HomeCropஇஞ்சி சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் செய்வது எப்படி?

இஞ்சி சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் செய்வது எப்படி?

இந்தியா கடந்த 2021-2022 நிதி ஆண்டில் 21.20 லட்சம் டன் இஞ்சியை உற்பத்தி செய்துள்ளது. அதே வருடத்தில், இந்தியா 837.34 கோடி  மதிப்புள்ள சுமார் 1.48 லட்சம் டன் இஞ்சியை ஏற்றுமதி செய்துள்ளது. மத்திய பிரதேசம், கர்நாடகா, அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் இஞ்சி உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும். இருமல், வாந்தி, தலைச்சுற்றல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பார்வை குறைபாடு ஆகியவற்றிற்கு இஞ்சியைப் பயன்படுத்தலாம். இந்தியப் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சி செரிமானம், காய்ச்சல் மற்றும் வயிற்று நோய்களுக்கு சிகிச்சையாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

சிரம நிலை: கடினம்

விதை தேர்வு

ஒட்டு ரகம் மற்றும் ஜிஎம்ஓ வகைகளை விட நாட்டு ரகம் மற்றும் பாரம்பரிய வகைகள் அதிகமாக உள்ளன. ஐ.ஐ.எஸ்.ஆர் சுப்ரபா, சுருச்சி, சுரபி, ஹிமகிரி, சீனா, அசாம், மாறன், ஹிமாச்சல், நதியா மற்றும் ரியோ-டி-ஜெனிரோ ஆகியவை சிறந்த ரகமாகும்.

இஞ்சி விதை நேர்த்தி

இஞ்சி அதனின் விதை கிழங்கைக் கொண்டு இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இந்த விதை கிழங்கைச் சிறிது சிறிதாக வெட்டி எடுக்க வேண்டும். மேலும் அது 2.5 – 5 செ.மீ அளவில் 20-25கிராம் இடை உள்ளவாறும் இவற்றில் 2-3 முளைப்புகள் உள்ளவாறு இருக்கவேண்டும். இந்த விதை கிழங்கை 30 நிமிடம் மேன்கோசெப் 0.3% (3 கிராம்/லிட்டர் தண்ணீர்) ஊற வைத்து பிறகு இதனை நிழலில் 3-4 மணிநேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் விதை கிழங்கைப் பூஞ்சை நோய் தாக்காமல் பாதுகாக்கலாம்.

இஞ்சி நிலம் தயாரித்தல்

இஞ்சிக்கு நிலம் தயாரிப்பது நிலத்தை 3-4 முறை நன்கு உழுவது முதல் துவங்குகிறது. கடைசி உழவின்பொழுது நன்கு மக்கிய தொழு உரத்தை 25-30 டன் / ஒரு எக்டர் என்ற அளவில் இடவேண்டும். இதை தொடர்ந்து 50 செ.மீ இடைவெளியில் 30 செ.மீ உயரத்தில் 1 மீட்டர் அகலத்தில் படுக்கைகளை அமைக்கவேண்டும். மேலும் விதை கிழங்குகளை  நூற்புழு மற்றும் நோய்களுக்கு எளியமுறையில் தாக்கிவிடும். இதனைத் தடுக்க நடவு தருணத்தில் வேப்பம்புண்ணாக்கு 2 டன்/எக்டேர் என்ற அளவில் கொடுக்கவேண்டும். மாநிலங்களுக்கு மாநிலம் அடியுரமாகக் கொடுக்கப்படும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தின் அளவு மாறுபடும். பொதுவாக 100:50:50கிலோ/ எக்டேர் என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தேவைப்படும். மணி மற்றும் சாம்பல் சத்துக்களை நடவு சமயத்தில் கொடுக்கவேண்டும்.

இஞ்சி நடவுக்கு ஏற்ற மண் வகை

இஞ்சிக்குக் குறிப்பிட்ட வகையான மண் தேவைகள் தேவைப்படுகின்றன. மேலும் இஞ்சியை நடவு செய்தே மண்ணில் தொடர்ந்து நடவு செய்யக் கூடாது. மணல் களிமண், களிமண், சிவப்பு களிமண் அல்லது லேட்டரிடிக் களிமண் போன்றவற்றில் இஞ்சி நன்கு செழிப்பாக வளரும். நல்ல வடிகால் வசதி கொண்ட களிமண் சிறந்த மகசூலுக்குச் சிறந்தது.

இஞ்சி சாகுபடிக்கு ஏற்ற கார-அமிலத்தன்மை

நல்ல காற்றோட்டம் கொண்ட மண் மற்றும் 5.5-6.5 கார்-அமிலத்தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.

முடிவுரை

இஞ்சி பயிரின் தனித்தன்மையால், இதனைத் தொடர்ந்து நடவு செய்ய இயலாது. மேலும் இது நீண்ட நாட்களுக்கு வளர்க்கப்படுவதனால் இதனைச் சாகுபடி செய்வதில் சிறிய சிரமம் உள்ளது. எனினும், இஞ்சி பயிருக்கு அதிக தேவை இருப்பதால், இனத்தை மதிப்புக் கூட்டாமல் இருந்தாலும் அதிக லாபம் தரக்கூடியவை. 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 

  1. பிரபலமாக பயன்படுத்தப்படும் இஞ்சி இரகங்களைப் பரிந்துரைக்கவும்?
மாநிலம்  இஞ்சி இரகங்கள் 
மத்திய பிரதேசம்  இங் மக்ஹிர், நாடியா 
கர்நாடக  கரக்கள், சுப்ரபா, வயநாட் 
தமிழ்நாடு     ரியோ-டி-ஜெனிரோ, மாரன், நாடியா 
ஆந்திர பிரதேசம்  நர்சிப்பட்னம், சிட்டிபேட், துனி 
கேரளா  வயநாட் லோக்கல், எர்ணாட், குருப்பமடி, தொடுபுழா  
  1. இஞ்சி வேர்த்தண்டுக்கிழங்குகளுக்கு விதை நேர்த்தி செய்வது எப்படி?  

இஞ்சி வேர்த்தண்டுக்கிழங்குகள் ஒவ்வொன்றும் 20-25 கிராம் எடையுள்ள 2.5-5.0 செமீ நீள அளவில் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு. ஒவ்வொரு துண்டிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நல்ல மொட்டுகள் இருக்க வேண்டும். இந்த இஞ்சி வேர்த்தண்டுக்கிழங்குகளுக்கு மான்கோசெப் (தனுகா M45 – மான்கோசெப் 75% WP 4 – 5 gm/lit) கொண்டு 30 நிமிடங்கள் விதை நேர்த்தி செய்யப்பட்டு, 3-4 மணி நேரம் நிழலில் உலர்த்தப்பட்டு. இதன் மூலம் வேர்த்தண்டுக்கிழங்குக்களில் இருக்கக்கூடியப் பூஞ்சைத் தொற்றுக்களைத் தடுப்பதற்கு உதவும். 

(வேர்த்தண்டுக்கிழங்கு – ஒரு கிடைமட்ட தாவரத் தண்டு, மேலே தளிர்கள் மற்றும் கீழே வேர்கள் கொண்ட ஒரு இனப்பெருக்க அமைப்பாக செயல்படுகிறது.) 

 3. இஞ்சிக்கான உர பரிந்துரையின் பொதுவான அளவு என்ன?

இஞ்சிக்கான உரம் பரிந்துரை – 30:20:20 கிலோ/ஏக்கர். வயலில் பயன்படுத்த கூடிய அளவு கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊட்டச்சத்து  உரங்கள்  அளவு (ஒரு ஏக்கருக்கு) 
இயற்கை/கரிம  தொழு உரம்/உரம்    11 – 13 டன் 
வேப்பம் பிண்ணாக்கு  0.8 டன் 
தழை சத்து  யுரியா (அல்லது)  66 கிலோ 
அமோனியம் சல்பேட்  148 கிலோ 
மணி சத்து  சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (அல்லது)  126 கிலோ 
டபுள்  சூப்பர் பாஸ்பேட்  63 கிலோ 
சாம்பல் சத்து  மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (அல்லது)  34 கிலோ 
சல்பேட்  ஆஃப் பொட்டாஷ்  40 கிலோ 
ஜிங்க் 

(ஜிங்க் பற்றாக்குறை மண்) 

ஜிங்க் நுண்ணூட்ட உரம் (F3)  இலைவழி தெளிப்பு: 0.5 – 1 கிராம்/லிட்டர் 

மண்ணுக்கானப் பரிந்துரை: 10 கிலோ 

 

  1. இஞ்சி சாகுபடிக்கு ஏற்ற மண் வகை எது?

இஞ்சி மணற்பாங்கான செம்மண், களிமண் பாங்கான மண், இருபொறை செம்மண் அல்லது செம்பொறை மண் ஆகியவற்றில் சிறப்பாக வளரும். நல்ல வடிகால் வசதியும், தாவர மக்கு சத்தும் கொண்ட தூள் களிமண் சிறந்த வகை ஆகும். 

  1. எந்த மாதத்தில் இஞ்சி அதிகமாக நடப்படுகிறது?

இஞ்சி மானாவாரிப் பயிர். மழையை நம்பி சாகுபடிச் செய்யப்படுகிறது. கோடை மழைக்குப் பிறகு வரும், மே-ஜூன் மாதங்கள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. 

  1. இஞ்சி பயிரின் வாழ்நாள் அளவு என்ன?

பயிர் காலம் பொதுவாக 8 – 9 மாதங்கள் (ஏப்ரல்/மே முதல் டிசம்பர்/ஜனவரி வரை) ஆகும். 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்