மாம்பழம் (மாஞ்சிஃபெரா இண்டிகா) இந்தியாவின் மிக முக்கியமான வெப்பமண்டல பழங்களில் ஒன்றாகும். 2022 ஆம் ஆண்டில் சுமார் 21 மில்லியன் மெட்ரிக் டன்கள் மாம்பழங்களை உற்பத்தி செய்து, உலகிலேயே மாம்பழத்தில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கின்றது. மாமரத்தில் பூ பிடிக்கும் நிகழ்வு ஒரு முக்கியமான கட்டமாகும். ஏனெனில், இது பழத்தின் விளைச்சலை நேரடியாக பாதிக்கிறது. எனவே, மாம்பழம் பூக்கும் கட்டத்தில் எடுக்கப்படும் முறையான மேலாண்மை உத்திகள் காய் உற்பத்தியின் சாத்தியமான எண்ணிக்கையை மேம்படுத்தலாம்.
மா மலர் துவக்கம்
மா மரங்கள் பொதுவாக 5-8 வருட வளர்ச்சிக்குப் பிறகு அவை முதிர்ச்சி அடையும் போது பூக்கத் தொடங்கும். மாம்பழம் பூக்கும் காலம் பொதுவாக டிசம்பர் – பிப்ரவரி மாதத்தில் தொடங்கும். எனினும், பூ தொடங்கும் நேரத்தைப் பொறுத்து, ஜனவரி முதல் மே வரை பழ வளர்ச்சி அமைகிறது. குளிர்ந்த வெப்பநிலையில் (15-20° C பகலிலும் மற்றும் இரவு நேரங்களில் 10-15°C) பிரகாசமான சூரிய ஒளி மாம்பழத்தின் மலர் துவக்கத்திற்கு ஒரு முக்கியமான தேவையாகும். அதிக ஈரப்பதம், பூக்கும் காலத்தில் உறைபனி அல்லது மழை போன்றவை பூக்கள் உருவாவதை பாதிக்கிறது. பூப் பூக்கும் போது மேகமூட்டமான வானிலை, மாம்பழத்தில் தத்துப்பூச்சி மற்றும் நோய்கள் பரவுவதற்கு சாதகமானது மற்றும் மாம்பழத்தின் வளர்ச்சி மற்றும் பூ பிடிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடியது.
மாம்பழத்தில் பூக்கள் எவ்வாறு பழ உற்பத்தியை பாதிக்கிறது?
மாம்பழத்தின் பூக்கள் சிறியவை, மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில், கிளைகளில் இருந்து கீழே தொங்கும் பேனிகல்களில் ஒன்றாக கொத்தாக இருக்கும். இவை ஹெர்மாஃப்ரோடைட் பூக்கள் வகையைச் சார்ந்தது. இருப்பினும் அயல் மகரந்தச் சேர்க்கை மூலமே அதிகபட்ச பழங்கள் அமைக்க பங்களிக்கிறது. பொதுவான மகரந்தச் சேர்க்கைகளில் தேனீக்கள், குளவிகள், அந்துப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், ஈக்கள், வண்டுகள் மற்றும் எறும்புகள் போன்ற காரணங்கள் அடங்கும்.
உற்பத்தி செய்யப்படும் பூக்களின் எண்ணிக்கை மற்றும் பூக்கும் நிலையின் மொத்த காலம் அளவு ஆகியவை பழங்களின் விளைச்சலை நேரடியாக பாதிக்கும். இருப்பினும், பூ பிடிப்பது என்பது, வெப்பநிலை, ஈரப்பதம், சூரிய ஒளி, பூச்சி மற்றும் நோய் பாதிப்பு மற்றும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்ற பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. இந்த காரணிகள் பூக்கும் நேரம் மற்றும் அதன் தீவிரத்தை பாதிக்கிறது. பூக்கும் கட்டத்தில் மேலே உள்ள காரணிகள் உகந்ததாக இல்லாவிட்டால், அது குறைவான அல்லது சிறிய பழங்களை விளைவிக்கும். அதோடு விளைவிக்கப்படும் அனைத்து பூக்களும் காய்க்காது. போதுமான மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகும், காலநிலை மற்றும் பூச்சித் தாக்குதல்கள் போன்ற பல காரணிகளால் பூக்கள் மற்றும் பழங்கள் பெருமளவில் வீழ்ச்சியடைவதால், ஒரு சில விகிதாச்சார மலர்கள் மட்டுமே பழங்களை அமைக்கும். அவை முழுமையாக வளர சரியான மகரந்தச் சேர்க்கை அவசியம். இது இறுதியில் பழங்களின் மகசூல் மற்றும் தரத்தை பாதிக்கிறது. பூக்கும் நேரம், காலம் மற்றும் தீவிரம் ஆகியவை மா மரங்களில் பழ உற்பத்தியை கணிசமாக பாதிக்கும்.
மாம்பழத்தில் விளைச்சலை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பதை பூக்கும் முறையை திறம்பட நிர்வகிப்பதன் மூலம் அடையலாம். அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்:
1. ஊடுதள செயல்பாடு: மா மரங்களில் கவாத்து செய்வது பூக்களை தூண்டும். சரியான முறையில் கவாத்து செய்யாமல் இருப்பதால், மாமரத்தின் தண்டு பகுதி (விதானம்) அடர்த்தியாக வளர்ந்து, மரத்தின் உட்புறப் பகுதிகளில் ஒளி ஊடுருவுவதைத் தடுக்கிறது. இதனால் பூக்கும் திறன் மற்றும் மகசூல் குறைகிறது. தளிர்களின் நுனிகளைக் கத்தரிப்பது பூக்கள் பிடிப்பதற்கு உதவுகிறது. கவாத்து செய்வதற்கு சிறந்த நேரம் அறுவடைக்குப் பிறகு, வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் செய்யப்படுகிறது. முனை கத்தரித்தல், கடைசி இடைக்கணுவிற்கு மேலே 10 செ.மீ உயரத்தில் செய்யப்பட வேண்டும். இது பூக்கும் தன்மையை மேம்படுத்தலாம்.
மாமரத்தில் மொட்டு உருவாக்கத்திற்கு, மா மரத்தின் தண்டிலிருந்து பட்டையை அகற்றுவதை உள்ளடக்கியது. இது பூக்கள், காய்கள் மற்றும் காய்களின் அளவை அதிகரிக்கிறது. இது இலைகளில் வளர்சிதை மாற்றத்தின் மூலம், மேலே உள்ள பகுதிகளில் சேகரித்து வைத்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தாவர ஹார்மோன்களை, ஃபுளோயம் கீழ்நோக்கி இடமாற்றம் செய்வதை தடுப்பதன் மூலம் நடைபெறுகிறது. மஞ்சரி தோன்றும் போது கிரிட்லிங்(பட்டை உரிப்பது) செய்வது, பழங்களின் தொகுப்பை அதிகரிக்கிறது. கிரிட்லிங் செய்யும் போது கவனம் அவசியம். கிர்ட்லிங்கின் அதிகப்படியான கச்சை ஆழம் மரத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
2. தாவர வளர்ச்சி கட்டுப்பாட்டாளர்கள் (PGRs): தாவர வளர்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டைக் கட்டுப்படுத்தும் உடலியல் செயல்முறைகளில், திறன் செலுத்துவதன் மூலம் பூப்பதைக் கட்டுப்படுத்தவும், விளைச்சலை அதிகரிக்கவும் முடியும். இதற்கு தாவர வளர்ச்சி கட்டுப்பாட்டாளர்களைப் – PGR பயன்படுத்தலாம். பேக்ளோபுட்ரசால் என்பது மா மரங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான தாவர வளர்ச்சி சீராக்கி ஆகும். இது தாவர வளர்ச்சியை குறைக்க உதவுகிறது மற்றும் பூப்பதை ஊக்குவிக்கிறது. எத்திஃபான் மற்றும் நாப்தலின் அசிட்டிக் அமிலம்-NAA பயன்படுத்துவதன் மூலம், மேலும் பூக்களை தூண்டுகிறது, பூ மொட்டுகள் உதிர்வதை தடுக்கிறது மற்றும் பழங்கள் பழுக்க வைக்க உதவுகிறது. இவை பழங்களின் அளவை அதிகரிக்க, பழங்களின் தரத்தை மேம்படுத்த, அதிகரிக்க மற்றும் பழங்களில் விளைச்சலை அதிகரிக்க உதவுகிறது.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் | மருந்தளவு | பயன்படுத்தும் நேரம் |
கல்டார் தாவர வளர்ச்சி சீராக்கி | பேக்லோபுட்ராசோல் 23% SC | 10 வயதுக்குட்பட்ட மரங்களுக்கு 8 மி.லி தண்ணீரில் கரைக்கப்படும்.
10 வயதுக்கு மேற்பட்ட மரங்களுக்கு 16 மி.லி தண்ணீரில் கரைக்கப்படும். (இரண்டு சந்தர்ப்பங்களிலும் வேர் மண்டலத்திற்குப் பயன்படுத்தவும்.) |
பூக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பும் மற்றும் இரண்டு முறை நீர்ப்பாசனம் செய்த பின்பும் தேவைப்படலாம். |
டபோலி தாவர வளர்ச்சி சீராக்கி | பக்லோபுட்ராசோல் 40%, பக்லோபுட்ராசோல் (PBZ) | ||
எத்ரல் வளர்ச்சி சீராக்கி | எத்திஃபான் 39% SL | ஃபோலியார்: 1-2.5 மில்லி/லிட்டர் தண்ணீர் | முதலில் அக்டோபர் நடுப்பகுதியில் அல்லது நவம்பர் தொடக்கத்தில் இரண்டு வார இடைவெளியில் மொத்தம் 5 முறை தெளிக்கவும் (மாற்றி மாற்றி காப்பு பிடிக்கும் திறனை உடைக்க).
நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாராந்திர இடைவெளியில் மொத்தம் 5 ஸ்ப்ரேக்கள் (பூக்கத் தூண்டுவதற்காக) |
காத்யாயனி NAA | ஆல்பா நாப்தில் அசிட்டிக் அமிலம் 4.5% SL | ஃபோலியார்: 0.2-0.3 மில்லி/லிட்டர் தண்ணீர் | பிஞ்சு காய்கள் பட்டாணி அளவு இருக்கும் போது தெளிக்கவும். |
(குறிப்பு: தாவர வளர்ச்சி சீராக்கி- PGRகள் தாவர வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும். அதாவது அதிகப்படியான கிளைகள், பழங்களின் அளவு குறைதல் அல்லது தாமதமாக பூக்கும் திறனை ஊக்கப்படுத்துவது போன்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்துவதற்கு முன் மருந்தளவு மற்றும் பயன்பாட்டின் நேரத்தைச் சரிபார்க்கவும்.)
3. ஊட்டச்சத்து மேலாண்மை: மா மரங்களில் பூக்களை தூண்டுவதில் ஊட்டச்சத்து மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. தாவரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்க்கு நைட்ரஜன் (தழைச்சத்து) சத்து மிகவும் அவசியம். இருப்பினும், அதிகப்படியான நைட்ரஜன் (தழைச்சத்து) பூக்கும் தொடக்கத்திற்கு பதிலாக, தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், மாமரம் பூப்பதைத் தாமதப்படுத்தும். இது பூப்பதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களான P – மணிச்சத்து மற்றும் K – சாம்பல் சத்து போன்ற பிற ஊட்டச்சத்துக்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம். நைட்ரஜனை அதிகமாகப் பயன்படுத்துவதால், தாவர வளர்ச்சி அமோகமாக அதிகரிக்கிறது. எனவே, இது பூச்சித் தாக்குதலை ஏற்படுத்துகிறது. பூக்கும் திறனை நிர்வகிக்க, N – தழைச்சத்தின் உகந்த அளவு பயன்படுத்தப்பட வேண்டும்.
மா மரங்களில் பூ ஆரம்பிப்பதற்கும், பழங்கள் அமைப்பதற்கும் P – மணிச்சத்து இன்றியமையாதது. பூ பிடிக்கும் திறனை அதிகரிக்க, பூக்கும் முன், மணிச்சத்து உரத்தைப் பயன்படுத்துங்கள். உகந்த சாம்பல் சத்து – பொட்டாசியம்(K), மாமரங்களில் பூ பிடிக்கும் திறனை அதிகரிப்பதோடு பூக்களின் எண்ணிக்கையும், பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. பொட்டாசியம் (சாம்பல்சத்து) பழத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீரை கொண்டு செல்ல உதவுகிறது. இது பழத்தின் வளர்ச்சி மற்றும் சரியான அளவுக்கு அவசியம். இது ஈரப்பத அழுத்தம், வெப்ப உறைபனி மற்றும் நோய்களுக்கு எதிராக தாவரங்களில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
நுண்ணூட்டச் சத்துக்களைப் பயன்படுத்துவது பூக்கும் தன்மையை மேம்படுத்துதல், பழங்களின் தரம் மற்றும் பழங்கள் உதிர்வதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறந்த முடிவுகளைத் தருகிறது.
விண்ணப்பிக்கும் நேரம்: 25-30 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை, பூ பிடிக்க தொடங்கிய நாளிலிருந்து தெளிக்க வேண்டும்.
பொருளின் பெயர் | ஊட்டச்சத்து | மருந்தளவு | அம்சங்கள் |
ஷாம்ராக் ஓவர்சீஸ் லிமிடெட் NPK 13:00:45 | பொட்டாசியம் நைட்ரேட்- KNO3 | ஃபோலியார்: 5 கிராம் / லிட்டர் |
|
மல்டிபிளக்ஸ் மல்டிமேக்ஸ் | Zn, Mn, Fe, Cu, B, Mo ஆகியவற்றின் கலவை | ஃபோலியார்: 3 கிராம் / லிட்டர்
உரப்பாசனம் – ஃபெர்ட்டிகேசன்: 10-15 கிராம் / லிட்டர் தண்ணீர் |
|
மல்டிபிளக்ஸ் சமக் அல்லது | கால்சியம் மற்றும் போரான் | ஃபோலியார்: 3 கிராம் / லிட்டர் | மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது, பூக்கள் மற்றும் பழங்களின் அமைப்பை மேம்படுத்துகிறது.
இதன் விளைவாக தரமான விளைச்சல் மற்றும் அதிக மகசூல் கிடைக்கும். |
கிரீன் கால்போ நுண்ணூட்டச் சத்து | ஃபோலியார்: 2 மில்லி / லிட்டர் | பூ மற்றும் பழ அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் பழங்கள் உதிர்வதை தடுக்கிறது. | |
மல்டிபிளக்ஸ் மல்டி மேக் | மெக்னீசியம் | ஃபோலியார்: 3 – 4 கிராம் / லிட்டர் | குளோரோபில் அதிக தொகுப்புக்கு உதவுகிறது. இது விளைச்சலை அதிகரிக்கிறது. |
அன்ஷுல் மேக்ஸ்போர் (அல்லது) | போரான் | ஃபோலியார்: 1 கிராம் / லிட்டர் | பூக்கள் உதிர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. |
ஆல்போர் போரான் 20% | |||
அன்சுல் பால்மாக்ஸ் | உயிரி கரிம பொருட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் | ஃபோலியார்: 2 மில்லி / லிட்டர் | பூ பிடிக்கும் திறன் மற்றும் பழங்கள் காய்ப்பதை அதிகரிக்கிறது. |
பயோபிரைம் ப்ரைம் வெர்டன்ட் | தாவர சாறு 12% மற்றும் தண்ணீர் 88% | தெளிப்பு/மண்ணில் இடுதல்: 5-8 மில்லி/லிட்டர் தண்ணீர் | பூ மற்றும் பழங்கள் உதிர்வதை குறைக்கிறது, காய் பிடிக்கும் திறனை அதிகரிக்கிறது.
காலநிலை மாற்றங்களுக்கு தாங்கும் திறனை கொடுக்கிறது மற்றும் பூ அல்லது பழங்கள் உதிர்வதைத் தடுக்கிறது. |
4. பூச்சி மற்றும் நோய் மேலாண்மை: பூக்கள் மற்றும் காய்கள் உருவாகும் போது, பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இது பூக்கள் மற்றும் முதிர்ச்சி அடையாத பழங்களை இழக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும். மா தத்துப்பூச்சி, பூ கட்டிகள் அல்லது மிட்ஜ், மாவு பூச்சி மற்றும் இலை பிணைப்புப்புழு ஆகியவை மா பூக்களை தாக்கும் முக்கிய பூச்சிகள். மா சாம்பல் நோய், மா உருக்குலைவு நோய் மற்றும் ஆந்த்ராக்னோஸ் ஆகியவை மா பூக்களை பாதிக்கும் நோய்களாகும். இதனால் பழங்களின் வளர்ச்சி குறைக்கப்படும்.
மா பூக்களில் உள்ள பூச்சிகள் மற்றும் நோய்களின் அறிகுறிகளையும் மேலாண்மையையும் சரிபார்த்து, பழ விளைச்சலை அதிகரிக்கவும் – இங்கே கிளிக் செய்யவும் (மா பூக்களில் நோய்கள் மற்றும் பூச்சி மேலாண்மை)
5. மகரந்தச் சேர்க்கை: மாம்பழம் ஒரே பூவில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை உற்பத்தி செய்யும் ஹெர்மாப்ராடெட் பூ வகையைச் சேர்ந்தது. எனினும், மா பூக்கள் ஒப்பீட்டளவில் சிறியவை மற்றும் இவை அதிக அளவு தேன் அல்லது மகரந்தத்தை உற்பத்தி செய்யாது. எனவே, அவை ஈக்கள், குளவிகள் மற்றும் பிற பூச்சிகள் போன்ற மகரந்தச் சேர்க்கை முகவர்களை பெரிதும் சார்ந்து உள்ளன. மகரந்தச் சேர்க்கை இல்லாமல், மா மலர்கள் பழங்களை உற்பத்தி செய்யாமல் போகலாம் அல்லது பழங்கள் சிறியதாக இருக்கலாம் அல்லது வடிவம் மாறி காணப்படலாம். அயல் மகரந்தச் சேர்க்கை மாம்பழத்தில் விளைச்சலை அதிகரிக்கிறது. மிக முக்கியமாக பூஞ்சைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளை முழு பூக்கும் நிலையில் பயன்படுத்த கூடாது. ஏனெனில், இதன் மூலம் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சி முகவர்கள் பாதிக்கப்படும். இதனால் விளைச்சல் குறையும்.
6. வானிலை நிலைமைகள்: பூக்கும் தருணத்தில் உகந்த வானிலை, வெற்றிகரமான பழங்கள் மற்றும் அதிக மகசூல் விகிதத்திற்கு வழிவகுக்கும். உதாரணமாக, அதிகப்படியான காற்றின் வேகம் பூக்கள் மற்றும் பழங்களில் அதிகப்படியான உதிர்தலை ஏற்படுத்துகிறது. எனவே, மாமரங்களுக்கு காற்று தடுப்பான்கள்/தடுப்புப் பட்டைகளை நட்டு காற்றைப் தடுப்பது அவசியம்.
7. நீர் மேலாண்மை: குறிப்பாக வளரும் பருவத்தில் மா மரங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. போதிய அளவு நீர்ப்பாசனம் இல்லாமை அல்லது அதிகப்படியான நீர்ப்பாசனம் விளைச்சலைக் குறைக்கும் மற்றும் பழங்களின் தரம் குறைவதற்கு வழிவகுக்கும். முறையான நீர் மேலாண்மை, ஈரமான சூழலில் வளரும் மரங்களுக்கு, நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதலை தடுக்க உதவும். வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையில், நீர்ப்பாசனம் ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்கும் மற்றும் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களைக் குறைக்கும். இது மாம்பழம் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான சூழலை வழங்குகிறது. அதிகப்படியான நீர்ப்பாசனம் மண்ணின் வெப்பநிலையைக் குறைக்கலாம். இது தாவர வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினைக் குறைக்கும். மறுப்புறம், போதிய நீர்ப்பாசனம் இல்லாததால், மண்ணின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இது தாவர வேர்களை சேதப்படுத்தும் மற்றும் விளைச்சல் குறைவதற்கு வழிவகுக்கும். எனவே, ஆரோக்கியமான தாவர வளர்ச்சி மற்றும் பழ உற்பத்தியை உறுதி செய்ய பயனுள்ள நீர் மேலாண்மை அவசியம்.
முடிவுரை
அதிக மகசூலுக்காக மா பூக்களை நிர்வகிப்பது என்பது தாவர வளர்ச்சியை மேம்படுத்துதல், பூச்சிகள் மற்றும் நோய்களை நிர்வகித்தல் மற்றும் பூ வளர்ச்சி & மகரந்தச் சேர்க்கைக்கான உகந்த சுற்றுச்சூழல் நிலைமைகளை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட உத்திகளின் கலவையை உள்ளடக்கியது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மேலாண்மை முறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் பூ மற்றும் பழங்களின் உற்பத்தி அதிகரிக்கும். இது விளைச்சலை அதிகரிப்பதோடு பழங்கள் நல்ல தரமாகவும் அமைய வழிவகுக்கிறது.