உங்கள் தக்காளி பழங்களின் சிதைந்த வடிவம் மற்றும் மேற்பரப்பில் வளைய புள்ளிகள் இருப்பதால் அவற்றை சந்தையில் விற்க முடியவில்லையா? அத்தகைய சூழ்நிலையின் விரக்தியை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே அதிலிருந்து உங்களை மீட்டெடுக்க நாங்கள் இந்த கட்டுரையை வழங்குகிறோம்.
இந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது மற்றும் அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் இன்னும் யோசிக்கிறீர்களா?
மேலும் இதற்கான தீர்வை தேடி அலைய வேண்டாம். எங்களிடம் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில்கள் உள்ளன. தக்காளி புள்ளிகள் கொண்ட வாடல் வைரஸ் (TOSPOW) உங்கள் தக்காளி வயலில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த நோய் தொற்றுக்கான காரணங்களை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால், முதலில் இதை எப்படி அடையாளம் காண்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக அதை சமாளிப்பதற்கான உத்திகளை கண்டுபிடியுங்கள், பின்னர் உங்களின் தேடல் இங்கே முடிவடையும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்நோயைப் பற்றிய முழுமையான உள்ளடக்கத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு உங்கள் இழப்புகளைக் குறைப்பதற்கான அறிவுடன் உங்களை தயார்படுத்துங்கள்.
தக்காளி புள்ளி வாடல் வைரஸின் அறிகுறிகள்
- அடர் பழுப்பு, வெண்கலம் அல்லது கருப்பு வட்டப் புள்ளிகள் இலைகளில் தோன்றும். சிறிய புண்களாக ஆரம்பித்து படிப்படியாக பெரியதாகும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் அல்லது வெண்கல நிறமாற்றத்தைக் காட்டலாம். இவை விளிம்புகளிலிருந்து தொடங்கி உள்நோக்கி முன்னேறும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் சிதைவு, சுருள் அல்லது சுருக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தலாம். ஆரோக்கியமான இலைகளுடன் ஒப்பிடும்போது அவை முறுக்கப்பட்ட அல்லது சிதைந்ததாக தோன்றலாம்.
- பாதிக்கப்பட்ட தாவரங்கள், போதுமான அளவு நீர் பாய்ச்சப்பட்டாலும் கூட, தொங்கிய அல்லது வாடிய தோற்றத்தை வெளிப்படுத்தலாம்.
- தண்டுகள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிற கோடுகளைக் காட்டலாம். அவை தாவரத்தின் அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதிகள் வரை நீண்டு காணப்படலாம்.
- பாதிக்கப்பட்ட தாவரங்கள் பெரும்பாலும் குன்றிய வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன மற்றும் ஒட்டுமொத்தமாக குறைந்த வீரியத்தைக் காட்டுகின்றன.
- பாதிக்கப்பட்ட பழங்களின் மேற்பரப்பில் வட்டமான அல்லது ஒழுங்கற்ற வடிவ வளையங்கள் தோன்றும். பொதுவாக சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுடன் ஒப்பிடும்போது இலகுவான அல்லது இருண்ட நிறத்துடன் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட பழங்களின் மேற்பரப்பில் ஒரு மேடான அல்லது கடினமான அமைப்பு இருக்கலாம்.
- பாதிக்கப்பட்ட பழங்கள் சிதைந்து, சீரற்ற முறையில் பழுக்கக்கூடும்.
- செடியின் ஆரம்ப நிலையிலேயே இத்தொற்றினால் பாதிக்கப்பட்டால், அது எந்தப் பலனையும் தராது. அதாவது பழங்கள் காய்க்காது.
அதற்கு என்ன காரணம்?
- தக்காளி புள்ளி மாடல் வைரஸ்- TOSPO முதன்மையாக இலைப்பேன் மூலம் பரவுகிறது. இந்த பூச்சிகள் பாதிக்கப்பட்ட தாவரங்களை உண்கின்றன மற்றும் வைரஸைப் பரப்புகின்றன. பின்னர் அவை ஆரோக்கியமான தாவரங்களை உண்ணும் போது, அதில் வைரஸை பரப்புகின்றன.
- அதிக வெப்பநிலை, குறிப்பாக 27°Cக்கு மேல், இலைப்பேன் செயல்பாடு மற்றும் வைரஸின் இரட்டிப்பாதல் நிகழ்வு மிகவும் அதிகமாக இருக்கும். உலர் நிலைகளும் இலைப்பேனின் இயக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும் மற்றும் வைரஸ் பரவலை ஊக்குவிக்கும்.
- பயிர்களுக்கு அதிக அளவு அம்மோனியா நைட்ரஜனைப் பயன்படுத்துதல்.
- பல களை இனங்களை இந்த வைரஸ் பாதிக்கலாம். இந்த களைகள் வைரஸிற்கான சேமிப்பு கிடங்காக செயல்படும் மற்றும் அருகிலுள்ள தக்காளி செடிகளுக்கு தொற்றுக்கான நிலையான ஆதாரத்தை வழங்குகின்றன.
- பாதிக்கப்பட்ட தாவரங்களுக்கு அருகாமையில் வளர்க்கப்படும் தக்காளிச் செடிகள், அவை தக்காளியாக இருந்தாலும் அல்லது பிற பாதிப்புக்குள்ளான புரவலர்களாக இருந்தாலும், TOSPO நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம்.
தக்காளி புள்ளி வாடல் வைரஸ்-TOSPO வைரஸைத் தடுப்பதற்கான வழிகள்
- இவ்வைரைஸை தாங்கும் திறன் உடைய, சகிப்புத்தன்மை கொண்ட வகைகளைப் பயன்படுத்துங்கள்.
- நடவு செய்ய வைரஸ் இல்லாத நாற்றுகளை நடவு செய்ய பயன்படுத்தவும்.
- வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக, பாதிக்கப்பட்ட அனைத்து தாவரங்களையும் அகற்றி, நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் அழித்து எரிக்கவும்.
- நைட்ரஜன் உரங்களை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
- வைரஸ் மற்றும் இலைப்பேனிற்கு மாற்று புரவலர்களாக செயல்படக்கூடிய களை இனங்களை அகற்றவும். வைரஸின் சேமிப்பு தேக்கத்தை குறைக்க உங்கள் வயலில் இருந்து களைகளை தவறாமல் அகற்றவும்.
- மிளகு மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாற்று புரவலர்களுக்கு அருகில் தக்காளி செடிகளை நடுவதை தவிர்க்கவும்.
- பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அருகில் நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
- பக்கத்து வயலில் இருந்து, இலைப்பேன் தக்காளி வயலில் ஊடுருவுவதை குறைப்பதற்காக, வயலைச் சுற்றி 2-3 வரிசை சோளம், மக்காச்சோளம் அல்லது கம்பை தடுப்புப் பயிராக வளர்க்கவும்.
- இலைப்பேன் எண்ணிக்கையை கண்காணிக்க ஒட்டும் பொறிகளை நிறுவவும்.
- வேப்ப எண்ணெயை (1-2 மில்லி/லிட்டர் தண்ணீர்) பயிர்களின் நாற்று நிலையிலிருந்து சீரான இடைவெளியில் தெளிக்கவும்.
- தக்காளி புள்ளி வாடல் வைரஸுக்கு தாவரத்தின் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் மற்றும் நோயின் தாக்கத்தைக் குறைக்கவும் மேக்னம் Mn (0.5 கிராம்/லிட்டர் தண்ணீர்) மற்றும் வி பைண்ட் பயோ வைரசைடு (2-3 மில்லி/லிட்டர்ll தண்ணீர்) ஆகியவற்றை இலைவழியாக தெளிக்கவும்.
வெக்டரின்/திசையன் மேலாண்மை
இலைப்பேன்
இலைப்பேன் என்ற திசையன் மூலம் வைரஸ் பரவுவதால், அவற்றைக் கட்டுப்படுத்துவது தக்காளி பயிர்களில் நோய் பரவுவதைக் குறைக்க உதவும்.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் | அளவு (ஒரு லிட்டர் தண்ணீருக்கு) |
இயந்திர மேலாண்மை | ||
தபஸ் மஞ்சள் அட்டை ஒட்டும் பொறி | ஒட்டும் பொறி | 6-8/ஏக்கர் |
உயிரியல் மேலாண்மை | ||
டெர்ரா மைட் (உயிர் பூச்சிக்கொல்லி) | மூலிகை உருவாக்கம் | 3.3-6.6 மில்லி/லிட்டர் தண்ணீர் |
ஈகோனீம் பிளஸ் உயிரி பூச்சிக்கொல்லி | அசாடிராக்டின் 3000 ppm | 2.5-3 மில்லி/லிட்டர் தண்ணீர் |
இரசாயன மேலாண்மை | ||
பெனேவியா பூச்சிக்கொல்லி | சயண்ட்ரானிலிப்ரோல் 10.26% OD | 1.5 மில்லி / லிட்டர் தண்ணீர் |
தன்பிரீத் பூச்சிக்கொல்லி | அசிடமிப்ரிட் 20% SP | 0.3 கிராம்/லிட்டர் தண்ணீர் |
கிரேசியா பூச்சிக்கொல்லி | ஃபுளுக்சாமெட்டமைடு 10% EC | 0.8 மில்லி/லிட்டர் தண்ணீர் |
டாடாமிடா SL பூச்சிக்கொல்லி | இமிடாக்ளோபிரிட் 17.8% SL | 1 மில்லி / லிட்டர் தண்ணீர் |
அரேவா பூச்சிக்கொல்லி | தியாமெதோக்சம் 25% WG | 0.4 கிராம்/லிட்டர் தண்ணீர் |
டெலிகேட் பூச்சிக்கொல்லி | ஸ்பைனெட்டோரம் 11.7% SC | 0.9 மில்லி/லிட்டர் தண்ணீர் |
கீஃபுன் பூச்சிக்கொல்லி | டோல்ஃபன்பைரேட் 15% EC | 2 மில்லி/ லிட்டர் தண்ணீர் |
ரீஜண்ட் எஸ்சி பூச்சிக்கொல்லி | ஃபிப்ரோனில் 5% SC | 1.5 மில்லி / லிட்டர் தண்ணீர் |
(குறிப்பு: பயன்படுத்துவதற்கான சரியான நேரத்தை அறிய தயாரிப்பு லேபிளில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை சரிபார்த்து பின்பற்றவும்)
மேலும், “TOSPO வைரஸ் (தக்காளி புள்ளி வாடல்) இல் இருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்” என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.