அங்கீகாரம் பெறாத சேமிப்பு கிடங்கில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பு).
வரம்பு = (அளவு × மதிப்பீடு) – மார்ஜின்.
அதிகபட்ச கடன் எவ்வளவு வரை கிடைக்கும்?
- அங்கீகாரம் பெற்ற சேமிப்பு கிடங்குகளில் விளைப் பொருட்களைச் சேமித்து வைக்கும் போது 75 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
- அதுவே அங்கீகாரம் பெறாத சேமிப்பு கிடங்கு எனில் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும்.
மார்ஜின் எவ்வளவு?
மார்ஜின் 25-40 சதவிகிதமாக இருக்கும். (இது விளை பொருட்களைச் சேமித்து வைத்து இருக்கும் கிடங்கின் வகையை பொருத்து மாறும்)
கடனை திருப்பி செலுத்தக் காலக்கெடு எவ்வளவு?
விளைப்பொருட்களின் சேமிப்பு காலம் அல்லது அங்கீகாரம் பெற்ற / அங்கீகாரம் பெறாத சேமிப்பு கிடங்கில் பொருட்களை வைத்த 12 மதங்களுக்குள் விற்று பணத்தைத் திருப்பி செலுத்த வேண்டும்.
பிணை வேண்டுமா?
வங்கிகளால் அங்கிகாரம் பெற்ற சேமிப்பு கிடங்கில் விளைப் பொருட்களைச் சேமித்து வைக்கும் போது பிணை ஏதும் தேவையில்லை. அதுவே அங்கீகாரம் பெறாத சேமிப்பு கிடங்குகள் என்றால் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெறும் போது நிலத்தின் ஆவணங்களைப் பிணையாக அளிக்க வேண்டி வரும்.
தேவையான ஆவணங்கள்
1) விண்ணப்பப் படிவம் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2) அடையாள ஆவணம் & முகவரி ஆவணம்
3) சேமிப்பு கிடங்கு இ-சான்றிதழ்
4) நிலம் விவரங்கள்
5) பிணைக்கான ஆவணங்கள்
6) பிற தேவையான ஆவணங்கள்
வட்டி விகிதம் எவ்வளவு?
1) அங்கிகாரம் பெற்ற சேமிப்பு கிடங்குகளில் விளை பொருட்களைச் சேமித்து வைத்த பிறகு 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற 7 சதவிகித வட்டி விகிதம் ஆகும். (சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டும் 6 மாதங்கள் வரை மானியம் உண்டு)
2) 3 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் கடன் பெற MCLR + 0.80 சதவிகிதம் வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
3) வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட இணை மேலாளர்களால் வழங்கப்பட்ட சேமிப்பு கிடங்குகள்: 1 வருடம்/ 6 மாதங்கள் MCLR + 2.90% வட்டி விகிதம்.
4) பிற சேமிப்புக் கிடங்குகளுக்கு ஒரு வருட MCLR + 3.60% வட்டி விகிதம்.